Tuesday, October 22, 2013

சூர்யா- ஜோதிகா காதல் மலர்ந்த 'காக்க காக்க' தாணுவை காக்க வந்த படம்!

நடிகை ஜோதிகா துவக்கிய இந்திரா சிறுவர் பராமரிப்பு இணையத்தளம்



குழந்தைகள் மீது அக்கறைகாட்டும் ஜோதிகா


நடிகை ஜோதிகா துவக்கிய இந்திரா சிறுவர் பராமரிப்பு இணையத்தளம்


குழந்தைகள் மீது அக்கறைகாட்டும் ஜோதிகா

'ஆளவந்தான்' படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தில் ஒரு பகுதியை ஈடுசெய்யும் விதத்தில், தாணுவின் 'காக்க காக்க' படம் வெற்றி பெற்றது.

இந்தப் படத்தில் நடித்த போதுதான், சூர்யாவுக்கும், ஜோதிகாவுக்கும் காதல் மலர்ந்தது.

திரை உலக அனுபவம் பற்றி பட அதிபர் `கலைப்புலி' தாணு தொடர்ந்து கூறியதாவது:-

ஆளவந்தான் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது, 'என்ன சொல்லப் போகிறாய்?' என்ற படத்துக்கும் பூஜை போட்டேன். புதுமுகங்கள் நந்தா -காயத்ரி ரகுராம் என இளம் ஜோடிகளை அந்தப்படத்தில் அறிமுகப்படுத்த இருந்தேன்.

நந்தா ம.தி.மு.க. பொருளாளரும், முன்னாள் மத்திய மந்திரியுமான கண்ணப்பனின் மகள் வயிற்றுப் பேரன். காயத்ரி ரகுராம், டான்ஸ் மாஸ்டர் ரகுராம் -கிரிஜா தம்பதியரின் பெண்.

நடிகர் கமலஹாசன் விளக்கேற்றி வைக்க பூஜை நடந்தது. அதே வேகத்தில் படம் வளரத் தொடங்கியது.

படத்தில் காயத்ரி ரகுராமுக்கு ஒரு கண்ணியமான டீச்சர் வேடம். அந்த கேரக்டரில் அவர் நடித்து படம் வெளிவந்திருந்தால் தொடர்ந்து சிறந்த நடிகை என்ற பட்டியலிலும் காயத்ரி இடம் பிடித்திருப்பார். ஆனால் இந்தப் படத்தில் அவர் நடித்த நேரத்தில் பிரபுதேவாவுடன் நடித்த 'சார்லி சாப்ளின்' படம் ரிலீசானது.

அந்தப் படத்தில் அவர் பிரபுதேவா தோள் மீது காலைத் தூக்கிப்போட்டு நடித்ததால், அடுத்து வரவிருக்கும் இந்தப் படத்தில் அவரது கேரக்டர் பாதிக்கப்படும் என்று எண்ணினோம். அதனால் படத்தில் இருந்து காயத்ரி விடுவிக்கப்பட்டார்.

படத்தின் நாயகன் நந்தா பற்றி சொல்ல வேண்டும். அவருக்கு நடிப்பு ஆர்வம் இருந்ததால் பிலிம் இன்ஸ்டிடிïட்டில் சேர்த்து விட்டதே நான்தான். நடிப்புக்காக தங்கப்பதக்கம் வாங்கினார். என் மகள் திருமணத்தின்போது நந்தாவின் அப்பா தனது மகன் நந்தாவை என் கையில் பிடித்துக் கொடுத்து, 'என் மகனை நடிகனாக்க வேண்டியது உங்கள் பொறுப்பு' என்று சொல்லி கண்கலங்கினார்.

இது நடந்து இரண்டு நாட்களில் கோயம்புத்தூரில் உள்ள ஆஸ்பத்திரியில் நந்தாவின் அப்பா மாரடைப்பால் மரணம் அடைந்த செய்தி கிடைக்கிறது. அதிர்ச்சி அடைந்த நான் அவர் இல்லம் போனபோது, நந்தாவின் அம்மா கண்ணீருடன் நந்தாவை காட்டி, 'இவங்க அப்பா ஆசை நிறைவேறுமா? என் மகன் உங்க படத்தில் நடிப்பானா?' என்று கேட்டார். மகன் மேல் பெற்றோருக்கு இருந்த அக்கறையும், கவலையுமே என்னை நந்தாவுக்காக 'என்ன சொல்லப்போகிறாய்?' படத்தை எடுக்கச் செய்தன.

இப்படி ஆசைப்பட்டு நடிக்க வந்த நந்தாவுக்கு, படத்தின் டைரக்டரிடம் கிடைத்தது எதிர்மாறான அனுபவம். டைரக்டரின் அணுகுமுறையும் பேச்சும் நந்தாவை மனதளவில் காயப்படுத்த, என்னை வந்து சந்தித்து ஒரு கடிதம் கொடுத்தார். 'டைரக்டரின் பேச்சும், நடந்து கொள்ளும் விதமும் என்னால் படத்துடன் ஒன்ற முடியாமல் செய்துவிட்டது. இவரை வைத்து நீங்கள் தொடர்ந்து படம் எடுத்தால் ரொம்ப நஷ்டப்பட்டுப் போவீர்கள்' என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். படம் தொடர்ந்து வளராமல் நிறுத்தப்பட இதுவும் ஒரு காரணம்.

