Thursday, October 31, 2013

ஆரம்பம் பார்த்த விரக்தியில் அஜித் ரசிகர் தற்கொலை!



இன்று மிகப்பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகியிருக்கிறது அஜித் நடித்த ஆரம்பம் படம். நள்ளிரவில் இருந்தே திரையரங்குகளில் ரசிகர்கள் குவிய ஆரம்பித்துவிட்டார்கள். அஜித் கட்டவுட்டுக்கு பாலாபிசேகம், பட்டாசு, வானவேடிக்கையுடன் துவங்கியது ஆரம்பம் படத்தின் முதல்நாள் முதல் காட்சி. படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. கைத்தட்டி விசிலடித்து ஆட்டம் போட்டு ஆரம்பத்தை ரசித்துப் பார்க்கிறார்கள் ரசிகர்கள்.
இது ஒருபக்கம் இருக்க இன்று பேஸ்புக்கில் ஒரு செய்தி படம் கண்ணில் பட்டது. அதாவது ஆரம்பம் பார்த்த அஜித் ரசிகர் தற்கொலை என்பதுதான் அந்த செய்தி படம். மேலும் அதில் ஆரம்பம் படம் தோல்வி அடைந்த விரக்தியில் அஜித் ரசிகர் தற்கொலை என்றும் எழுதப்பட்டிருந்தது. இதைப் பார்த்ததும் அதிர்ச்சியாக இருந்தது. பொய்யான செய்திப் படங்களை இப்படி உருவாக்கி வெளியிடுகிறார்களே என்பதுதான் அதியாக காரணம்.
ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி என்று பட்டுக்கோட்டையார் அன்றே பாடிவைத்தார். ஆனால் ஆள் வளருகிற அளவுக்கு இன்று அறிவு வளராமல் போய்விடுகிறது. அதனால்தான் அறிவியலை பயன்படுத்தி இது போன்ற வேலைகளை எல்லாம் இவர்களால் பார்க்க முடிகிறது. போட்டோஷாப்பை பயன்படுத்தி இந்த படத்தில் வரும் செய்திகளை உருவாக்கியிருக்கிறார்கள். என்னே ஒரு கீழ்த்தரமான புத்தி. இதன் மூலம் இவர்கள் சாதிக்கப் போவதுதான் என்ன?

குரங்கு கையில் பூமாலை கிடைத்தது போன்று இன்று சிலரது கையில் சிக்கிக் கொண்ட பேஸ்புக்கால் இது போன்ற பொய்யான செய்திகள் உலகம் முழுவதும் எளிதில் பரவிவிடுகின்றன. இதை திட்டமிட்டு சில விஷமிகள் உருவாக்குகிறார்கள் என்றால் இதை பகிர்பவர்களாவது கொஞ்சம் யோசிக்க வேண்டும் அல்லவா? இந்த செய்தி உண்மைதானா என்று யோசித்துப் பார்க்கக் கூட நேரம் இல்லாமல் இது போன்ற பொய்ப் பிரச்சார படங்கள் பேஸ்புக்கில் சாதாரண மனிதர்களால் எளிதில் பகிரப்பட்டு விரைவில் நிறைய பேரை சென்றடைந்து விடுகின்றன. இது போன்ற கீழ்த்தரமான புத்தி உடையவர்கள் என்ன சொன்னாலும் திருந்தப் போவதில்லை. அவர்கள் தானாகத் திருந்தினால்தான் உண்டு. எனினும், பேஸ்புக் போன்றவற்றில் வரும் இது போன்ற செய்தி, படங்களை உண்மை தன்மை அறிந்து பகிரும் பழக்கத்தை அனைவரும் கடைபிடித்தால் பொய் பிரச்சார செய்திகள், படங்கள் நிறையபேரை சென்றடைவதை நம்மால் முடிந்த அளவுக்கு தடுக்க முடியும்.

Monday, October 28, 2013

என்றென்றும் புன்னகை டிரைலர் சந்தானத்தின் சர்ச்சைக்குரிய வசனம் நீக்கப்பட்டது!

சமீபத்தில் வெளியான என்றென்றும் புன்னகை படத்தின் டிரைலரில் அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒரு பெண் சந்தானத்திடம் ‘நான் அஞ்சு பத்துக்கு போகப் போறேன்…’ என்று சொல்ல அவரோ அதற்கு, ‘ஏன் அஞ்சுக்கும் பத்துக்கும் போற… ஐநூறுக்கும் ஆயிரத்துக்கும் போ…’ என்கிறார். இந்த வசனம் குறித்து மீடியாக்கள் கடுப்பாக எழுதித் தள்ள உடனே அந்த வசனத்தை நீக்கியிருக்கிறார்கள். யுடியூபில் பழைய டிரைலரை நீக்கிவிட்டு புதிய டிரைலரை வெளியிட்டிருக்கிறார்கள்.


Saturday, October 26, 2013

ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் -அருள்நிதி, பிந்துமாதவியை ஓடவிட்ட சிம்புதேவன்!



ஒரு படத்திற்கு ஒரு டீசர் டிரைலரில் ஆரம்பித்து ஐந்தாறு டீசர் மற்றும் டிரைலர்களை வெளியிட்டுவிடுகிறார்கள். சிம்பு தேவன் இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் படத்தின் முதல் டீசர் வெளியாகியுள்ளது. வெறுமனே சாலையில் ஓடும் அருள்நிதி, பிந்து மாதவி, பகவதி பெருமாள் ஆகியோரை வைத்து டீசரை தயாரித்திருப்பது சிம்புதேவனின் வித்தியாசமான முயற்சியைக் காட்டுகிறது.


சுட்டகதை விமர்சனம் -போங்கப்பா… நீங்களும் உங்க சுட்ட கதையும்…




வெளிநாடு வாழ் இந்தியரான ரவீந்தர் தமிழ் சினிமாவின் மீதுள்ள ஆர்வத்தின் காரணமாக படம் எடுப்பதற்காக சுவிஸ்ஸிலிருந்து கிளம்பி சென்னை வந்தார். முதல் வேலையாக ஆறு படங்களைத் தயாரிக்கும் முயற்சியில் இறங்கினார். அவருடைய முதல் தயாரிப்புதான் சுட்டகதை படம். இந்தப் படம் ரிலீசுக்குத் தயாரானதுமே வேந்தர் மூவிஸ் படத்தை வாங்கினார்கள். வாங்கியவர்கள் மாதக் கணக்கில் படத்தை கிடப்பில் போட்டுவிட சற்றே கோபத்துடன் தயாரிப்பாளர் ரவீந்தர் படத்தை திரும்ப வாங்கி தானே சொந்தமாக ரிலீஸ் செய்திருக்கிறார். வேந்தர் மூவீஸ் இந்தப் படத்தை 50 திரையரங்குகளில்தான் ரிலீஸ் செய்ய முடியும் என்று சொன்ன நிலையில் படத்தை 100க்கு மேற்பட்ட திரையரங்குகளில் ரிலீஸ் செய்திருக்கிறாராம் ரவீந்தர்.
மலையோர கிராமத்தின் தலைவனான கதாநாயகியின் அப்பா பறவைகளை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடிக் கொண்டிருக்கும் போது சுட்டுக் கொல்லப்படுகிறார். இந்த கொலையை செய்தது யார் என்கிற துப்புத் துலக்கும் பணியில் ஈடுபடுகிறது காவல்துறை. கொலையாளி யார் என்பதைக் கண்டு பிடித்தார்களா இல்லையா என்பது க்ளைமேக்ஸ்.
இந்தப் படத்தை தமிழ் சினிமாவில் புதிய முயற்சி, காமிக்ஸ் அடிப்படையில் அமைந்த படம் என்றெல்லாம் சொன்னார் இயக்குநர். ஆனால் படமோ காமிக்ஸ் புத்தகத்திற்கு விளம்பரம் செய்ய எடுக்கப்பட்டது போன்று இருக்கிறது.
படம் துவங்கியதிலிருந்து ரொம்ப நேரத்திற்கு கதை எதை நோக்கி பயணிக்கிறது என்பதே பிடிபடவில்லை. சிரிக்க வைக்கிறேன் என்கிற பேரில் இவர்கள் அடிக்கும் ரகளையில் ஒன்றிரண்டு இடங்களில் மட்டும் சிரித்து வைக்க முடிகிறது. மற்ற இடங்களில் எல்லாம்… நற… நற…
ஏற்கனவே சில படங்களில் இரண்டாவது கதாநாயகனாக நடித்திருக்கும் பாலாஜி இந்தப் படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இவருக்கு நண்பராக வருகிறார் வெங்கடேஷ். இருவரும் நடிப்பில் சபாஷ் போட வைத்திருக்கிறார்கள். கதாநாயகியாக நடித்திருக்கிறார் லஷ்மிப்ரியா சந்திரமௌலி. தர்மயுத்தம் டிவி தொடரில் தலை காட்டியவர் இந்தப் படத்தில் கதாநாயகியாகியிருக்கிறார். பழங்குடி இனத்தைச் சேர்ந்த ரொம்பவே வீரமான பெண் கேரக்டர் இவருக்கு. காவல்நிலையத்தில் சதா சர்வகாலமும் தூங்கி எந்திரிக்கும் ஆய்வாளராக வருகிறார் நாசர். அவரை அங்கில் என்று கூப்பிடும் போலீஸ்கார பையன் மட்டும் ஓரிரு இடங்களில் கிச்சு கிச்சு மூட்டுகிறார். ஜெயப்பிரகாஷ், லஷ்மி ராமகிருஷ்ணன், சிவாஜி ஆகியோரும் படத்தில் இருக்கிறார்கள். லஷ்மி ராமகிருஷ்ணன் எண்ணி நாலைந்து காட்சிகளில் வந்து போகிறார். இதே நிலைதான் ஜெயபிரகாஷ்க்கும்.
படத்திற்கு இசையமைத்திருக்கிறார் மேட்லி ப்ளூஸ். பின்னணி இசையை காமெடிக்காக தாறுமாறாக இசைக்க விடுவார்கள் சில இசையமைப்பாளர்கள். ஆனால் மேட்லியோ ஹ்யூமரான காட்சிகளில் எல்லாம் அருமையாக பின்னணி இசையமைத்திருக்கிறார். பாரில் பாடும் பாட்டு மட்டும் கொஞ்சம் ரசிக்க வைக்கிறது.
படத்தை எழுதி இயக்கியிருப்பவர் சுபு. கோடைக்கானலில் காட்டுப் பகுதிகளில் போய் படமாக்கியிருக்கிறார்கள். பெரும்பாலான காட்சிகளை இருட்டில் லைட்டை ஒளிரவிட்டுப் படமாக்கியிருக்கிறார்கள். அதுவும் ஏகப்பட்ட விளக்குகள். படம் தொடங்கியதில் இருந்து முடிகிற வரைக்கும் ரொம்பவே ஸ்லோவாக நகருகிறது. திரைக்கதை சுவாரஸ்யமாகவும் இல்லை. அதே நேரத்தில் படத்தில் ட்விஸ்ட் வந்துவிட்டது… என்கின்றனர் கேரக்டர்கள். ட்விஸ்ட் வந்தால் படம் பார்ப்பவர் நிமிர்ந்து உட்கார வேண்டுமே… அதுதான் இல்லை. ஒரு கட்டத்திற்கு மேல் என்னமோ போங்கடா… நீங்களும் உங்கள் சுட்டகதையும் என்கிற அளவுக்கு வர வைத்து விடுகிறார்கள்… மொத்தத்தில இந்தப் படத்தைப் பார்க்கப் போயி தலைவலி வந்ததுதான் மிச்சம்…

குமுதம் என்னை வைத்து வியாபாரம் செய்கிறது - போட்டுத்தாக்கிய கே.எஸ்.ரவிக்குமார்!



