Saturday, October 19, 2013

தரைமட்டமாகும் அதிமுகவின் கோட்டை!



சொந்தக் கட்சிக்காரனே சூனியம் வைக்கும்போது, அடுத்தக்கட்சிக்காரன் ஏன் ஆசைப்படமாட்டான்? என்று தர்மபுரி அதிமுக வினர் கொந்தளித்துப்போய் உள்ளனர். சமீபகாலமாகவே அஇஅதிமுகவுக்குள் தலைமையை விட கீழ்மட்டத்தில் உள்ளவர்கள், தெளிவாகவே உள்ளார்கள். கட்சிக்கு சங்கு ஊதாமல் போவதில்லையென்று கங்கனம் கட்டிக்கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது அ.அதிமுக தலைமைக்கு தெரியுமா? இல்லை சில அல்லக்கைகள் தலைமைக்கு தெரியாமல் மறைக்கின்றனவா என்ற சந்தேகத்தோடு நம்மை பார்த்துக்கேட்டனர். நமக்கு தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் அவர்கள் சொல்வத சரியாக புரியாததால் தெளிவாக சொல்லுங்கள் என்று தருமபுரியில் ஆஜரானோம். மழை பெய்து ஓய்ந்துபோன ஒரு மாலை வேளையில் தருமபுரியில் கால்வைத்தோம். அங்குள்ள அஇஅதிமுகவினரை விசாரிக்க ஆரம்பித்தோம்.
ஆமாம், சார் மாமன் -மச்சான் சண்டைகள் போல கட்சிக்குள் அதுவும் தருமபுரி அஇஅதிமுகவுக்குள் ஏகப்பட்ட வில்லங்களும் நடக்கின்றன. ஆனால் சாமர்த்தியமாக இதை தலைமைக்கு தெரியாமல் மறித்துவிட்டு தலைமையிடம்  நல்லபெயர் எடுப்பதாக பச்சை துரோகம் பண்ணுகிறார்கள் சார். இதுபற்றி நீங்களாவது முதல்வரின் பார்வைக்கு தெரியப்படுத்தி தருமபுரி அதிமுக வுக்குள் ஒரு தெளிவு உண்டாக்குங்கள் சார் என்றார்கள் அனைவரும். தருமபுரி அதிமுகவின் கோட்டை என்பது சொல்லப்படும் ஒன்று. ஆனால் தற்போதைய நிலையைப் பார்த்தால் தருமபுரி அஇஅதிமுகவின் கோட்டையானது பலசேட்டைகளால் சின்னபின்னப்படுத்தப்பட்டு கிடக்கிறது. ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியவர்களோ நிறைய உள்ளடி வேளை செய்து கொண்டிருக்கிறார்கள். அப்புறம் எப்படி தமிழகத்தில் தருமபுரி அதிமுகவின் கோட்டை என்று சொல்லமுடியும்? என்ற கேள்வியை வைத்தார் தருமபுரி வாசி ஒருவர்.
தற்போதைய நிலவரம் என்ன என்பதை தெரிந்துகொள்ள களத்தில் இறங்கினோம். இங்கு நடக்கும் அனைத்து உள்ளடி டப்பாங்குத்து வேலைகளுக்கு அன்பழகனும் ஆகிய இருவருமே காரணம் என்று தருமபுரி மாவட்ட அனைத்து அஇஅதிமுக வினருமே சுறுகிறாரக்ள். அவர்கள் சொல்வதை வைத்துப்பார்க்கும் போது தருமபுரி மாவட்டத்தை இரண்டாவது அஇஅதிமுக  வாக நடத்துகிறார்கள் என்பது அப்பட்டமாய் தெரிந்தது. இவர்கள் இருவரும் எதில் கலந்து கொண்டாலும் தங்கள் பலம் எது வென்பதைத்தான் காட்டும் விதமாக நடந்துக்கொள்கிறார்கள் என்கிறாரகள் இங்குள்ளவர்கள்.
தற்போது கூட்டுறவு சங்க தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தான் மோதலின் உச்சக்கட்டம் வெளிச்சத்துக்கு வந்தது.  நிறைய இடங்களில் அடிதடிகள், மண்டை உடைப்புகள், சிலப்புகள் கழித்து எறிதல் போன்றவைகளும் நடந்தன. அதாவது ஒரு போர்க்களம் போல் காட்சியளித்தது என்றுகூட சொல்லலாம். இதில் குறிப்பிட்டு சொல்லக்கூடியது ஒன்று பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் உள்ள பி.பள்ளிப்பட்டி ஊராட்சியில் உள்ள கே.கே. 80 வாக்கவுண்டணூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித்தேர்தலில் நடந்த கும்தக்கடி வேலைகள்தான். இதற்கு நடந்த தேர்தலில் கட்சி கமிட்டி வி.சி.கவுதமன், தொகுதி இணைசெயலாளர் என். இராஜேந்திரன் ஒன்றிய செயலாளர் தென்னரசு மாவட்ட குழு உறுப்பினர் ஆகியோர் முன்னிலையில் பி.பள்ளிப்பட்டியில் கட்சி உறுப்பினர்கள் அமைச்சரின் உண்மை விசுவாசி ஊராட்சி மன்றத்தலைவர் பொன்மணி ஆகியோர் ஒரு மனதாக முடிவு செய்து ஒன்றிய மாணவரணி செயலாளர் மகேந்திரன் பி.இ,. என்பவரை தேர்ந்தெடுத்தனர்.
