Monday, June 29, 2009

மீரா ஜாஸ்மினுடனான சர்ச்சையில் இயக்குநர் லோஹிததாஸ் மரணம்!


பிரபல எழுத்தாளர் - திரைப்பட இயக்குநர் லோஹிததாஸ் இன்று காலை மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 54.

தமிழில் மீரா ஜாஸ்மின் நடித்து, இளையராஜா இசையமைத்து தமிழக அரசின் விருது பெற்ற சிறந்த படம் 'கஸ்தூரிமானை' இயக்கியவர் லோஹிததாஸ்.

மலையாளத்தில் எம்டி வாசுதேவ நாயருக்கு இணையான புகழ்பெற்ற எழுத்தாளர் லோஹிததாஸ்.

இயக்குநர் சிபி மலயிலுடன் இவர் இணைந்த தனியாவர்த்தனம், தசரதம், ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா, கமலதாலம் போன்ற படங்கள் மிகப் பிரபலமானவை. வணிக ரீதியிலும், தரத்திலும் மிகச் சிறந்த படைப்புகளாகப் போற்றப்படுபவை.

மலையாளத்தில் இவர் இயக்கிய பூதக்கண்ணாடி, கஸ்தூரிமான், ஆரயானங்களுடே வீடு மற்றும் நைவேத்தியம் போன்றவை நல்ல வெற்றியைப் பெற்றவை.

மீரா ஜாஸ்மினுடனான சர்ச்சையில் அதிகம் அடிபட்டது இவரது பெயர்தான்.

லோஹிததாஸ் மறைவு மலையாளத் திரையுலகை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தமிழ் திரையுலகும் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளது.

மலையாள நடிகர் மம்முட்டி கூறுகையில், லோஹிததாஸின் மரணம் தனிப்பட்ட முறையில் எனக்கு பெரும் இழப்பு. எனது பலம் என்னவென்று புரிந்து அதற்கேற்ப ஸ்க்ரிப்ட் செய்வதில் லோஹி மிகத் தேர்ந்தவர். கேரள கலாச்சாரம் மாறாத மனித நேயமிக்க கதைகளை திரைப்படமாக வடித்தவர் அவர் என்றார்.

No comments:

Post a Comment