சமீபத்தில் வெளியான குமுதம் வார இதழில் கோச்சடையான் படத்தில் தன்னைப் புறக்கணித்துவிட்டதாக கே.எஸ்.ரவிக்குமாரின் பேட்டி வெளியாகி இருந்தது. இது பற்றி சங்கராபுரம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் மனம் திறந்து பேசினார் கே.எஸ்.ரவிக்குமார். “என்னுடைய பேட்டி குமுதத்தில் வெளியானதுமே நிறைய தொலைபேசி அழைப்புகள் வந்தன. ‘என்ன உங்களுக்கும் ரஜினி சாருக்கும் ஏதாவது மன வருத்தமா?’ என்றெல்லாம் கேட்டார்கள். என்னுடைய பேட்டியை வைத்து குமுதம் வார இதழ் வியாபாரம் செய்கிறது. அவர்களைப் பொறுத்தவரையில் அது தொழில் தர்மம். ஆனால் போஸ்டரையும் அட்டைப் படத்தையும் மட்டுமே பார்த்துவிட்டு புத்தகத்தைப் படிக்காமல் எனக்கு போன் செய்து விசாரிக்கிறார்கள். முழு பேட்டியையும் படித்தால்தானே உண்மை விளங்கும். என்னுடைய நெருங்கிய நண்பர் எனக்கு போன் செய்தார் ‘உங்களுக்கும் ரஜினிக்கும் என்ன பிரச்சினை…?’ என்று கேட்டார். நான் உடனே போனை பக்கத்தில் இருந்த ரஜினியிடம் கொடுத்தேன். ரஜினி சார் ‘ஹலோ நான் ரஜினி பேசுறேன்… சொல்லுங்க…’ என்று சொல்ல நண்பர் ஆடிப்போய்விட்டார். ‘அது வந்து ஒண்ணுமில்லீங்க…’ என்று சொல்லி சமாளித்தார். எனக்கும் ரஜினி சாருக்கும் ஏதாவது பிரச்சினை என்றால் நான் அவரிடம் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பேனா என்ன…? இதன் மூலம் அனைவருக்கும் சொல்லிக்கொள்வது எனக்கும் ரஜினிசாருக்கும் மற்றும் கோச்சடையான் டீமிற்கும் இடையில் எந்த பிரச்சினையும் இல்லை. நாங்கள் நட்புடன்தான் இருக்கிறோம்…’ என்று பேசினார். இதன் மூலம் விஸ்வரூபம் எடுக்கவிருந்த கோச்சடையான் விவகாரத்திற்கு கே.எஸ்.ரவிக்குமார் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

குமுதம் ஆள் எவனோ தான் பொம்பளப்பேர்ல எழுதுறான்…!



எனக்கும் என் மனைவிக்கும் டாக்டர் ஷாலினியை மிகவும் பிடிக்கும். நம் பக்கத்துவீட்டு அக்கா போன்ற உணர்வை தரும் அவரின் அந்த தோற்றமும்.. நிறமும், நாம் பிரமிப்பாக நம்பும் பல்வேறு விசயங்களை பொட்டுனு போட்டுத்தள்ளும் அந்த அட்டகாசமான பேச்சும் எனக்கு அவரிடம் மிகவும் பிடித்தமான விசயங்கள். இதுவரை அவரை நேரில் சந்தித்ததில்லை.
என்னுடைய டீன் ஏஜின் அந்திம காலத்தில் குமுதத்தில் ஷாலினியின் கேள்வி பதில் பகுதி ஒன்று வந்தது. அந்த பதில்கள் கொஞ்சம் வில்லங்கமாக இருக்கும். `குமுதம் ஆள் எவனோ தான் பொம்பளப்பேர்ல எழுதுறான்’ என்று அப்போது நினைத்திருக்கிறேன்.
பிற்பாடு டாக்டர் ஷாலினி என்பவர் நிஜம் என்பது தெரிந்தது. அதன்பிறகு அவரது எழுத்துக்களையும் விவாதங்களையும் தவறவிடாமல் கவனித்துவருவது வழக்கம்.
சில வருடங்களுக்கு முன் விகடனில் ஷாலினி எழுதிய உயிர்மொழி என்றொரு தொடர்வந்தது. முதல் ஐந்து வாரங்கள் அத்தனையும் தீப்பொறி தான். ஆண்களின் அம்மா செண்டிமெண்ட்டையும், பெண்கள் ஆண்களை எப்படி பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை தன் எழுத்தில் காலி செய்திருப்பார். ஒவ்வொரு பாயிண்ட்டும் மறுக்க முடியாதவை.
ஷாலினியைத் தவிர நிச்சயமாக அந்த தொடரை ஆண் மருத்துவர்கள் யாராவது எழுதியிருந்தால் மிக எளிதாக ஆணாதிக்க தொடர் என்று `நீயா நானா’வின் `பெண்ணியவாதிகள்’ எளிதாக முத்திரைக் குத்தியிருப்பார்கள்.
தாய்மை.. பெண்மை.. புனிதம்..என்று பெண்கள் வீசும் ஆயுதங்கள் அத்தனைக்குமான பின்னணி காரணங்களை ஷாலினி புட்டுப்புட்டு வைத்தது பெரும்பாலான வாசகிகளை கடுப்பேற்றியதாக அறிந்தேன்.
முக்கியமாக பெரும்பாலான மன நல மருத்துவர்கள் கையாளும் டார்வின், ஃபிராய்டு .. என்று மொழிப்பெயர்ப்பு சமாச்சாரமாக இல்லாமல் அந்த தொடர் ஒரு பெரியார் கண்ணோட்டம் கலந்து கட்டிய ஒரு ஆய்வு தன்மையோடு இருந்தது மிகவும் பிடித்திருந்தது.
விகடனில் வந்த முக்கியமான தொடர்களில் ஒன்று என்று உயிர்மொழி தொடரை சொல்லலாம். நானும் என் மனைவியும் ஒருவாரம் கூட அதை படிக்க தவறவிடமாட்டோம். அவ்வளவு சுவாராஸ்யமான உண்மைகளை பேசும் தொடர் அது.
திருமணம் செய்து கொள்ளும் நண்பர்களுக்கு உயிர்மொழி புத்தகத்தை பரிசாக கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறேன். அதைப் படித்தால் பெண்களின் செண்டிமெண்ட் அட்டாக்கிலிருந்தும், மாமியார் மருமகள் அட்டாக்கிலிருந்தும் ஓரளவுக்கு ஆண்கள் தப்பிக்கலாம்.
இதேப்போல் ஷாலினியை பிடிக்க இன்னொரு காரணம், நீயா நானாவில் மேக்-அப் தொடர்பான ஒரு விவாதத்தில், நீங்கள் அழகுப்படுத்திக் கொள்வதெல்லாம் பாலியலுக்கான தூண்டில் தான் என்று போட்டு தாக்கியிருப்பார். அதைக்கேட்டு அம்மணிகள் எல்லாம் மிரண்டுபோன காட்சி இருக்கே.. ஆஹா..
நன்றி -கார்ட்டுனிஸ்ட் பாலா

Tuesday, October 22, 2013

சூர்யா- ஜோதிகா காதல் மலர்ந்த 'காக்க காக்க' தாணுவை காக்க வந்த படம்!

நடிகை ஜோதிகா துவக்கிய இந்திரா சிறுவர் பராமரிப்பு இணையத்தளம்



குழந்தைகள் மீது அக்கறைகாட்டும் ஜோதிகா


நடிகை ஜோதிகா துவக்கிய இந்திரா சிறுவர் பராமரிப்பு இணையத்தளம்


குழந்தைகள் மீது அக்கறைகாட்டும் ஜோதிகா

'ஆளவந்தான்' படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தில் ஒரு பகுதியை ஈடுசெய்யும் விதத்தில், தாணுவின் 'காக்க காக்க' படம் வெற்றி பெற்றது.

இந்தப் படத்தில் நடித்த போதுதான், சூர்யாவுக்கும், ஜோதிகாவுக்கும் காதல் மலர்ந்தது.

திரை உலக அனுபவம் பற்றி பட அதிபர் `கலைப்புலி' தாணு தொடர்ந்து கூறியதாவது:-

ஆளவந்தான் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது, 'என்ன சொல்லப் போகிறாய்?' என்ற படத்துக்கும் பூஜை போட்டேன். புதுமுகங்கள் நந்தா -காயத்ரி ரகுராம் என இளம் ஜோடிகளை அந்தப்படத்தில் அறிமுகப்படுத்த இருந்தேன்.

நந்தா ம.தி.மு.க. பொருளாளரும், முன்னாள் மத்திய மந்திரியுமான கண்ணப்பனின் மகள் வயிற்றுப் பேரன். காயத்ரி ரகுராம், டான்ஸ் மாஸ்டர் ரகுராம் -கிரிஜா தம்பதியரின் பெண்.

நடிகர் கமலஹாசன் விளக்கேற்றி வைக்க பூஜை நடந்தது. அதே வேகத்தில் படம் வளரத் தொடங்கியது.

படத்தில் காயத்ரி ரகுராமுக்கு ஒரு கண்ணியமான டீச்சர் வேடம். அந்த கேரக்டரில் அவர் நடித்து படம் வெளிவந்திருந்தால் தொடர்ந்து சிறந்த நடிகை என்ற பட்டியலிலும் காயத்ரி இடம் பிடித்திருப்பார். ஆனால் இந்தப் படத்தில் அவர் நடித்த நேரத்தில் பிரபுதேவாவுடன் நடித்த 'சார்லி சாப்ளின்' படம் ரிலீசானது.

அந்தப் படத்தில் அவர் பிரபுதேவா தோள் மீது காலைத் தூக்கிப்போட்டு நடித்ததால், அடுத்து வரவிருக்கும் இந்தப் படத்தில் அவரது கேரக்டர் பாதிக்கப்படும் என்று எண்ணினோம். அதனால் படத்தில் இருந்து காயத்ரி விடுவிக்கப்பட்டார்.

படத்தின் நாயகன் நந்தா பற்றி சொல்ல வேண்டும். அவருக்கு நடிப்பு ஆர்வம் இருந்ததால் பிலிம் இன்ஸ்டிடிïட்டில் சேர்த்து விட்டதே நான்தான். நடிப்புக்காக தங்கப்பதக்கம் வாங்கினார். என் மகள் திருமணத்தின்போது நந்தாவின் அப்பா தனது மகன் நந்தாவை என் கையில் பிடித்துக் கொடுத்து, 'என் மகனை நடிகனாக்க வேண்டியது உங்கள் பொறுப்பு' என்று சொல்லி கண்கலங்கினார்.

இது நடந்து இரண்டு நாட்களில் கோயம்புத்தூரில் உள்ள ஆஸ்பத்திரியில் நந்தாவின் அப்பா மாரடைப்பால் மரணம் அடைந்த செய்தி கிடைக்கிறது. அதிர்ச்சி அடைந்த நான் அவர் இல்லம் போனபோது, நந்தாவின் அம்மா கண்ணீருடன் நந்தாவை காட்டி, 'இவங்க அப்பா ஆசை நிறைவேறுமா? என் மகன் உங்க படத்தில் நடிப்பானா?' என்று கேட்டார். மகன் மேல் பெற்றோருக்கு இருந்த அக்கறையும், கவலையுமே என்னை நந்தாவுக்காக 'என்ன சொல்லப்போகிறாய்?' படத்தை எடுக்கச் செய்தன.

இப்படி ஆசைப்பட்டு நடிக்க வந்த நந்தாவுக்கு, படத்தின் டைரக்டரிடம் கிடைத்தது எதிர்மாறான அனுபவம். டைரக்டரின் அணுகுமுறையும் பேச்சும் நந்தாவை மனதளவில் காயப்படுத்த, என்னை வந்து சந்தித்து ஒரு கடிதம் கொடுத்தார். 'டைரக்டரின் பேச்சும், நடந்து கொள்ளும் விதமும் என்னால் படத்துடன் ஒன்ற முடியாமல் செய்துவிட்டது. இவரை வைத்து நீங்கள் தொடர்ந்து படம் எடுத்தால் ரொம்ப நஷ்டப்பட்டுப் போவீர்கள்' என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். படம் தொடர்ந்து வளராமல் நிறுத்தப்பட இதுவும் ஒரு காரணம்.

