Monday, June 29, 2009

சட்டமன்ற இடைத்தேர்தலில் எம்.எல்.ஏ ஆகிறார் பாக்யராஜ்?


சக்கரக்கட்டி, அவ்வளவு இனிப்பாக இல்லாமல் போனதில் ஜுனியர் முருங்கைக்காய்க்கு வருத்தம். சாந்த(னு) சொரூப கேரக்டரில் நடிக்காமல் அதிரடி ஆக்ஷனில் நடிக்கலாமா என்கிற அளவுக்கு குழம்பிப் போயிருந்தவரை, தனது மோதிர கையால் குட்ட முடிவெடுத்தார் பாக்யராஜ். புதிய வார்ப்புகள் என்ற லவ் ஸ்டோரியை எழுதி, சாந்தனுவை அதில் நடிக்க வைத்தார்.

கண்ணும் காதும் வைத்த மாதிரி முழு படமும் முடிந்தேவிட்டது. இதற்கிடையில் சாந்தனுவை பார்க்கிற நண்பர்கள், இது பழைய புதிய வார்ப்புகள் படத்தின் ரீமேக்தானே என்று கேட்டதால் படத்தின் பெயரை மாற்றலாமா என்ற முடிவுக்கு வந்தார்கள் அப்பாவும் பிள்ளையும். அப்படியே இளமையும், குறும்பும் கொப்பளிக்கிற மாதிரி டைட்டில் வேண்டும் என்ற முடிவில் இருந்தவருக்கு வெல்லக்கட்டியாக கிடைத்த தலைப்புதான் இது.

சித்து ப்ளஸ் ஒன்! சப் டைட்டில் ஃபர்ஸ்ட் அட்டம்ட்! இப்படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக மும்பை முகங்களை பிடிக்காமல் உள்ளூர் தேவதை ஒருவரை நடிக்க வைத்திருக்கிறார் பாக்யராஜ். இவர் எத்திராஜ் கல்லூரியில் படித்து வருகிறாராம். ஆகஸ்ட்டில் படத்தை ரிலீஸ் செய்ய முடிவெடுத்திருக்கிறார்கள். பி.எஸ்.தரண் இசையில் இளமை கொஞ்சுகிறதாம் எல்லா பாடல்களிலும். இவரை இன்னொரு யுவன் என்று கொண்டாடுகிறது தமிழ் திரையுலகம். படம் நன்றாக வந்திருக்கிற சந்தோஷங்கள் ஒருபுறம் இருக்க, இன்னொரு மகிழ்ச்சியும் திரைக்கதை திலகத்தின் கதவை தட்டியிருக்கிறதாம்.

வருகிற சட்டமன்ற இடைத்தேர்தலில் ஒரு தொகுதியில் திமுக சார்பாக நிற்க வைக்கப்படுவாராம். ஆஹா...ஓஹோ...

No comments:

Post a Comment