இதுவும் வாரிசு பற்றிய செய்திதான். டைரக்டர் பி.வாசுவின் மகன் ஷக்தி, “ஆஹா...துறுதுறு இளைஞராக இருக்கிறாரே” என்று முதல் பார்வையிலேயே முஸ்தீபு காட்டியவர். ஆனால், சினிமா சறுக்கு மரத்தில் இரண்டு படி ஏறுவதற்குள் நாலு அடிக்கு சறுக்கல். என்ன செய்வது? கதை கேட்டு கதை கேட்டு கன்பியூஸ் ஆனவர், மறுபடியும் புத்துணர்ச்சியோடு எழுந்திருக்கிறார். இந்த முறை வஞ்சிக்கோட்டை வாலிபன். (வஞ்சிக்காது என்ற நம்பிக்கையில் வைத்த டைட்டிலாக இருக்குமோ?)புதுமை பித்தன், லவ்லி ஆகிய படங்களை இயக்கிய எஸ்.கே.ஜீவா இந்த படத்தை இயக்குகிறார். அழகிய தமிழ் மகன் படத்தின் கதையாசிரியர் என்றால் சட்டென்று புரிந்து கொள்வீர்கள். பெண்களின் மனதை பூவுக்கு இணையாக சொல்வார்கள். ஆனால், இந்த படத்தின் நாயகிக்கு கல் மனசு. எந்த ஆணும் தனது இதயத்திற்குள் நுழைந்துவிடக் கூடாது என்பதற்காக இதயத்தை இரும்பு கோட்டையாக மாற்றிக் கொண்டவர். அப்படிப்பட்ட பெண்ணின் மனசுக்குள் ஒருவன் நுழைந்து காதல் ஆட்டம் போடுகிறான். எப்படி? காதல், மோதல், காமெடி என்று கலந்து கட்டி கதையை சொல்லப் போகிறாராம் ஜீவா.
வஞ்சிக்கோட்டை வாலிபன் ஷக்திதான். ஓ.கே! வாலிபனின் மனசை லபக் செய்யப் போகும் வஞ்சிக்கோட்டை வாலிபி யாராம்? கேரளாவில் இருந்து ஒரு கிர்ணிப்பழத்தை இறக்குமதி செய்திருக்கிறார்கள். சாக்லெட், நோட்புக்ஸ், கலர்ஸ் போன்ற முன்னணி மலையாள படங்களில் நடித்தவர்தான் இநத கிர்ணி. பெயர் ரோமா!
சிலம்பாட்டம் படத்தின் இயக்குனர் சரவணனின் தம்பி சங்கர் இப்படத்திற்கு இசையமைக்க, கிருத்திகா என்ற பெண் எடிட்டிங் செய்யவிருக்கிறார். ஆச்சர்யம் என்னவென்றால் தமிழ்சினிமா வரலாற்றிலேயே முதல் பெண் எடிட்டர் இவர்தானாம். அப்படியே ஷக்திக்கு ஒரு ஹிட் கொடுத்து முதல் வெற்றியை கொடுத்த இயக்குனர் என்ற பெயரையும் தட்டிச் செல்லுங்கள் ஜீவா...


















No comments:
Post a Comment