இதற்கிடையே படத்தின் டைரக்டர் என்னை சந்தித்து, 'இந்தக் கதையை வேறு நடிகரை வைத்து தயாரிக்கப்போகிறேன். எனவே, கதையை எனக்குத் தரவேண்டும்' என்று கேட்டார். படத்தை அதுவரை தயாரித்த வகையில் ஏற்பட்ட நஷ்டத்தை அவரிடம் கேட்காமல், கதையை அவருக்கு எழுதிக் கொடுத்தேன். 

நந்தாவின் எதிர்காலம் நின்றுவிடக்கூடாதே, என்பதற்காக நான் தயாரித்த படம் 'புன்னகைப்பூவே.'

இதற்கென நான் எனது 'விஐபி' படத்தை இயக்கிய டைரக்டர் சபாவை அழைத்துப் பேசினேன். மனோகர் என்ற எழுத்தாளர் படத்தின் கதையை எழுதி இருந்தார்.

படத்தில் புதுமுகம் ரேகா, காவேரி நடித்தார்கள். காமெடிக்கு வடிவேலு. யுவன் சங்கர் ராஜா இசை அமைத்ததோடு, ஒரு பாடல் காட்சியில் நடனமாடி நடித்தார்.

இந்த படத்துக்காக, முதன் முதலாக `டைட்டல் பார்க்'கில் படம் எடுக்க அனுமதி வாங்கினேன். தமிழகம் முழுதும் நானே ரீலீஸ் செய்தேன். என்ன சொல்லப் போகிறாய், புன்னகைப் பூவே இரண்டு படத்திலும் ரூ.2 கோடி இழப்பு ஏற்பட்டது.

'புன்னகைப்பூவே' தயாரிப்பில் இருந்த நேரத்தில், டைரக்டர் ராஜீவ் மேனனின் நண்பர் பார்த்திபன் என்னை சந்தித்தார். `எனது நண்பர் கவுதம் மேனன், டைரக்டர் ராஜீவ் மேனனிடம் உதவியாளராக இருந்தவர். முதன் முதலாக 'மின்னலே' என்ற படத்தை இயக்கினார். படம் வெற்றி. இப்போது அடுத்து ஒரு கதை தயார் செய்திருக்கிறார். நீங்கள் சம்மதித்தால், கதை சொல்ல அழைத்து வருகிறேன்' என்றார்.

'என்ன பட்ஜெட் ஆகும்?' என்று கேட்டேன். 

ரூ.'2 1/2 கோடி ஆகும். முதல் பிரதி அடிப்படையில் படம் பண்ணித்தர சம்மதம். சூர்யா -ஜோதிகா ஜோடி. அவர்கள் சம்பளம்கூட இதற்குள்தான்' என்றார்.

'ராஜீவ் மேனனின் உதவியாளர் என்றால் எனக்குத் தெரிந்திருக்குமே' என்றேன்.

'அவர் உங்கள் 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' படத்தில் பணியாற்றவில்லை. அதற்குமுன் வெளிவந்த 'மின்சாரக் கனவு' வரை பணியாற்றிவிட்டு, 'மின்னலே' படம் பண்ணப் போய்விட்டார்' என்றார்.

'சரி! நாளைக்கு அழைத்து வா' என்றேன்.

மறுநாள் காலை 7 மணிக்கெல்லாம் கதை சொல்ல வந்துவிட்டார் கவுதம் மேனன். கிட்டத்தட்ட 3 மணி நேரம் கதை சொன்னார்.

கதை எனக்குப் பிடித்து விட்டது. நான் அவரிடம், 'ரொம்ப நல்லாயிருக்கு தம்பி! இந்தக் கதையை அப்படியே படமாக எடுத்தால் திரையில் 3 1/2 மணி நேரம் ஓடும்! தியேட்டர்களில் 3 1/2 மணி நேர படத்தை போட ஆபரேட்டர்களே இப்போதெல்லாம் விரும்புவதில்லை.

2 ரீலை அவர்களாகவே எடுத்து வைத்துவிட்டு மீதி படத்தை ஓட்டிவிடுவார்கள். 2 1/2 மணி நேரம் ஓடக்கூடிய அளவில் காட்சிகளை கோர்வைப்படுத்து என்றேன்.

அப்போதே அட்வான்சாக ரூ.2 லட்சம் கொடுத்தேன். கண்களில் நீர் ததும்ப பணத்தை வாங்கிக் கொண்டார்.

முதல் பிரதி தயாராவது வரை 2 1/2 கோடி ரூபாய் பட்ஜெட் என்று நிர்ணயித்து ஒப்பந்தம் செய்து கொண்டேன். அப்போதே 18 லட்சம் ரூபாய் கொடுத்தேன். ஏற்கனவே ரூ.2 லட்சம் கொடுத்திருந்தேன். இதையும் சேர்த்து ரூ.20 லட்சம்.

ஆனால் பணம் பெற்றுக்கொண்ட இரண்டாவது நாளே பணம் தேவை என்று வந்தார். நான் அவரிடம், 'நேற்று கொடுத்த ரூ.18 லட்சத்தை என்ன பண்ணினீங்க?' என்று கேட்டேன். அதற்கு அவர் சிரிப்பையே பதிலாக தந்தார்.

இப்போது எனக்குள் ஒரு சின்ன சந்தேகம் எட்டிப்பார்த்தது. அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், 'கவுதம்! நீங்க யார் யாருக்கு பணம் கொடுக்கிறீர்களோ அத்தனைக்கும், எனது வங்கிக் கணக்கில் ஒரு அக்கவுண்ட் ஒப்பன் பண்ணித்தந்து விடுகிறேன். நீங்கள் கொடுக்கிற செக் அதில் பாஸ் ஆகிவிடும் என்றேன்.

சில நாட்களில் கவுதம் மேனன் என்னைப் பார்க்க வந்தார். 'சார்! நான் வீடு கட்டிக் கொண்டிருக்கிறேன். எனக்கு லோன் வாங்கிக் கொடுங்கள்' என்று கேட்டார்.

நானும் தாமதமில்லாமல் வீட்டை கட்ட லோன் வாங்கிக் கொடுத்தேன். ஆனால் அந்தக் கடனை என்னைத்தான் கட்ட வைத்தார். அதுபோக வீடு முடிவடையும் தருவாயில் 'ஒரு 5 லட்சம் ரூபாய் இருந்தால் முடித்து விடுவேன்' என்று வந்தார். அதற்கும் ஏற்பாடு செய்தேன்.

படப்பிடிப்பு தொடங்கியது. அவர் கொடுத்த சம்பளப் பட்டியலில், சூர்யாவைவிட ஜோதிகாவுக்கு சம்பளம் அதிகம் என எழுதப்பட்டு இருந்தது. 'இது எப்படி? ஹீரோவைவிட ஹீரோயினுக்கு சம்பளம் அதிகம் என்றால் எந்த ஹீரோ ஒப்புக்கொள்வார்?' என்று கேட்டேன்.

அதற்கும் சிரிப்பையே பதிலாகத் தந்தார்.

இந்தப் படத்தில் வில்லன் கேரக்டருக்கும் ரொம்பவே முக்கியத்துவம் இருந்தது. 'இந்த கேரக்டருக்கு யாரை போட்டு இருக்கிறீர்கள்?' என்று கேட்டேன்.

'யுனிவர்சிட்டி படத்தில் ஹீரோவாக நடித்த ஜீவன்தான் இந்தப் படத்தின் மெயின் வில்லன்' என்றார்.

'முக்கியமான வில்லன் கேரக்டருக்கு ஜீவன் தாங்குவாரா?' என்று என் சந்தேகத்தை கேட்டேன்.

'எனக்கு நம்பிக்கை இருக்கிறது சார். ஜீவன் நடிப்பினால் இந்த வில்லன் கேரக்டரும் பேசப்படும்' என்றார்.

'டைரக்டரான உங்களுக்கே அந்த நம்பிக்கை இருந்தால், அவரே நடிக்கட்டும்' என்றேன்.

இந்தப்படம் வளர்ந்து கொண்டிருந்த நேரத்தில்தான் சூர்யா -ஜோதிகா காதல் கொஞ்சம் கொஞ்சமாய் வெளிப்படத்தொடங்கியது. ஒருநாள் எனது அலுவலகத்தில் படப்பிடிப்பு நடந்த நேரத்தில், `நந்தி சாமியார்' என்ற பெயர் கொண்ட சாமியாரை காஞ்சீபுரம் பாபு தியேட்டர் அதிபர் அழைத்து வந்தார். எல்லோருக்கும் சாமியார் ஆசி வழங்கினார். அதோடு சிலரிடம் அவர்களின் பிரச்சினைகளை 5 நிமிட நேரத்துக்கு குறையாமல் பேசினார்.

நடிகர் சூர்யாவும் சாமியாரை சந்தித்து ஆசி பெற்றார். அவரிடம் தனியாக பேசிக்கொண்டிருந்த நேரத்தில் சூர்யாவின் மனதில் இருந்த காதல் விஷயங்களை சாமியார் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்த, சூர்யா மிரண்டு போய்விட்டார். 'எப்போது திருமணம் செய்து கொள்ளலாம்?' என்று சூர்யா கேட்டபோது, 'இந்தப்படத்தில் நடித்து முடித்ததும் திருமணம் செய்து கொள்' என்று கூறினார்.

சந்தோஷமாய் சாமியாரிடம் விடைபெற்றுப் போனார், சூர்யா. அவர் போனதும் என்னிடம் பேசிய சாமியார், 'பையன் (சூர்யா) காதலில் ரொம்பவே தீவிரமாக இருக்கிறான். சீக்கிரம் படத்தை எடுத்து முடி' என்று சொன்னார்.

Monday, October 21, 2013

அட்ரா சக்க… அட்ரா சக்க… கவுண்டரும் வந்துட்டாருல்ல?

'காமெடி கிங் ரிட்டர்ன்ஸ்'- வாய்மை படத்தின் கவுண்டமணி!






தமிழ் சினிமா உள்ள வரைக்கும் மறக்க முடியாத நகைச்சுவையைத் தந்தவர்கள் வரிசையில் முக்கிய இடம், இந்தத் தலைமுறையிலும் முதலிடம் யாருக்கு என்றால்... சந்தேகமில்லாமல் அது கவுண்டமணிக்குத்தான்.
சினிமாவில் நடிக்காமல் கொஞ்ச காலம் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தவர், இன்று சினிமாவில் நிலவும் நகைச்சுவைப் பஞ்சத்தையும் கேவலமான காமெடிக் காட்சிகளையும் பார்த்ததாலோ என்னமோ.. மீண்டும் முழு வீச்சில் நடிக்கக் களமிறங்கிவிட்டார்.
கிங் ஆஃப் காமெடி கவுண்டர் ரிட்டர்ன்ஸ்!
இரண்டு படங்களில் ஹீரோவாக நடிக்கிறார் கவுண்டர். அதில் ஒருபடம் வாய்மை. இந்தப் படத்தில் கவுண்டமணியுடன் சாந்தனு பாக்யராஜ், ராம்கி, ஊர்வசி, பூர்ணிமா பாக்யராஜ், பானு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
டாக்டர் பென்னி! 
பென்னி என்ற பாத்திரத்தில் மருத்துவ நிபுணராகத் தோன்றுகிறார் கவுண்டமணி. சமூக சீர்கேடுகளை நகைச்சுவையாக சாடும் பாத்திரம் அவருடையது. அவரது காமெடியின் சிறப்பே அதுதானே. அதை இந்தப் படத்திலும் தொடர்கிறார். படத்தை வசந்தபாலனிடம் இணை இயக்குநராக இருந்த செந்தில்குமார் என்பவர் இயக்குகிறார்.
கவுண்டருக்கு நிகரேது... 
நேற்று வெளியான புகைப்படங்களில் கவுண்டமணி கோட் சூட் அணிந்து தனக்கேயுரிய மேனரிசங்களோடு காட்சி தருகிறார். அதில் ஒரு படத்தில், 'இப்ப வர்றதுக்குப் பேரு காமெடியாய்யா... ராமா ராமா' என்பது போல போஸ் கொடுத்திருப்பார்.
மீண்டும் தியாகராஜன்!
 இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் தியாகராஜன். மகனுக்காக நடிப்பதை நிறுத்திக் கொண்டவர், இடையிடையே சிறு வேடங்களில் மட்டும் வந்தவர், இந்தப் படத்தில் மீண்டும் நடித்துள்ளார்.
ஆரோக்கியமான காமெடி இன்னிங்ஸ்! 
வடிவேலுவின் தெனாலிராமன் ஸ்டில்கள் வெளியான அடுத்த நிமிடமே கவுண்டரின் வாய்மை பட புதிய ஸ்டில்களும் நேற்று மாலை வெளியாகின. இந்த ஸ்டில்களைப் பார்த்தபோதே, மீண்டும் தமிழ் சினிமாவில் ஒரு ஆரோக்கியமான காமெடி இன்னிங்ஸ் ஆரம்பமாகிவிட்டதற்கான கொண்டாட்ட மனநிலையில்தான் பலரும் இருந்தனர்.

