Saturday, September 21, 2013

வருத்தபடாத வாலிபர் சங்கம் - விமர்சனம் அல்ல நிஜம்



எல்லா ஊரிலும் இல்லாவிட்டாலும் பல ஊர்களில் இருக்கும்... கூடுதலும் இளைஞர்களை குறிவைத்துதான் இந்த சங்கங்கள் இயங்கும்... ஏன்னா அவங்களுக்குதான் வரலாறு தெரியாது... இவங்க என்ன சொன்னாலும் நம்புவாங்க... இந்த சங்கத்தால் சிலுக்குவார்பட்டிக்கு எந்த பயனும் ஏற்படாவிட்டாலும் உலகையே தலைகீழாக புரட்டபோவது போன்ற பில்டப்புக்கு எந்த குறைவும் இருக்காது... 

எல்லா சங்கத்துக்கும் ஒரு "போஸ்"பாண்டி தலைவரா இருப்பான்... செமையா போஸ் கொடுப்பான்... சங்கத்தை பற்றி மக்கள் மத்தியில் பரவலாக பேசப்படவேண்டும் என்பதற்காக ஊருல இருப்பதிலேயே பெரிய மனுஷனாக பார்த்து அவரை பற்றி அனாவசியாமாக பேசுவது இல்லாத பொல்லாத கதைகளை புரளி பேசி கிளப்புவதும் சங்கத்தின் முக்கியமான வேலைகளில் ஒன்றாக இருக்கும்

"போஸ்"பாண்டிகள் என்னாதான் வீராப்பா வசனம் பேசுனாலும்... லலிதா பாண்டியின் கடைக்கண் பார்வை பட்டுவிடவேண்டும் என தவமாய் தவம் இருப்பார்கள்... லலிதா பாண்டியின் கோபம் தங்கள் மீது விழுந்துவிடுமோ என்ற பயம் அவர்களுக்கு உச்சி முதல் உள்ளங்கால் வரைக்கும் ஊறி இருக்கும்.. லலிதா பாண்டி என்னதான் தன் அதிகாரத்தை பயன்படுத்தி சங்கத்தை ஆள் வைத்து அடித்தாலும் இவர்களுக்கு சூடு சொரணை மானம் ரோசம் எதுவுமே வேலை செய்யாது

சங்கம் நஷ்டத்துல ஓடுது அப்ராததுல ஓடுதுன்னு அடிக்கடி சொன்னாலும் "போஸ்"பாண்டிகளின் போசுக்கு எந்த குறைவும் இருக்காது... கல்யாணம் கச்சேரி ஆண்டுவிழா சாப்பாடு என்று சங்கம் எப்போதும் சகஜமா செயல்படும்

இந்த கதையை படித்துவிட்டு பல்வேறு பெயர்களில் பல்வேறு ஊர்களில் செயல்படும் சங்கங்கள் உங்களுக்கு நியாபகம் வரலாம்..

No comments:

Post a Comment