இவர் 7 ஆண்டுகள் இந்த பொறுப்பிலும், சென்ற சட்டமன்றத்தேர்தலில் பையர்நத்தம், பள்ளிப்பட்டி, போதக்காடு போன்ற பகுதிகளில் தேர்தல் பொறுப்பாளராகவும் சிறப்பாக செயல்பட்டு அனைவரையும் கவர்ந்தவர். இதுவே இவரை கூட்டுறவு சங்கத்தலைவராக கட்சியினர் அனைவரும் ஒரு மனதாக முடிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கட்சிக்காரர்கள் அனைவரும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டாலும் இவரின் இந்த வளர்ச்சியை பொறுக்கமுடியாத ஊராட்சிமன்றத் தலைவர் அஇஅதிமுக வைச் சேர்ந்த பொன்மணி சத்தம் போடாமல் செம உள்குத்து வேலையில் இறங்கிவிட்டார். கட்சி அறிவித்துள்ள வேட்பாளரை தோற்கடிப்பது என்ற முடிவு செய்து, அதை செயல்படுத்துவதில் மிக தீவிரமாகவும் இருக்கிறார்.
இதற்காக அமைச்சரின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றும் விட்டிருக்கிறார். இதற்காக கட்சியினர் பலரைச்சேர்த்துக்கொண்டும் தனது ஆதரவாளர்களோடும் ஒன்றினைந்து திடீரென போட்டி வேட்பாளரை உருவாக்கினார்.
உடனே கட்சி பொறுப்பாளர்கள் சென்னை சென்று அமைச்சரை சந்தித்தனர். அப்போது அமைச்சர் மகேந்திரனிடம் போட்டி வேட்பாளர்கள் செய்த செலவுகளுக்குண்டான பணத்தினைக் கொடுத்துவிடு மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றிருக்கிறார். அமைச்சர் மேலும் தலைவராக நீயேதான் இருப்பாய் என்று சப்போர்ட்டும் செய்துள்ளார் அமைச்சர்.
ஆனால் உடனே பின்னாடியே மகேந்திரனுக்கு சரியான ஆப்பு வைக்கும் வேலையையும் சொல்வார். அமைச்சர் சொன்னதை கொஞ்சம் கூட பிசகாமல் பொன்மணி கண்ணின் மணியாக செயல்படுத்தினார். பொன்மணி இருக்கிறாரே அவர் லேசுபட்டவரில்லை. அமைச்சரின் ஆசி கிடைத்துவிட்டால் போதும், அந்த பிரம்மனே வரம் கொடுத்துவிட்டதாக நினைத்து எல்லாவற்றையும் ஒரு கை பார்க்க கிளம்பி விடுவார். இதனடிப்படையில் ஒட்டுப்போடும் டைரக்டர்களை கடத்திக்கொண்டு போய் அவர்களுக்கு வேண்டியதை கவனித்து (பணம்-பெண்) மகேந்திரனை தோற்கடிக்கச் செய்து கட்சிக்கே சம்மந்தமில்லாத ராஜா என்பவரை தலைவராக்கிவிட்டார்.
கட்சிக்காக பாடுபட்ட மகேந்திரனோ அனைத்து தகுதிகளையும் உள்ளடக்கியவர். நன்றாக பழகக்கூடியவர், நல்ல பண்பாளர், பட்டதாரியும் கூட, மேலும் கட்சி வென்றால் அப்படியொரு உண்மை விசுவாசி, மாவட்ட செயலாளர் அன்பழகனுக்கு நெருக்கமானவர் என்பதால் அமைச்சர் தனது கட்சி வேட்பாளரையே தோற்கடித்திருப்பது இங்கு பரபரப்பாக பேசப்படுகிறது. ஊராட்சி மன்றத்தலைவர் பலரிடம் அமைச்சர் பெயரைச் சொல்லி வேலை வாங்கித்தருவதாக பணம் வாங்கியிருக்கிறார் என்றும், வேலை வாங்கித்தராமல் பணத்தை திரும்பி கேட்பவர்களிடம் கட்டப் பஞ்சாயத்து பேசி உங்களால் முடிந்ததைப் பார்த்துக்கொள்ளுங்கள் என்று தெனாவட்டாக அடியாட்களை வைத்து மிரட்டுகிறாராம்.
இவர் இரவு நேரங்களில் தன்னுடைய அடியாட்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்திலேயே குடியும், குடித்தனமுமாகவும், பெண்களுடன் சல்லாப லீலையும் செய்து வருவதாகவும் அந்தப்பகுதி மக்கள் குமுறுகிறார்கள். இத்தனை விசயங்களும் நடந்து முதல்வர் பார்வைக்கு போகவில்லையென்றால் இடையில் எங்கோ சீனப்பெருஞ்சுவர் இருப்பதாக தான் அர்த்தம்.

No comments:

Post a Comment