வந்துட்டேன்யா… வந்துட்டேன்யா…

இந்தா கெளம்பிட்டார்ல… : சந்தானத்துக்கு ஆப்பு வைக்க வரும் வடிவேலு!





காமெடி நடிகர் வடிவேலு மீண்டும் நடிக்க வருவதை கேள்விப்பட்ட பல டைரக்டர்கள் சந்தானத்தை கொஞ்சம் கொஞ்சமாக ஓரங்கட்ட ஆரம்பித்துள்ளனர். இதனால் கடந்த 2 வருடங்களாக ஸ்டேடியாக இருந்த சந்தானத்தின் சிங்கிள் ஷேர் மார்க்கெட் ஆட்டம் காண ஆரம்பித்துள்ளது.
அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளாகி ஒருவழியாக அதிலிருந்து மீண்டு வரும் வடிவேலு தற்போது மிகவும் ஃசைலண்ட்டாக நடித்து வரும் படம் தான் ‘ஜெகஜால புஜபல தெனாலிராமன்’.
சுமார் 3 வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு அவர் ஹீரோவாக நடித்து வரும் இந்தப்படத்தை யுவராஜ டைரக்ட் செய்து வருகிறார். முன்னதாக வடிவேலுஇம்சை அரசன் 23-ஆம் புலிகேசி படத்தின் 2-ஆம் பாகத்தில் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அந்தப்படத்தின் டைரக்டர் சிம்புதேவனுடன் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக அந்தப்படம் அப்படியே நின்று விட்டது.
இந்நிலையில் தான் வடிவேலு ஜெகஜால புஜபல தெனாலிராமன் என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க கமிட்டானார். போட்டா போட்டி படத்தை டைரக்ட் செய்த யுவராஜ் டைரக்ட் செய்து வரும் இந்தப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரித்து வருகிறது.
இந்தப்படத்தில் வடிவேலு ஜோடியாக நடிக்க பார்வதி ஓமனக்குட்டன், சினேகா உல்லால் என பல ஹீரோயின்களையும் கேட்டுப் பார்த்தார்கள். ஆனால் வடிவேலு ஹீரோ என்பதால் யாருமே நடிக்க முன்வரவில்லை.
இறுதியாக நடிகை மீனாட்சி தீட்சித் என்ற தெலுங்கு படங்களில் குத்தாட்டம் போட்டவர் நடிக்க ஓ.கே சொல்லியிருக்கிறார். இவர் ஏற்கனவே தமிழில் விஜயகாந்த்தின் விருதகிரி படத்தில் நடித்தவர் என்பது இங்கே முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம்.
இதற்கிடையே வடிவேலுவின் வரவால் சிங்கிள் காமெடியனாக தமிழ்சினிமாவில் கோலோச்சி வரும் சந்தானத்தின் மார்க்கெட் ஆட்டம் காண ஆரம்பித்துள்ளது.
தெனாலிராமன் படத்தில் வடிவேலு மீண்டும் நடிப்பதை கேள்விப்பட்ட பல தயாரிப்பாளர்களும், டைரக்டர்களும் அவரை நேரில் சந்தித்து மீண்டும் தங்களது படங்களில் காமெடியனாக நடிக்கக் கூப்பிட ஆரம்பித்திருக்கிறார்களாம்.
இன்னும் சில டைரக்டர்களோ தெனாலிராமன் படம் ரிலீசானவுடன் வடிவேலுவை தங்கள் படங்களின் காமெடிக்காக கமிட் பண்ண முடிவு செய்திருக்கிறார்களாம். இதனால் சமீபகாலமாக சந்தானத்தை தேடிப்போகும் பட சான்ஸ்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்துள்ளது.

பாரதிராஜா அழைத்தார் ! பாலுமகேந்திரா நெகிழ்ந்தார்!

ஓவியர் அப்துல் ரவூப் நிஸ்தார்!


தனக்கான தகுதியுள்ளவர்களை சினிமா எங்கிருந்தாலும் தேடி ஈர்த்துக்கொள்ளும். அப்படித்தான் ஓவியர் ரஹமத் என்கிற ரவூப் நிஸ்தாரையும் அழைத்து வந்திருக்கிறது.

எங்கோ மதுரையில் ஓவியங்கள்,விளம்பரங்கள்,மேடை அமைப்புகள் என்றிருந்த அவரை சென்னை வரவழைத்திருக்கிறது. ஸ்டோரி போர்டுகள் வரைவதில் ஈடுபடுத்தி கலை இயக்குநராக அழைத்துள்ளது.



யாரிந்த ரஹமத்.. ?

எனக்குச் சொந்த ஊரு மதுரை. என் அண்ணன் இக்பால் நன்றாக படம் வரைவார். அதைப் பார்த்த நாமும் ஏன் வரையக் கூடாது என்று நினைத்தேன். ஆர்வம் அதிகரித்து ஓவியங்களில் இறங்கி விட்டேன்.உலகின் எல்லா வகை ஓவியங்களின் மீதும் ஈடுபாடு ஏற்பட்டது.விளம்பரப் போர்டுகள், உருவப் படங்கள், மேடை அலங்காரப் படங்கள் என்று தொழிலானது. வருமானமும் வந்தது. வருமானம் இரண்டாம் சந்தோஷம்தான். முதல் சந்தோஷம் நினைத்ததை வரைய முடிகிறது என்பதுதான். மேடை உருவாக்கியது என்கிற வகையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திற்கு கலை இரவுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் சுமார் 20 ஆண்டுகள் மேடை ஓவியங்கள்,மேடை அமைப்பு என்னுடையதுதான்' என்கிறார்.

பியூசி வரை படித்த இவரது இயர்பெயர் அப்துல் ரவூப் நிஸ்தார். செல்லப் பெயர் அழைக்கப்பட்ட பெயர்தான் ரஹமத்.இதுநாள் வரை ரஹமத் என்று அழைக்கப்பட்டு அறியப்பட்டவர். இனி இயற்பெயரிலேயே தொடர விரும்புகிறார். அதுதான் பெயர் வைத்து பெற்றோருக்கு மரியாதை என்று நம்புகிறார்.


ஓவியத்துறையில் ஈடுபாடு கொண்டு அவ்வுலகில் வாழ்பவர்களுக்கு பொருளாதாரம் கை கொடுக்குமா ? 
"நான் இதை தொழில் முறையாக மதுரையில் செய்து கொண்டிருந்தேன். எனவே பணக் கஷ்டமில்லை 'நீ சினிமாவுக்கு போ' என்று பலரும் கூறிய போது வந்து கொண்டிருக்கிற வருமானத்துக்கு பாதிப்பு வந்துவிடக்கூடாதே என்று நினைத்தேன். அது மட்டுமல்ல இதுவே மனதிருப்தியாக இருப்பதாக நினைத்தேன் ' என்றவர். தான் இதுவரை வரைந்த ஓவியங்களை அவ்வப்போது மதுரை பகுதிகளில் கண்காட்சியாக்கினார். நண்பர்கள் தூண்டுதளில்தான் இதைச் செய்திருக்கிறார். ஆனால் அது குடத்திலிட்ட விளக்காக இருந்த அவரது திறமையை குன்றியிட்ட விளக்காக மாற்றியது.



எந்த அளவுக்கு?

ஒருமுறை இவரது கண்காட்சிக்கு இயக்குநர் பாரதிராஜா வந்திருந்தார். சென்னைக்கு அழைத்திருக்கிறார். ஆனால் இவர்தான் வரவில்லை. சென்னையில் ஓவியக் கண்காட்சி வைக்கவும் தூண்டியிருக்கிறார். ஒரு பேட்டியில் இன்று என்ன விசேஷம் என்ற பாரதிராஜாவிடம் கேட்ட போது 'இன்று மதுரையில் ரஹமத்தின் ஓவியங்கள் தான் விசேஷம் பேசப்படுகிற ஒன்று' என்று கூறியிருக்கிறார்.

பாரதிராஜாவை கௌரவிக்கும் வகையில் அவரது அம்மாவின் ஓவியத்தை வரைந்து கொடுக்க, அவரோ நெகிழ்ந்து பாராட்டியிருக்கிறார்.ஜூலை 13ல் சென்னையில் முதல் ஓவியக் கண்காட்சியையும் ரஹமத் நடத்தியிருக்கிறார்.

கண்காட்சிக்கு தலைமையேற்ற பாலுமகேந்திரா இவர் வரைந்த 'வயோதிகம்' என்கிற ஓவியத்தை ரசித்து நெகிழ்ந்து விலை கொடுத்து வாங்கியும் பெருமை செய்திருக்கிறார். இவரது ஓவியக் கண்காட்சிகளுக்கு "இயக்குநர்கள் பாலா, அமீர், பார்த்திபன், வசந்தபாலன்,நடிகை ரேவதி என்று தொடங்கி ஆன்மீக உலகத்தைச் சேர்ந்த குன்றக்குடி அடிகளார் வரை வந்து பாராட்டியுள்ளனர்.

கலை இரவுகளுக்காக இவர் வடிவமைத்த மேடைகளை நிகழ்ச்சிக்கு வரும். விஐபிக்கள் பாராட்டிப் பேசியதுண்டு. ஒருமுறை 30,000 பேர் கூடிய கூட்டத்தில் இயக்குநர் இவரைப் பாராட்டியதும், இவர் மேடை அமைப்பதை வரையும் ஓவியத்தை விடிய விடிய உடனிருந்து உற்று நோக்கி ஓவியர் மருது பாராட்டியதும் நெகிழ்வுக்குரியது நிகழ்வுகளாகக் கருதுகிறார்.


எந்தப் பள்ளிக்கும் கல்லூரிக்கும் சென்று ஓவியம் கர்றுக் கொள்ளாத இவர் பல அமைப்புகளின் ஓவியப் போட்டிகளுக்கு நடுவராக இருந்திருக்கிறார். தன்னைவிட ஓவியத்துக்கு கலைக்கு கிடைத்த பெருமையாக இதைக் கருதுகிறார்.

இவர் அழுத்தமாக கூறுகிறார் இப்படி 'எல்லாரிடமும் திறமை இருக்கிறது வளர்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைகள் வரையும் ஓவியங்கள் வியப்பூட்டுகின்றன நல்ல ஓவியங்களை ரசிக்கிற குணம் எல்லா தரப்பு மக்களிமும் இயல்பாகவே இருக்கிறது' இதுவரை இவர் பத்தாயிரம் உருவ ஓவியங்களையாவது வரைந்திருப்பார். உலகநாடுகளுக்கெல்லாம் சென்றிருக்கின்றன. இதுவரை சினிமாவைத் தவிர்த்து வந்தவர். இப்போது கலை இயக்கத்தில் ஈடுபட முடிவெடுத்துள்ளார். ஓவியங்கள்,சிற்பங்கள்.ப்ளாஸ்டக்,ஆப் பாரீஸில் படைப்புகள் என்று ஈடுபடும் இவருக்கு இசையிலும் தாகம் உண்டு. ராகங்கள் அறிந்தவர். சிறப்பு தபலா கலைஞர்.

