Wednesday, June 24, 2009

ஜிடாக்கில் விரைந்து செயல்பட குறுக்குவழி விசைகள்

இணையத்தில் தகவல் தொடர்புக்கு ஈமெயில் எவ்வளவு முக்கியமோ அந்த அளவு சாட்டிங் வசதிகளும் முக்கியம் பெறுகிறது. உடனுக்குடன் பதில் அளித்து கதை பேசுவது என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. யாகூ, லைவ் போன்றவை இருந்தாலும் ஜிடாக் உபயோகிப்பவர்களும் அதிகம் இருக்கிறார்கள்..

சாட்டிங் செய்யும் போது அதற்கென்றே சில அசவுகரியங்கள் உண்டு. ஒருவருடன் சாட் செய்து கொண்டு இருக்கும் போது அடுத்தவர் ஹலோ என்று தலையை நீட்டுவார். ஒருவர் வாய்ஸ் சாட் போட்டு கூப்பிடுவார். இதனை சமாளிப்பதற்கு சாட் விண்டோக்களை மூட / திறக்க நமது கை கீபோர்டுக்கும், மவுசுக்கும் மாறி மாறி தாவிக்கொண்டிருக்கும். சாட்டிங்கை பொறுத்தவரை நாம் பெரும்பாலும் கீபோர்டு உபயோகித்து கொண்டு இருப்போம்.

எனவே சாட்டிங்கை கையாள சில குறுக்குவழி விசைகள் (Shortcut Keys) தெரிந்து இருந்தால் வசதியாக இருக்கும். அவற்றை பார்ப்போம்.

F9 - நீங்கள் சாட் செய்து கொண்டிருக்கும் நபருக்கு ஈமெயில் அனுப்ப ஜிமெயிலை திறக்க.
Esc - தற்போது சாட் செய்து கொண்டிருக்கும் விண்டோவை மூட.
Alt + Esc - திறந்து இருக்கும் அனைத்து சாட் விண்டோக்களையும் மூட.
F11 - வாய்ஸ் சாட் ஆரம்பிக்க
F12 - வாய்ஸ் சாட் மூட
Tab - அடுத்தடுத்த சாட் விண்டோக்களுக்கு மாற

உபயோகப்படுத்துவதற்கு துவக்கத்தில் கடினமாக தோன்றினாலும், குறுக்குவழி விசைகள் பழகி விட்டால் மிகவும் எளிமையாகி விடும். மவுசை அடிக்கடி நாடும் தொந்தரவும் இருக்காது.

No comments:

Post a Comment