Tuesday, September 17, 2013

RIDDICK ரிட்டிக் விமர்சனம் - வெறும் விஷுவலாலேயே மிரட்டுகிறார்கள்!



ஃபாஸ்ட் அண்ட் பியுரியஸ் ஹீரோ ‘வின் டீசல்’ நடித்து வெளிவந்திருக்கும் படம். ரிட்டிக் (வின் டீசல்) ஒரு வேற்று கிரகவாசி. வேறு கிரகத்தில் வந்து சிக்கி கொள்கிறார் ரிட்டிக். அங்கு ஆளைக் கடித்துக் குதறும் வெறிநாய்கள் அலைகின்றன. அவற்றிடம் இருந்து தப்பிக்கும் ரிட்டிக் அங்கிருந்து தப்பிக்கும் வழியைத் தேடுகிறார். அங்கு இரண்டு விண்கலங்கள் வந்து சேர்கின்றன. ஒன்றிற்கு கூலிப்படை சிப்பாய் ஒருவன் தலைவனாக இருக்க, மற்றொரு விண்கலத்திற்கு ரிட்டிக்கின் முன்னாள் சகா ஒருவன் தலைவனாக இருக்கிறார்கள். அப்போது மழை பெய்கிறது. அந்த கிரகத்தின் வெப்பநிலையினால் பதுங்கி இருந்த அசுர மிருகங்கள் வெளியே வருகின்றன. அதனிடமிருந்து ரிட்டிக் மற்றும் அவரது சகாக்கள் தப்பினார்களா? என்பதே கதை.

படம் துவங்கியதில் இருந்து சுமார் இருபது நிமிடங்கள் வரைக்கும் படத்தில் எந்த ஒரு வசனமும் இல்லை. ரிட்டிக்கின் செய்கை ஒவ்வொன்றையும் அப்போது காட்சிப்படுத்திருப்பது செமையாக இருக்கிறது. அந்த இருபது நிமிடங்களும் வெறும் விஷுவலாலேயே மிரட்டுகிறார்கள். அதன் பிறகு விண்கல ஆட்களுடன் மோதல், மிருகங்களுடன் மோதல் என சூடு பறக்க நகர்கின்றன காட்சிகள். மிருகங்களுடன் ரிட்டிக் சண்டை போடும் காட்சிகள் என்னவாகுமோ என்கிற பரபரப்பை நம்மை அறியாமலேயே நம்முள் விதைத்துவிடுகின்றன.
டேவிட் த்வோஹி, ஜிம் வ்ஹீட் இணைந்து எழுதிய கதையை அற்புதமாக இயக்கியுள்ளார். கிரீம் ரேவேல்-ன் பின்னணி இசை படத்திற்கு பலம். படத்தில் வரும்  இடங்களும், மிருகங்களும் திகிலை ஏற்படுத்துகின்றன. ரிட்டிக் ரசிகர்களை திருப்திப்படுத்தும்.

No comments:

Post a Comment