ரஹமத் என்கிற அப்துல் ரவூத் நிஸ்தார் நடத்தும் சென்னையில் வருகிற 21.10.13 முதல் 31.10.13 வரை வின்யாசா பிரிமியர் ஆர்ட் கேலரி,சி ஐ டி காலனி, மயிலாப்பூரில் நடைபெறவுள்ளது.ஓவியர் விஸ்வம் திறக்கவுள்ளார்.திரைப்பட கலை இயக்குநர் ஜேகே பங்கேற்றுச் சிறப்பிக்கிறார்.

வண்ணங்களோடும் வரிகளோடும் வாழ்க்கை நடத்தும் நிஸ்தாரின் கனவுகள் மெய்ப்படட்டும்.


  
 







Sunday, October 20, 2013

பாம்பு பால் குடிக்காது




உண்மையும், விஞ்ஞான ரீதியாக ஒத்துக்கொண்ட விடயமும் என்ன வென்றால் முட்டையையும், பாலையும் பாம்பு குடிக்காது. பின்னர் எதற்கு புற்றுக்குள் பால் ஊற்றுகிறார்கள்? ஆதி காலத்தில் மனிதனுக்கு பெரிய பிரச்சினையாக இருந்தன பாம்புகள். காரணம் அடர்ந்த காடுகள், மனித நடமாட்டம் மிக மிகக் குறைவு. மனிதனை விட பாம்புகள் அதிகம் காணப்பட்டன. அதனைக் கொல்லாமல் அதன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த முயன்றனர். பாம்புகள் இனப்பெருக்கம் மேற்கொள்வது மிகவும் வித்தியாசம். பெண் பாம்பு தான் உடலில் இருந்து ஒரு வித வாசனைத் திரவத்தை (பரோமோன்ஸ்) அனுப்பும். அதனை நுகர்ந்து ஆண் பாம்பு பெண் பாம்பைத் தேடி வரும். பெண் பாம்பில் இருந்து வரும் வாசனையைக் கட்டுப்படுத் தும் வேலையை பால் முட்டையிலிருந்து வரும் வாசனை தடுக்கிறது.

ஆகவே, அவற்றால் இனப்பெருக்கம் செய்ய முடியாது. இதன் முழுமையான காரணம் சொன்னால் நிச்சயம் ஒருவரும் பின்பற்ற மாட்டார்கள்.

Saturday, October 19, 2013

கதவில்லா வீட்டில் வசித்துவரும் கட்டபொம்மனின் வாரிசு!



ஏழ்மை காரணமாக கதவில்லா வீட்டில் வசித்துவரும் கட்டபொம்மனின் வாரிசு ஜெகவீர பாண்டிய கட்டபொம்மு

"தருக்கர்கள் சிலரால் தமிழ் தாழ்வுற்று இருப்பினும் எதிர்காலத்திலே இளம் இளம் காளையர்கள் உயிராக பேணுபவர் வருவர் உன் உயர்வை உயர்த்துவர்" என்று தூக்கு கயிற்றை முத்தமிட்டு கயத்தாரில் கட்டபொம்மன் தூக்கில் தொங்கிய வரலாற்றை சினிமாவில் பார்த்தும், புத்தகங்களில் படித்தும்

பிரமித்தோம்... தமிழகம் சென்றால் பாஞ்சாலம் குறிச்சிக்கு சென்று அந்த வீரம் விளைந்த மண்ணை மிதித்து தொட்டு கும்பிட எல்லோருக்கும் ஆசை இருக்கும். தமிழர் வரலாறுகளில் வீரம் மிகைப்படுத்தப்பட்டும் மகிமைப்படுத்தப்பட்டும் எழுதப்பட்டிருப்பதால் அதற்கு அப்படி ஒரு சிறப்பு!

சிவகங்கை சீமையிலே களமாடிய வேலுநாச்சியாரையும் வெள்ளையனின் ஆயுதக்கிடங்கை துவம்சம் செய்து அதை சிதறடித்த வீரப்பெண் குயிலியையும் கூட நம்மவர்கள் இன்றுவரை மறக்கவில்லை. ஆனால் இந்த வீரம் செறிந்தவர்களின் சந்ததியினருக்கு என்ன நடந்தது என்று தேடிப்பார்த்ததுண்டா?

ஒருமுறை தேடிப்பார்த்தபோது, இலங்கை மன்னன் ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கனின் வாரிசுகளில் ஒருவர் வேலூர் தியேட்டர் ஒன்றில் டிக்கட் கிழித்துக் கொண்டிருப்பதை வெளிக்கொண்டு வர முடிந்தது. எனவே இந்த கட்டபொம்மனின் வாரிசுகளுக்கு என்ன நடந்தது என்று பார்க்கவேண்டாமா?

அண்மையில் வேலூரில் நடந்த ஒரு பாரம்பரிய விழாவில் கட்டபொம்மனின் வாரிசான வீமராஜா என்கிற ஜெகவீரபாண்டி கட்டபொம்முவை சந்திக்கும் ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

நல்ல உயரமான உருவம், வீரத்தின் அடையாளமாக முறுக்கிய மீசை. தலையில் முண்டாசு, மடித்துக்கட்டிய வெள்ளை வேட்டி, சட்டை. இடுப்பில் வாள் ஏதும் இல்லை. ஆனால் அவரின் பாதணி மட்டும் மன்னர் காலத்தை ஞாபகப்படுத்தியது. தோளில் தொங்கும் ஒரு பழைய பை அதில் செல்லரித்து மக்கிப்போன சில படங்கள். கலைஞர், வைகோ, விஜயகாந்த் என அரசியல் தலைவர்களோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்...

இதுதான் நான் பார்த்த கட்டபொம்மனின் வாரிசு கட்சியளித்த விதம்.

"எனது பாட்டன் கட்டபொம்மன் வெள்ளைக்கார பயலுகள ஓட ஓட விரட்டி அடித்தான். ஆனால் எட்டப்பனின் காட்டிகொடுப்புதான் அவனை விழவைத்தது. இல்லையென்றால் பாஞ்சாலங்குறிச்சியில் ஒரு பிடி மண்கூட அந்த பயலுகளுக்கு கிடைத்து இருக்காது" என்று இன்றைக்கும் வீரமாக பேசி மீசை முறுக்குகிறார் வீமராஜா. எழுபத்தி மூன்று வயதிலும் ரொம்பவும் தைரியமாகத்தான் இருக்கிறார். அரசு மாதம் தோறும் தரும் ஆயிரம் ரூபாயில் தான் இவரின் வாழ்க்கை ஓடுகிறதாம்...

"நமக்கு வேலைக்கு போக முடியாதுங்க. அரசாங்கம் மானியம்னு ஆயிரம் தாரான். அது சாப்பாட்டுக்கே போதலிங்க... மன்னரின் கோட்டையை பார்க்க வாராங்க, அப்படியே என்னையும் பார்த்து போட்டோவும் பிடித்து என் கை செலவுக்கு ஏதாவது கொடுக்கிறாங்க..."

கேட்ட எனக்கு ஒரு மாதிரி இருந்தது.

வீமராஜாவுக்கு ஆணும், பெண்ணுமாக இரண்டு பிள்ளைகள். மகள் திருமணம் முடித்து குடும்பமாகிவிட்டாராம். மகன் பெயர் கணபதி ராஜா என்கிற ஜெகவீர ராம கட்டபொம்மன். ஆனால் தனக்கு பிறகு கட்டபொம்மனின் வாரிசாக வரக்கூடிய எந்தத் தகுதியும் அவனுக்கு இல்லை. அதனால் அவனைப் பற்றி பேசாதீர்கள் என்று கொஞ்சம் கடுப்பானார் வீமராஜா.

அரசாங்கம் கட்டிக்கொடுத்த ஒரு சிறிய வீட்டில்தான் வீமராஜா குடியிருக்கிறாராம்.

"வீடு ஒரு தடவை தீப்பிடித்ததில் அதன் கூரை எரிந்து விட்டது. அதன் பிறகு சிங்கப்பூரிலிருந்து வந்த பூங்கொடி பெருமா நாயக்கர் என்பவர்தான் என்னைத் தேடி வீட்டுக்கு வந்து அஸ்பெஸ்டஸ் கூரை போட்டுத் தந்தாரு. அத்தோடு யாராவது வீட்டுக்கு வந்தா அமர்வதற்கு ஒரு கயிற்று கட்டிலும் வாங்கித் தந்தாரு. அரசாங்கம் கட்டித்தந்த வீடு ரொம்பவும் சின்னதா இருந்ததால் அதை கொஞ்சம் பெரிசா கட்டுவதற்கு சென்னைக்கு போய் நடிகர் சிவகுமார் அலுவலகத்தில் மனுக்கொடுத்திட்டு வந்தேன். அவரு ரொம்ப நல்ல மனுஷன். நான் கேட்டபடி செய்யச் சொல்லி திருநெல்வேலி ரசிகர் மன்றத்துக்கு பணம் அனுப்பி இருக்காரு. ஆனா ரசிகர் மன்றத்து ஆட்கள் அந்த பணத்திற்கு ரொம்ப சின்னதா ஒரு அறையை கட்டி மிச்ச பணத்தை சாப்பிட்டுட்டானுங்க...!

அந்த அறையை சீராகவும் அமைக்கப்படலை. மதில் கட்ட பயன்படுத்தும் புளக்கல்லை வச்சு வீடு கட்டியிருக்கானுங்க..." என்று புலம்பும் இவரின் வீட்டின் கதவு செல்லரித்து விழுந்து விட்டதாம்.

"இப்போ கதவில்லா வீட்டில்தான் நம்ப வாழ்க்கை போகுது. இரவானா நாயும் பேயும் வீட்டுக்குள் வருதுங்க... இது பற்றி அரட்டை அரங்கம் நடத்த வந்த டீ. ராஜேந்தர் கிட்டே போய் சொன்னேன். இதைக் கேட்ட அவரு காட்டு ராணி கோட்டையிலும் கதவுகள் இல்லை. இங்கே கட்டபொம்மன் வாரிசு வீட்டிலயும் கதவுகள் இல்லைன்னு காமடி பண்ணினாரு. அவருக்கிட்ட கட்டபொம்மனுக்கு சென்னையில் சிலை வைக்கணும்னு சொல்லியிருக்கேன். செய்யலாம்னு சொல்லியிருக்காரு. பார்க்கலாம்," என்று பெருமூச்சு விடும் அவரிடம் கட்டபொம்மனின் சொத்துக்கள் ஏதும் இல்லையா என்று கேட்டோம்.

"சொத்து என்று ஏதும் இல்லிங்க... மன்னரை கைது செய்த பிறகு மன்னரின் ரத்த பந்தங்களை திருச்சி கோட்டைக்கு பக்கத்திலுள்ள ஒரு சிறைச்சாலையில் எழுபது வருடமாக அடைத்து வைத்திருந்தார்கள். அதன் பிறகு எங்கள் உறவுக்காரர்களை ஊருக்குள் விடவில்லை. பத்து மைல் தள்ளியே வைத்திருந்தார்கள். சக்காரக்குடியில் குடியமர்த்தி இருந்தார்கள். சொத்தெல்லாம் வெள்ளைக்கார பயலுகளும் எட்டப்பனும் சுருட்டிட்டு போயிட்டானுங்க.." என்றவரிடம் பாஞ்சாலங்குறிச்சியில் நடந்த சண்டையில் கட்டபொம்முவின் குடும்பத்தினர் அனைவரும் கொல்லப்பட்டு விட்டதாக சொல்கிறார்களே அப்போ நீங்க எப்படி வாரிசாகும்? என்று கேட்டோம்.

