Friday, September 20, 2013

என்றும் இளமையோடு இருக்கணுமா ஆயில் மஜாஜ் பண்ணுங்க…!



வயதாக ஆக தோற்றத்தில் முதுமை ஏற்படுவது இயற்கை. ஆனால் அதில் இருந்து தப்பித்துக் கொள்ள எண்ணெய் மசாஜ் அடிக்கடி செய்யலாம். சில எண்ணெய் வகைகளும் அவற்றை பயன்படுத்தி மசாஜ் செய்வதால் ஏற்படும் பலன்கள் பற்றியும் இப்போது பார்க்கலாம்.
திராட்சை எண்ணெ – இதில் மஜாஜ் செய்தால் தோலின் சுருக்கங்கள் நீங்கும். தழும்புகள் இருந்தால் நாளடைவில் மறைந்து விடும். எந்த வயதிலும் இளமையாக இருக்க விரும்புபவர்கள் தொடர்ந்து இந்த மஜாஜை செய்து வந்தால் முகச் சுருக்கம் நீங்கி இளமையாக ஜொலிக்க ஆரம்பித்துவிடுவீர்கள்.

அவகோடா எண்ணெய் – இந்த எண்ணெயில் இருக்கும் ஒமேகா3பேட்டி ஆசிட் அந்த கொலாஜெனின் உற்பத்தியை அதிகரித்து தளர்ச்சியை குறைத்து விடும். இந்த எண்ணெயை வைத்து மஜாஜ் செய்தால் சருமம் இறுக்கமடைந்து முகத்தில் உள்ள சருமத்துளைகளை விரைவில் போக்கி விடும்.
நல்லெண்ணெய் – உடலுக்கு செய்யும் மஜாஜிற்கு பயன்படுத்தும் எண்ணெயில் மிகவும் சிறந்தது நல்லெண்ணெய் தான். சில நேரங்களில் எண்ணெய் மஜாஜ் பருக்களை ஏற்படுத்தும். ஆனால் நல்லெண்ணெய்யை பயன்படுத்தினால் எந்த ஒரு பிரச்சனையும் வராது. இந்த எண்ணெய் சருமத்தில் ஏற்படும் பருக்களை நீக்கி விடும்.
ஆலிவ் எண்ணெய் – இந்த எண்ணெயை வைத்து மஜாஜ் செய்யும் போது எண்ணெயை சூடேற்றக்கூடாது. சூடாக்கினால் அதில் உள்ள சத்துகள் அனைத்தும் போய்விடும்.

No comments:

Post a Comment