இதற்கிடையே படத்தின் டைரக்டர் என்னை சந்தித்து, 'இந்தக் கதையை வேறு நடிகரை வைத்து தயாரிக்கப்போகிறேன். எனவே, கதையை எனக்குத் தரவேண்டும்' என்று கேட்டார். படத்தை அதுவரை தயாரித்த வகையில் ஏற்பட்ட நஷ்டத்தை அவரிடம் கேட்காமல், கதையை அவருக்கு எழுதிக் கொடுத்தேன். 

நந்தாவின் எதிர்காலம் நின்றுவிடக்கூடாதே, என்பதற்காக நான் தயாரித்த படம் 'புன்னகைப்பூவே.'

இதற்கென நான் எனது 'விஐபி' படத்தை இயக்கிய டைரக்டர் சபாவை அழைத்துப் பேசினேன். மனோகர் என்ற எழுத்தாளர் படத்தின் கதையை எழுதி இருந்தார்.

படத்தில் புதுமுகம் ரேகா, காவேரி நடித்தார்கள். காமெடிக்கு வடிவேலு. யுவன் சங்கர் ராஜா இசை அமைத்ததோடு, ஒரு பாடல் காட்சியில் நடனமாடி நடித்தார்.

இந்த படத்துக்காக, முதன் முதலாக `டைட்டல் பார்க்'கில் படம் எடுக்க அனுமதி வாங்கினேன். தமிழகம் முழுதும் நானே ரீலீஸ் செய்தேன். என்ன சொல்லப் போகிறாய், புன்னகைப் பூவே இரண்டு படத்திலும் ரூ.2 கோடி இழப்பு ஏற்பட்டது.

'புன்னகைப்பூவே' தயாரிப்பில் இருந்த நேரத்தில், டைரக்டர் ராஜீவ் மேனனின் நண்பர் பார்த்திபன் என்னை சந்தித்தார். `எனது நண்பர் கவுதம் மேனன், டைரக்டர் ராஜீவ் மேனனிடம் உதவியாளராக இருந்தவர். முதன் முதலாக 'மின்னலே' என்ற படத்தை இயக்கினார். படம் வெற்றி. இப்போது அடுத்து ஒரு கதை தயார் செய்திருக்கிறார். நீங்கள் சம்மதித்தால், கதை சொல்ல அழைத்து வருகிறேன்' என்றார்.

'என்ன பட்ஜெட் ஆகும்?' என்று கேட்டேன். 

ரூ.'2 1/2 கோடி ஆகும். முதல் பிரதி அடிப்படையில் படம் பண்ணித்தர சம்மதம். சூர்யா -ஜோதிகா ஜோடி. அவர்கள் சம்பளம்கூட இதற்குள்தான்' என்றார்.

'ராஜீவ் மேனனின் உதவியாளர் என்றால் எனக்குத் தெரிந்திருக்குமே' என்றேன்.

'அவர் உங்கள் 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' படத்தில் பணியாற்றவில்லை. அதற்குமுன் வெளிவந்த 'மின்சாரக் கனவு' வரை பணியாற்றிவிட்டு, 'மின்னலே' படம் பண்ணப் போய்விட்டார்' என்றார்.

'சரி! நாளைக்கு அழைத்து வா' என்றேன்.

மறுநாள் காலை 7 மணிக்கெல்லாம் கதை சொல்ல வந்துவிட்டார் கவுதம் மேனன். கிட்டத்தட்ட 3 மணி நேரம் கதை சொன்னார்.

கதை எனக்குப் பிடித்து விட்டது. நான் அவரிடம், 'ரொம்ப நல்லாயிருக்கு தம்பி! இந்தக் கதையை அப்படியே படமாக எடுத்தால் திரையில் 3 1/2 மணி நேரம் ஓடும்! தியேட்டர்களில் 3 1/2 மணி நேர படத்தை போட ஆபரேட்டர்களே இப்போதெல்லாம் விரும்புவதில்லை.

2 ரீலை அவர்களாகவே எடுத்து வைத்துவிட்டு மீதி படத்தை ஓட்டிவிடுவார்கள். 2 1/2 மணி நேரம் ஓடக்கூடிய அளவில் காட்சிகளை கோர்வைப்படுத்து என்றேன்.

அப்போதே அட்வான்சாக ரூ.2 லட்சம் கொடுத்தேன். கண்களில் நீர் ததும்ப பணத்தை வாங்கிக் கொண்டார்.

முதல் பிரதி தயாராவது வரை 2 1/2 கோடி ரூபாய் பட்ஜெட் என்று நிர்ணயித்து ஒப்பந்தம் செய்து கொண்டேன். அப்போதே 18 லட்சம் ரூபாய் கொடுத்தேன். ஏற்கனவே ரூ.2 லட்சம் கொடுத்திருந்தேன். இதையும் சேர்த்து ரூ.20 லட்சம்.