"இல்லை. சண்டையில் கட்டபொம்மனின் மனைவி கொல்லப்படவில்லை. மகாராணி நிறைமாத கர்ப்பிணியாக இருந்திருக்கிறார். அப்போ ராணியின் தந்தை கெடு வெட்டூர் நாயக்கர் தன் மகளை தேவி ஜக்கம்மாவின் பாதம் தொட்டு வணங்கி அந்த திருநீறை மகளின் நெற்றியில் இட்டு கீழவாசல் வழியாக தப்பிச் செல்ல பணித்திருக்கிறார். அவரும் தேவி ஜக்கம்மாவின் துணையோடு வெளியேறி சக்காரகுடியில் இருந்த ஒல்லிக் கவுண்டர் வீட்டில் தஞ்சம் புகுந்திருக்கிறார். ஆனால் சில நாட்களில் மாடு மேய்க்கும் ஒரு பெண்ணினால் ராணி காட்டிக் கொடுக்கப்பட்டு வெள்ளையர்களால் கைதாகி இருக்கிறார். அவரை பல்லக்கில் வைத்து சுமந்து சென்ற வெள்ளையர்கள் திருச்சியில் வீட்டுக்காவலில் வைத்து இருந்தார்களாம்.

அவருக்கு அந்தக்காலத்தில் மாதம் தோறும் 2.50 சதம் மானியமாக வழங்கப்பட்டிருக்கிறது. பிறகு அவருக்கு இரட்டைக் குழந்தை பிறந்ததாம். ஒரு பண்டிகை நாளில் வெள்ளைக்காரன் இனிப்புகளை ஒரு தட்டிலும், மறு தட்டில் இரண்டு வாள்களையும் வைத்து விரும்பியதை எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறினார்களாம்.

இரு சிறுவர்களில் ஒருவன் ஓடிச்சென்று போர் வாளை எடுத்தானாம். அதைப்பார்த்து மிரண்டுப்போன வெள்ளையன், அந்தக் குழந்தைதான் அடுத்த கட்டபொம்மன் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு அவனை வெளிநாட்டுக்கு கூட்டிச் சென்று படிக்க வைப்பதாக அழைத்துச் சென்று விட்டார்களாம். மற்ற பையனை திருச்செந்தூர் காவடி பிரார்த்தனைக்கு நேர்ந்து இருப்பதாகச் சொல்லி ஜக்கம்மா அவனை தன்னோடு வைத்துக் கொண்டார்களாம். சிறையில் பிறந்த கட்டபொம்மனின் வாரிசுகளுக்கு கம்பனி செல்வம் என்றுதான் பெயர் வைத்திருந்தார்களாம்... அந்தப் பரம்பரையில் வந்த ஐந்தாவது தலைமுறைதான் நான். வெள்ளைக்காரன் கொடுத்த மானியத்தை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபோது நிறுத்தி விட்டார்கள்.

எனக்குத் தெரிய எங்க பெரியப்பா சுப்பரமணியம் அந்த பென்ஷனை வாங்கி வந்தாரு. அவரின் மரணத்தோடு அதுவும் நின்றுவிட பிறகு அண்ணாத்துரை முதலமைச்சரானதும் நான் ஒரு கடிதம் எழுதினேன். அவரிடமே கொடுத்தேன். அதைப்பார்த்த அவர், 'கட்டபொம்மன் வாரிசுக்கும், வாஞ்சிநாதன் மனைவிக்கும் இந்த மானியத்தை கொடுக்கலாம். ஆங்கில சர்க்கார் கொடுத்ததை சொந்த சர்க்கார் நிறுத்தியது குற்றம்' என்று ஒரு ஃபைலில் எழுதி வச்சாரு. அவருக்கு பிறகு ஆட்சிக்கு வந்த கலைஞர் அதை நிறைவேற்றினார். அவருதான் கட்டபொம்மனின் இடிந்த மாளிகையை கட்டி எழுப்பினாரு.

74ல் எனக்கு வீடுகட்டித் தந்தவரும் அவருதான்... ஆனா இப்போ கயத்தாறில் கட்டபொம்மனுக்கு மணி மண்டபம் கட்டப்போறதா அம்மா அறிவித்து இருக்காங்க..." என்று சொல்லும் வீமராஜா நன்றாக அருள்வாக்கும் சொல்கிறார். "தேவி ஜக்கம்மாவை நினைத்தா உள்ளதை உள்ளப்படி சொல்வேணுங்க..." என்கிறார். இது தவிர தமிழர் கலாசார நிகழ்வுகளுக்கும் வீமராஜா சிறப்பு அதிதியாக அழைக்கப்பட்டு கௌரவிக்கப்படுகிறார்.

வருடம்தோறும் கட்டபொம்மன் நினைவு தினத்திலும் தேவி ஜக்கம்மா திருவிழாவிலும் வீமராஜாதான் கதாநாயகராம். ஆனால் வீமராஜாவின் வாழ்க்கை மிகவும் வறுமைகோட்டிலேயே பயணிக்கிறது. நாடாளவேண்டியவர் இப்படி நாதியற்று...

- நேர்காணல்: மணி ஸ்ரீகாந்தன்

ஆளை அசத்தும் ஹைதராபாத் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி?



தேவையான பொருட்கள்
சிக்கன் – ஒரு கிலோ
பாஸ்மதி அரிசி – 3/4 கிலோ
எண்ணெய் – 200 கிராம்
மிளகு – ஒரு தேக்கரண்டி
சீரகம் – ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் – சிறிதளவு
பட்டர் – 50 கிராம்
இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
மிளகாய்தூள் – 2 தேக்கரண்டி
மல்லித்தூள் – ஒரு தேக்கரண்டி
தயிர் – 1/2 லிட்டர்
எலுமிச்சை – ஒன்று
பட்டை – ஒரு சிறிய துண்டு
ஏலக்காய் – 3
கிராம்பு – 5
பிரிஞ்சி இலை – 2
ஷாகிஜீரா – 2 தேக்கரண்டி
கருப்பு ஏலக்காய் – 2
ஜாதிபத்திரி – சிறிதளவு
கொத்தமல்லி தழை – ஒரு கொத்து
புதினா – ஒரு கொத்து
குங்குமப்பூ (அ) ரெட் கலர் தூள் – சிறிதளவு
ப்ரைடு ஆனியன் – ஒரு கப்
(ப்ரைடு ஆனியன் கடைகளில் கிடைக்கிறது. இல்லையெனில் பல்லாரி வெங்காயத்தை மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கி அரை தேக்கரண்டி அரிசிமாவை அதில் தூவி கைகளால் நன்கு பிசறி எண்ணெயில் போட்டு பொன்னிறமானதும் பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். )
பச்சை மிளகாய் – 3
உப்பு – தேவையான அளவு
செய்வது எப்படி?
பொடி வகைகள் மற்றும் வாசனை பொருட்களை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும். அரிசியை கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும். சிக்கனை சுத்தம் செய்து கழுவி அதில் 50 மி.லி எண்ணெய், இஞ்சி பூண்டு விழுது, 2 பச்சை மிளகாய், தயிர், உப்பு, அரைத்த மசாலா பொடி, சிறிதளவு பட்டை மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து புரட்டி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைத்து அதில் சிறிதளவு உப்பு, 2 ஏலக்காய், ஒரு பச்சை மிளகாய், 2 கிராம்பு, ஒரு பிரிஞ்சி இலை, சிறிதளவு பட்டை, சிறிதளவு ஷாகிஜீரா ஆகியவற்றை சேர்த்து ஊற வைத்திருக்கும் அரிசியை போட்டு சிறிதளவு எலுமிச்சை சாறு பிழிந்து அரை பதமாக வேக வைத்து வடித்து எடுத்துக் கொள்ளவும்.
வாயகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து பட்டர் மற்றும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் ஊற வைத்த சிக்கன் கலவையை போட்டு 1 1/2 டம்ளர் (350 ml) தண்ணீர் ஊற்றி சிக்கனை சமப்படுத்தி விடவும். சிக்கன் கலவையின் மேல் வேக வைத்த சாதத்தை கொட்டி நன்கு பரப்பி விடவும்.
அதன் மேல் ப்ரைடு ஆனியன், மல்லி தழை, புதினா போன்றவற்றை சுற்றிலும் போடவும். கடைசியாக குங்குமப்பூவை பாலில் கரைத்து ஆங்காங்கே தெளித்து விடவும். கலர்பொடி என்றால் இருகலர் பயன்படுத்தலாம். கலர்பொடி சேர்ப்பது உடல்நலத்திற்கு நல்லதல்ல. அதனால் குங்குமப்பூ சேர்த்துக் கொள்ளவும்.
பாத்திரத்திலிருந்து நீராவி வெளியில் செல்லாதவாறு மூடி போட்டு கொள்ளவும். இதுப்போல் க்ளாஸ் மூடியில் ஆவி வெளியே செல்லாது. 1/2 மணி நேரம் மிதமான தீயில் வைக்கவும்.
குறிப்பு :
இடையிடையே திறந்து பார்க்கக் கூடாது. நீராவி வெளியே சென்றால் சாதம் அடியில் பிடித்து விடும்.
சாதரணமூடி என்றால் அலுமினியம் பாயில் போட்டு ஒட்டி விட்டு அதன் மேல் மூடி போடவும். அல்லது பாத்திரத்தை சுற்றிலும் சப்பாத்தி மாவை ஒட்டி அதன் மேல் மூடி போடலாம்.
அரைமணி நேரம் கழித்து அடுப்பை அணைத்து பாத்திரத்தை இறக்கி விடவும். இப்போது பிரியாணி தயாராகி இருக்கும். வெயிட் அதிகம் இல்லாத கரண்டியினால் சாதத்தை மெதுவாக பிரட்டி விடவும்.
சுவையான ஹைதராபாத் சிக்கன் பிரியாணி தயார். விரும்பினால் முந்திரி, திராட்சை, போன்ற நட்ஸ் வகைகளை பட்டரில் ப்ரை செய்து போடலாம்.

தரைமட்டமாகும் அதிமுகவின் கோட்டை!



சொந்தக் கட்சிக்காரனே சூனியம் வைக்கும்போது, அடுத்தக்கட்சிக்காரன் ஏன் ஆசைப்படமாட்டான்? என்று தர்மபுரி அதிமுக வினர் கொந்தளித்துப்போய் உள்ளனர். சமீபகாலமாகவே அஇஅதிமுகவுக்குள் தலைமையை விட கீழ்மட்டத்தில் உள்ளவர்கள், தெளிவாகவே உள்ளார்கள். கட்சிக்கு சங்கு ஊதாமல் போவதில்லையென்று கங்கனம் கட்டிக்கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது அ.அதிமுக தலைமைக்கு தெரியுமா? இல்லை சில அல்லக்கைகள் தலைமைக்கு தெரியாமல் மறைக்கின்றனவா என்ற சந்தேகத்தோடு நம்மை பார்த்துக்கேட்டனர். நமக்கு தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் அவர்கள் சொல்வத சரியாக புரியாததால் தெளிவாக சொல்லுங்கள் என்று தருமபுரியில் ஆஜரானோம். மழை பெய்து ஓய்ந்துபோன ஒரு மாலை வேளையில் தருமபுரியில் கால்வைத்தோம். அங்குள்ள அஇஅதிமுகவினரை விசாரிக்க ஆரம்பித்தோம்.
ஆமாம், சார் மாமன் -மச்சான் சண்டைகள் போல கட்சிக்குள் அதுவும் தருமபுரி அஇஅதிமுகவுக்குள் ஏகப்பட்ட வில்லங்களும் நடக்கின்றன. ஆனால் சாமர்த்தியமாக இதை தலைமைக்கு தெரியாமல் மறித்துவிட்டு தலைமையிடம்  நல்லபெயர் எடுப்பதாக பச்சை துரோகம் பண்ணுகிறார்கள் சார். இதுபற்றி நீங்களாவது முதல்வரின் பார்வைக்கு தெரியப்படுத்தி தருமபுரி அதிமுக வுக்குள் ஒரு தெளிவு உண்டாக்குங்கள் சார் என்றார்கள் அனைவரும். தருமபுரி அதிமுகவின் கோட்டை என்பது சொல்லப்படும் ஒன்று. ஆனால் தற்போதைய நிலையைப் பார்த்தால் தருமபுரி அஇஅதிமுகவின் கோட்டையானது பலசேட்டைகளால் சின்னபின்னப்படுத்தப்பட்டு கிடக்கிறது. ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியவர்களோ நிறைய உள்ளடி வேளை செய்து கொண்டிருக்கிறார்கள். அப்புறம் எப்படி தமிழகத்தில் தருமபுரி அதிமுகவின் கோட்டை என்று சொல்லமுடியும்? என்ற கேள்வியை வைத்தார் தருமபுரி வாசி ஒருவர்.
தற்போதைய நிலவரம் என்ன என்பதை தெரிந்துகொள்ள களத்தில் இறங்கினோம். இங்கு நடக்கும் அனைத்து உள்ளடி டப்பாங்குத்து வேலைகளுக்கு அன்பழகனும் ஆகிய இருவருமே காரணம் என்று தருமபுரி மாவட்ட அனைத்து அஇஅதிமுக வினருமே சுறுகிறாரக்ள். அவர்கள் சொல்வதை வைத்துப்பார்க்கும் போது தருமபுரி மாவட்டத்தை இரண்டாவது அஇஅதிமுக  வாக நடத்துகிறார்கள் என்பது அப்பட்டமாய் தெரிந்தது. இவர்கள் இருவரும் எதில் கலந்து கொண்டாலும் தங்கள் பலம் எது வென்பதைத்தான் காட்டும் விதமாக நடந்துக்கொள்கிறார்கள் என்கிறாரகள் இங்குள்ளவர்கள்.
தற்போது கூட்டுறவு சங்க தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தான் மோதலின் உச்சக்கட்டம் வெளிச்சத்துக்கு வந்தது.  நிறைய இடங்களில் அடிதடிகள், மண்டை உடைப்புகள், சிலப்புகள் கழித்து எறிதல் போன்றவைகளும் நடந்தன. அதாவது ஒரு போர்க்களம் போல் காட்சியளித்தது என்றுகூட சொல்லலாம். இதில் குறிப்பிட்டு சொல்லக்கூடியது ஒன்று பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் உள்ள பி.பள்ளிப்பட்டி ஊராட்சியில் உள்ள கே.கே. 80 வாக்கவுண்டணூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித்தேர்தலில் நடந்த கும்தக்கடி வேலைகள்தான். இதற்கு நடந்த தேர்தலில் கட்சி கமிட்டி வி.சி.கவுதமன், தொகுதி இணைசெயலாளர் என். இராஜேந்திரன் ஒன்றிய செயலாளர் தென்னரசு மாவட்ட குழு உறுப்பினர் ஆகியோர் முன்னிலையில் பி.பள்ளிப்பட்டியில் கட்சி உறுப்பினர்கள் அமைச்சரின் உண்மை விசுவாசி ஊராட்சி மன்றத்தலைவர் பொன்மணி ஆகியோர் ஒரு மனதாக முடிவு செய்து ஒன்றிய மாணவரணி செயலாளர் மகேந்திரன் பி.இ,. என்பவரை தேர்ந்தெடுத்தனர்.
இவர் 7 ஆண்டுகள் இந்த பொறுப்பிலும், சென்ற சட்டமன்றத்தேர்தலில் பையர்நத்தம், பள்ளிப்பட்டி, போதக்காடு போன்ற பகுதிகளில் தேர்தல் பொறுப்பாளராகவும் சிறப்பாக செயல்பட்டு அனைவரையும் கவர்ந்தவர். இதுவே இவரை கூட்டுறவு சங்கத்தலைவராக கட்சியினர் அனைவரும் ஒரு மனதாக முடிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கட்சிக்காரர்கள் அனைவரும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டாலும் இவரின் இந்த வளர்ச்சியை பொறுக்கமுடியாத ஊராட்சிமன்றத் தலைவர் அஇஅதிமுக வைச் சேர்ந்த பொன்மணி சத்தம் போடாமல் செம உள்குத்து வேலையில் இறங்கிவிட்டார். கட்சி அறிவித்துள்ள வேட்பாளரை தோற்கடிப்பது என்ற முடிவு செய்து, அதை செயல்படுத்துவதில் மிக தீவிரமாகவும் இருக்கிறார்.
இதற்காக அமைச்சரின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றும் விட்டிருக்கிறார். இதற்காக கட்சியினர் பலரைச்சேர்த்துக்கொண்டும் தனது ஆதரவாளர்களோடும் ஒன்றினைந்து திடீரென போட்டி வேட்பாளரை உருவாக்கினார்.
உடனே கட்சி பொறுப்பாளர்கள் சென்னை சென்று அமைச்சரை சந்தித்தனர். அப்போது அமைச்சர் மகேந்திரனிடம் போட்டி வேட்பாளர்கள் செய்த செலவுகளுக்குண்டான பணத்தினைக் கொடுத்துவிடு மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றிருக்கிறார். அமைச்சர் மேலும் தலைவராக நீயேதான் இருப்பாய் என்று சப்போர்ட்டும் செய்துள்ளார் அமைச்சர்.
ஆனால் உடனே பின்னாடியே மகேந்திரனுக்கு சரியான ஆப்பு வைக்கும் வேலையையும் சொல்வார். அமைச்சர் சொன்னதை கொஞ்சம் கூட பிசகாமல் பொன்மணி கண்ணின் மணியாக செயல்படுத்தினார். பொன்மணி இருக்கிறாரே அவர் லேசுபட்டவரில்லை. அமைச்சரின் ஆசி கிடைத்துவிட்டால் போதும், அந்த பிரம்மனே வரம் கொடுத்துவிட்டதாக நினைத்து எல்லாவற்றையும் ஒரு கை பார்க்க கிளம்பி விடுவார். இதனடிப்படையில் ஒட்டுப்போடும் டைரக்டர்களை கடத்திக்கொண்டு போய் அவர்களுக்கு வேண்டியதை கவனித்து (பணம்-பெண்) மகேந்திரனை தோற்கடிக்கச் செய்து கட்சிக்கே சம்மந்தமில்லாத ராஜா என்பவரை தலைவராக்கிவிட்டார்.
கட்சிக்காக பாடுபட்ட மகேந்திரனோ அனைத்து தகுதிகளையும் உள்ளடக்கியவர். நன்றாக பழகக்கூடியவர், நல்ல பண்பாளர், பட்டதாரியும் கூட, மேலும் கட்சி வென்றால் அப்படியொரு உண்மை விசுவாசி, மாவட்ட செயலாளர் அன்பழகனுக்கு நெருக்கமானவர் என்பதால் அமைச்சர் தனது கட்சி வேட்பாளரையே தோற்கடித்திருப்பது இங்கு பரபரப்பாக பேசப்படுகிறது. ஊராட்சி மன்றத்தலைவர் பலரிடம் அமைச்சர் பெயரைச் சொல்லி வேலை வாங்கித்தருவதாக பணம் வாங்கியிருக்கிறார் என்றும், வேலை வாங்கித்தராமல் பணத்தை திரும்பி கேட்பவர்களிடம் கட்டப் பஞ்சாயத்து பேசி உங்களால் முடிந்ததைப் பார்த்துக்கொள்ளுங்கள் என்று தெனாவட்டாக அடியாட்களை வைத்து மிரட்டுகிறாராம்.
இவர் இரவு நேரங்களில் தன்னுடைய அடியாட்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்திலேயே குடியும், குடித்தனமுமாகவும், பெண்களுடன் சல்லாப லீலையும் செய்து வருவதாகவும் அந்தப்பகுதி மக்கள் குமுறுகிறார்கள். இத்தனை விசயங்களும் நடந்து முதல்வர் பார்வைக்கு போகவில்லையென்றால் இடையில் எங்கோ சீனப்பெருஞ்சுவர் இருப்பதாக தான் அர்த்தம்.

ஆடியோ விழாவில் 'வழக்கு எண்' நடிகையைப் பார்த்து ஆடிப்போன பிரபலங்கள்!









ஜன்னல் ஓரம் படத்தை இயக்கியிருக்கிறார் கரு பழனியப்பன். இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது. இதில் சூர்யா, அமீர் மற்றும் ஜன்னல் ஓரம் படத்தில் நடித்த பார்த்திபன், விமல், விதார்த் ஆகியோர் கலந்து கொண்டார்கள். இந்தப் படத்தில் கதாநாயகிகளாக பூர்ணா, வழக்கு எண் படத்தில் நடித்த மனிஷா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஆடியோ வெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு வரும் நடிகைகள் கொஞ்சம் மூடி மறைத்த உடைகளை அணிந்து வருவார்கள். ஆனால் மனிஷா அணிந்திருந்த ஆடையோ கவர்ச்சியின் உச்சம் தொட்டதாக இருந்தது. மேடையில் மனிஷா நின்றிருந்த போது ரசிகர்கள் அத்தனை பேரின் கண்களும் மனிஷாவையே மொய்த்திருந்தன. மேடையில் இருந்த பிரபலங்களில் சிலர் மனிஷாவின் உடையைப் பார்த்து ஆடிப் போயினர். நல்ல படங்களை எடுக்கும் கரு பழனியப்பன் படத்தின் விழாவுக்கு வருகிற நடிகை இவ்வளவு கவர்ச்சியாகவா வருவார்… என்று சிலர் கேள்வி எழுப்பினாலும் கவர்ச்சியாக நடிக்க தயார் என்பதற்கு அச்சாரமாகத்தான் மனிஷா அந்த மாதிரி உடையணிந்து வந்தார் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

‘ஆரம்பம்’ படத்துல ஆர்யாவும், டாப்ஸியும்…. ம்… ம்… : அம்பலப்படுத்திய அஜித்!



ரம்பம்’ படத்தில் ஆர்யாவும், டாப்ஸியும் அதிக நெருக்கம் காட்டியிருப்பதாக அம்பலப்படுத்தியிருக்கிறார் நடிகர் அஜித்.
‘பிக்கப் – ட்ராப்’ இந்த இரண்டு சமாச்சாரங்களிலும் இளம் ஹீரோக்கள் மத்தியில் பெயர் போனவர் நடிகர் ஆர்யா.
இந்த மாதிரியான விஷயங்களில் மத்த ஹீரோக்கள் எல்லாம் ஏங்கிக்கிடக்க  ஆர்யாவுக்கு மட்டும் தாரளாமாய் கிடைக்கிறதாம். அதனால் தான் என்னவோ அவரை பற்றி பேச வாயெடுத்தாலே மத்த ஹீரோக்கள் அவரை பொது மேடைகளில் காய்ச்சி எடுத்து விடுகிறார்கள்.
இதில் இப்போது அஜித்தும் சேர்ந்திருக்கிறார். அவரும் தன் பங்குக்கு ஆர்யாவின் ரொமான்ஸ் சீன்கள் ரகசியத்தை இப்போது அம்பலப்படுத்தியிருக்கிறார்.

‘வீரம்’ படத்தின் படப்பிடிப்புக்காக அஜித் வருகிற 20 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 5 ஆம் தேதி வரை ஹைதராபாத் செல்ல இருக்கிறார். அதனால் நேற்று சென்சார் ஆன ஆரம்பம் படம் அவருக்கு ஸ்பெஷலாக போட்டுக்காட்டப்பட்டது. படத்தைப் பார்த்த அவர் டைரக்டர் விஷ்ணுவர்தனை வியந்து பாராட்டினாராம்.
அதுமட்டுமில்லாமல் அதே படத்தில் நடித்திருக்கும் ஆர்யாவுக்கும் போனைப் போட்டு  படத்துல உங்க நடிப்பு பிரமாதமா இருக்கு. நான் நான் ரொம்ப ரசிச்சேன். குறிப்பா டாப்சியோட நீங்க பண்ற ரொமான்ஸ் சீன்கள் எல்லாமே ரொம்ப ரொம்ப இளமையா இருக்கு என்றாராம். பதிலுக்கு ஆர்யாவுக்கு உங்க படத்துல இதே மாதிரி இன்னொரு சான்ஸ் கெடைச்ச கண்டிப்பா நடிப்பேன் என்றாராம்.
பட் அந்தப்படத்துல டாப்சி இருப்பாங்களான்னு தெரியலையே ஆர்யா…?

RJ பாலாஜியின் 120 ரூபாய் விமர்சனமும் எழவு வீட்டு ஒப்பாரியும்!