ஆனால் பணம் பெற்றுக்கொண்ட இரண்டாவது நாளே பணம் தேவை என்று வந்தார். நான் அவரிடம், 'நேற்று கொடுத்த ரூ.18 லட்சத்தை என்ன பண்ணினீங்க?' என்று கேட்டேன். அதற்கு அவர் சிரிப்பையே பதிலாக தந்தார்.

இப்போது எனக்குள் ஒரு சின்ன சந்தேகம் எட்டிப்பார்த்தது. அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், 'கவுதம்! நீங்க யார் யாருக்கு பணம் கொடுக்கிறீர்களோ அத்தனைக்கும், எனது வங்கிக் கணக்கில் ஒரு அக்கவுண்ட் ஒப்பன் பண்ணித்தந்து விடுகிறேன். நீங்கள் கொடுக்கிற செக் அதில் பாஸ் ஆகிவிடும் என்றேன்.

சில நாட்களில் கவுதம் மேனன் என்னைப் பார்க்க வந்தார். 'சார்! நான் வீடு கட்டிக் கொண்டிருக்கிறேன். எனக்கு லோன் வாங்கிக் கொடுங்கள்' என்று கேட்டார்.

நானும் தாமதமில்லாமல் வீட்டை கட்ட லோன் வாங்கிக் கொடுத்தேன். ஆனால் அந்தக் கடனை என்னைத்தான் கட்ட வைத்தார். அதுபோக வீடு முடிவடையும் தருவாயில் 'ஒரு 5 லட்சம் ரூபாய் இருந்தால் முடித்து விடுவேன்' என்று வந்தார். அதற்கும் ஏற்பாடு செய்தேன்.

படப்பிடிப்பு தொடங்கியது. அவர் கொடுத்த சம்பளப் பட்டியலில், சூர்யாவைவிட ஜோதிகாவுக்கு சம்பளம் அதிகம் என எழுதப்பட்டு இருந்தது. 'இது எப்படி? ஹீரோவைவிட ஹீரோயினுக்கு சம்பளம் அதிகம் என்றால் எந்த ஹீரோ ஒப்புக்கொள்வார்?' என்று கேட்டேன்.

அதற்கும் சிரிப்பையே பதிலாகத் தந்தார்.

இந்தப் படத்தில் வில்லன் கேரக்டருக்கும் ரொம்பவே முக்கியத்துவம் இருந்தது. 'இந்த கேரக்டருக்கு யாரை போட்டு இருக்கிறீர்கள்?' என்று கேட்டேன்.

'யுனிவர்சிட்டி படத்தில் ஹீரோவாக நடித்த ஜீவன்தான் இந்தப் படத்தின் மெயின் வில்லன்' என்றார்.

'முக்கியமான வில்லன் கேரக்டருக்கு ஜீவன் தாங்குவாரா?' என்று என் சந்தேகத்தை கேட்டேன்.

'எனக்கு நம்பிக்கை இருக்கிறது சார். ஜீவன் நடிப்பினால் இந்த வில்லன் கேரக்டரும் பேசப்படும்' என்றார்.

'டைரக்டரான உங்களுக்கே அந்த நம்பிக்கை இருந்தால், அவரே நடிக்கட்டும்' என்றேன்.

இந்தப்படம் வளர்ந்து கொண்டிருந்த நேரத்தில்தான் சூர்யா -ஜோதிகா காதல் கொஞ்சம் கொஞ்சமாய் வெளிப்படத்தொடங்கியது. ஒருநாள் எனது அலுவலகத்தில் படப்பிடிப்பு நடந்த நேரத்தில், `நந்தி சாமியார்' என்ற பெயர் கொண்ட சாமியாரை காஞ்சீபுரம் பாபு தியேட்டர் அதிபர் அழைத்து வந்தார். எல்லோருக்கும் சாமியார் ஆசி வழங்கினார். அதோடு சிலரிடம் அவர்களின் பிரச்சினைகளை 5 நிமிட நேரத்துக்கு குறையாமல் பேசினார்.

நடிகர் சூர்யாவும் சாமியாரை சந்தித்து ஆசி பெற்றார். அவரிடம் தனியாக பேசிக்கொண்டிருந்த நேரத்தில் சூர்யாவின் மனதில் இருந்த காதல் விஷயங்களை சாமியார் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்த, சூர்யா மிரண்டு போய்விட்டார். 'எப்போது திருமணம் செய்து கொள்ளலாம்?' என்று சூர்யா கேட்டபோது, 'இந்தப்படத்தில் நடித்து முடித்ததும் திருமணம் செய்து கொள்' என்று கூறினார்.

சந்தோஷமாய் சாமியாரிடம் விடைபெற்றுப் போனார், சூர்யா. அவர் போனதும் என்னிடம் பேசிய சாமியார், 'பையன் (சூர்யா) காதலில் ரொம்பவே தீவிரமாக இருக்கிறான். சீக்கிரம் படத்தை எடுத்து முடி' என்று சொன்னார்.

No comments:

Post a Comment