T.R -க்கு பிறகு ஆங்கில வார்த்தைகளை கோர்வையாக, மூச்சு விடாமல், சொற்களில் வழுக்கி கொண்டு வரும் சில chinese வார்த்தைகளையும் சேர்த்து பேசி புகழ் பெற்ற Rj பாலாஜி-க்கு வணக்கம்.
உங்கள் 120 ருபாய் விமர்சனத்தை கேட்டு கடுப்பான கூட்டத்தில் நானும் ஒருவன். எனக்கு சில விஷயங்கள் புரியவில்லை. ஏன் நீங்கள் ஒரு படத்தை கண்டமேனிக்கு விமர்சனம் செய்யும் பொழுது ஒரு sarcastic point of view-வுடன் செய்கிறார்கள்? நீங்கள் ஏன் விமர்சனம் செய்கிறீர்கள் என்று கேட்க தான் தோன்றுகிறது. சரி.. அத விடுங்க.. ஒரு படத்தை பத்தி பேஸ்புக்கில் ஸ்ட்டஸ் போடும் முக்கால்வாசி நபர்கள் ரொம்ப ஈசி-யா ஒரு விமர்சகர் ஆகிடு ராங்க. பேஸ்புக்கில் ஸ்ட்டஸ் போடறவன் என்ன வேணாலும் போட்டுட்டு போறான்.
அத நீங்க சப்பகட்டாலான் சொல்லாதீங்க. ஸ்ட்டஸ் போட்டா அத அதிக பட்சமா பத்து பேர் பாப்பாங்க.. நீங்கள் ஒரு மீடியா-வில், ஒரு கோடி மக்கள், உங்கள் நிகழ்ச்சியை ரசித்து கேட்கிறார்கள் என்ற target audience-இடம் பேசுகிறார்கள். அவர்கள் உங்களின் நேயர்கள். நல்ல விஷயம். இருந்திட்டு போட்டும். அப்படி ஒரு பெரிய ரீச் இருக்குன்றது உங்களுக்கு தெரியும் போது ஒரு படத்த ஏன் நேர்மையா கொண்டு போய் சேர்க்க மாட்றீங்க. “மூடர் கூடம்” படத்துல வர நாய் ப்ளாஷ்பேக், 17-ஆவது ப்ளாஷ்பேக் ah?? ஏன் இப்படியாபட்ட ஒரு exaggeration? என் பக்கத்தில் படம் பார்க்காத நண்பன் கேட்டான் நெஜமாவே அது 17-வது ப்ளாஷ்பேக் ah? இது தான் நீங்கள் create பண்ணும் impact. ஒரு படத்த எந்த அளவுக்கு தப்பா address பண்றீங்கன்னு தெரிஞ்சிகோங்க..
“கோனார் உரை” போட்டா உங்களுக்கு என்ன வந்துச்சு? உங்க android app launch-ல நடிகர் தனுஷ் உங்கள பத்தி சொன்ன உடனே, மைக் உங்க கைல கெடச்சதும் உங்க நியாயத்த சொல்லி தனுஷ் சொன்னத defend பண்ணீங்கள.. அத ஒரு டைரக்டர் பண்றான். உங்களுக்கு அதனால என்ன பிரச்சன வந்துச்சு..? ஒரு கதையில் பல தகவல்கள் நேரடியாக சொல்லபடுகிறது.. சிலது நேரடியாக சொல்லாமல் யூகிக்க வைக்க படுகின்றன. அப்படியா பட்ட யூகங்களுக்கு ஒரு தெளிவுரை சொன்னால் உங்களுக்கு என்ன பிரெச்சனை? ஒரு படத்துல சில விஷயங்கள வைக்க ஒரு நோக்கம் இருக்கும். சிலதுக்கு நோக்கம் இருக்காது. எல்லாத்தையும் நோண்டி நொங்கு எடுத்து அதை பிரித்து மேய்ந்து உங்கள் ஷோவின் சுவாரசியத்தை கூட்டுகிறீர்கள். சரி.. நான் கேட்குறேன்..
“கல்யாண சமையல் சாதம்” படத்தோட trailerல நீங்க ஏன் பேசிருக்கீங்க? ‘கதைக்கும் என் narrationகும் சம்மந்தம் இல்ல’ன்னு துச்சமென தூக்கி போட்டு போக வேண்டியது தான?? வியாபார நோக்கத்துடன் முன் வைத்த ஒரு பதிவு தான அது. அது என்ன உங்களுக்கு மட்டும் ஒரு நியாயம் மத்தவங்களுக்கு ஒரு நியாயம். கத்தியால ஒருத்தன குத்தி கொன்னுட்ட பிறகு அப்புறம் என்ன மயித்துக்கு Take it easy. மயிரு கேட்ட வார்த்தை இல்லை. “கடல்” படத்த தொறந்த வீட்ல நாய் நொழஞ்ச மாதிரி கலாய்கிறீங்க? “skyfall” உனக்கு என்னயா பாவம் பண்ணுச்சு??
மாஸ் மீடியாவில், மக்கள் ரசனையை மட்டும் வேராக நம்பி ஒரு அங்கீகாரம் தேடி கொண்டு அலையும் நாகரீக கோமாளிகள் நாங்கள். அதே மாஸ் மீடியாவில் இருந்து கொண்டு எழவு வீட்ல ஒப்பாரி வெக்கிற மாதிரி ஒரு படத்துக்கு இருக்கிற சட்டைய நார் நாரா கிழிச்சி உங்கள் sarcastic point of view-ன் துணை கொண்டு buffoon வேஷம் போட்டு விட்டு அழகு பார்த்து ரசித்து கிண்டல் செய்கிறீர்கள். நீங்கள் ஒரு படத்துக்கு Common audience- ன் point of view சொல்வதாக கேள்விபட்டேன். நீங்கள் யார் common audience போல பேசுவதற்கு? அதெல்லான் இருக்கட்டும்.. யார் அந்த common audience?? Audience-ல் இருக்கும் ஒவ்வொருதரும் ஒரு தனி ரசனை கொண்ட individuals. இப்படி தனி தனியாக பிரிக்கப்படும் தனிநபர்களின் கருத்துகளை எப்படி ஒன்று சேர்க்க முடியும். அவர்களுக்கு ஒரு Tag கொடுக்க முடியாது. சரி.. அப்படியே வெச்சிப்போம். நீங்கள் கொடுத்து படம் பார்க்கும் 120 ரூபாயும் நாங்கள் செலவு செய்து படம் பார்க்கும் 120 ரூபாயும் ஒன்றாகி விடுமா என்ன??
நீங்கள் 120 ருபாய் கொடுத்து படம் பார்த்து அதை பகிரங்கமாக கலாய்த்து உங்கள் சம்பளமாக மாற்றி கொள்கிறீர்கள். நாங்கள் செலவு செய்வது எங்களுக்கு வெறும் செலவு. உங்கள் show-ன் டைட்டிலே ஒரு உச்சகட்ட அபத்தம். நீங்கள் பேசும் அந்த சில நிமிடங்களை சுவாரசிய மாக்கி கொள்ள, படங்கள் தான் உங்களுக்கு கிடைத்ததா? உங்களுக்கு பிடிச்சிருக்கு பிடிக்கலன்னு பகிர்ந்துகுறீங்க.. அத ஏன் மாஸ் மீடியால பண்றீங்க? உங்கள் நண்பர்கள் வட்டத்துலையே பண்ணலாமே. இங்கே ஒரு critic ஆக இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.
இங்கு யாரும் ஒரு critic ஆக விமர்சனம் எழுதுவதில்லை என்பது என் கருத்து .. இன்னும் opinion spillers ஆக தான் இருகிறார்கள். நான் கவனித்ததை வைத்து சரியாக சொல்ல வேண்டுமானால் strong opinion spillers மற்றும் weak opinion spillers ஆக இருகிறார்கள். ஒரு படத்தை யாரும் சரியாக பார்ப்பதில்லை. ஒரு படத்தின் விமர்சனம் அந்த படத்தின் quantitative analysis, qualitative analysis, genre and sub-genre description, subjective point of view, objective point of view, plot analysis, budget grade(low or high budget), மற்றும் அந்த படம் target செய்யும் audience(adult(A) or universal(U)(U/A) or anything specific) அவர்களிடம் சரியாக சென்று அடைய உதவ வேண்டும்.
இந்த பிரிவுகளின் அடிபடையில் படத்தில் இருக்கும் நெளிவு சுளிவுகளை நேர்மையாக சொல்ல வேண்டும். யாரும் இதை பண்ணுவதே இல்லை. நீங்களும் தான். எங்கள் வயித்தில் அடித்து விட்டு உங்கள் வயிறுக்கு எங்களை தீணி ஆக்குவது என்ன நியாயம்? பெண்களை தாருமாராக cross talk-ல் கலாய்த்து விட்டு Being humanல் சமத்து பாப்பா போல ஏன் பேச வேண்டும்? இதுக்கு நடுவுல வெறுப்பேத்தர மாதிரி “சிசிபுஜிகி”(ஸ்பெல்லிங் mistake இருந்தால் மன்னிக்கவும்), “அட” மற்றும் nursery rhymesல் கடைசியாக முடியும் rhyming வார்த்தைகளை சுட்டு, ஒரு படத்தை கலாய்க்க ஒரு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணி, நாகரீக முன்னேற்றத்தால் ஆரம்பத்தில் ஒரு ‘sorry’ இறுதியில் ஒரு டன் டொன் டன் என்று அற்புதமான இசை சொற்களாலும் அருமையாக programய் ஆரம்பித்து முடிக்கிறீர்கள். ஒரு படத்தை audience இடம் சரியாக சேர்க்கும் பட்சத்தில் அது positive review or negative review எதுவாக இருந்தாலும் சரி.. அதை ஒப்பு கொள்கிறோம். இல்ல இப்படி தான் நான் பண்ணுவேன்னு சொன்னா நான் அதை பகிரங்கமாக கண்டிக்கிறேன். இதை தெரிய படுத்திகொள்ள தான் இந்த முதல் post..

Post Script: I’m fundamentally, basically, sorry.. Yours faithfully.. Ada!!

Friday, October 11, 2013

நய்யாண்டி நஸ்ரியாவின் கடைசி படமா? இனி வாய்ப்பு கொடுப்பார்களா இயக்குநர்கள்?



நய்யாண்டி படத்தில் குறிப்பிட்ட ஒரு காட்சிக்காக நஸ்ரியா கமிஷனர் அலுவலகம் வரைக்கும் போயிருப்பது அவரை வைத்து படம் இயக்கிவரும் இயக்குநர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. நஸ்ரியா இப்போது திருமணம் என்னும் நிக்காஹ் என்ற படத்தில் ஜெய்யுடன் ஜோடி சேர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து ஜீவாவுக்கு ஜோடியாக நீ நல்ல வருவடா என்ற படத்திலும் நடிக்க உள்ளார். இவற்றில் திருமணம் என்னும் நிக்காஹ் படம் படப்பிடிப்பில் இருக்கிறது. இன்னும் பாதிக்குமேல் முடிந்துவிட்ட இந்தப் படத்தில் மீதமுள்ள காட்சிகள் இப்போது படமாக்கப்பட்டு வருகின்றன. அடுத்து ஜீவாவுடன் நடிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறாரே தவிர இன்னும் படப்பிடிப்பு துவங்கப்படவில்லை. சற்குணம் மீது அவர் புகார் கொடுத்திருப்பதும், படத்தை தடை செய்ய நீதிமன்றத்துக்கு போவேன் என்று சொல்லியிருப்பதும் அவரை வைத்து படம் எடுக்க வேண்டும் என்று நினைத்த இயக்குநர்களுக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. ஜீவாவுடன் நடிக்கவிருக்கும் படத்தில் நஸ்ரியா நீக்கப்படுவார் என்றே தெரிகிறது. ஒருவேளை அவ்வாறு நீக்கப்பட்டால் தமிழ் சினிமாவின் கதவுகள் நஸ்ரியாவுக்கு இழுத்து மூடப்படக்கூடும் என்பதில் சந்தேகமில்லை.