Monday, June 29, 2009

சர்ச்சையில் சுர்லா கதை

கதையே இல்லாவிட்டாலும் அ‌ரிவாள் இல்லாமல் படம் இயக்காதவர் சஞ்சய் ராம். அந்த விஷயத்தில் இவர் இன்னொரு ஹ‌ரி.

முத‌ல் முறையாக ரத்தம், சத்தம் ஏதுமின்றி சுர்லா படத்தை இயக்குவதாக அறிவித்திருக்கிறார். ரத்தவாடை இல்லாமல் சஞ்சய் ராம் படமா? ஆச்ச‌ரியப்பட்டு விசா‌ரித்ததில் பல சூடான விஷயங்கள் சிக்கின.

சுர்லாவை அழகன் தமிழ்மணி தயா‌ரிக்கிறார். சுர்லாண்டீஸ்வரன் என்ற நாயகன் ரோலில் அவரது மகன் அஜய் கிருஷ்ணா அறிமுகமாகிறார்.

ஜெயலலிதா ஆட்சியில் சந்திரலேகா ஐஏஎஸ் மீது திராவகம் வீசியவன் பெயர் சுர்லா. தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்பட்ட அந்த ஆசிட் வீச்சு சம்பவம் இந்தப் படத்தில் பிரதானமாக இடம் பெறுகிறதாம். சுர்லா என்று படத்துக்கு பெயர் வைத்ததே இதனால்தான் என்கிறார்கள்.

இயக்குனர் சஞ்சய் ராம் என்ன சொல்கிறார்?

எங்க ஊர்ப் பக்கம் கிராமத்து தேவதைக்கு சுர்லான்னு பெயர். இந்தப் படத்தை வழக்கமான ஆ‌க்சன் படமா இல்லாம காமெடியா எடுத்திட்டு வர்றேன். இப்போதைக்கு இது மட்டும்தான் சொல்ல முடியும் என்று ஒதுங்கிக் கொண்டார்.

இயக்குன‌ரின் அழுத்தத்தைப் பார்த்தா படம் ஆசிட் விவகாரம்போலதான் தெ‌ரியுது.

No comments:

Post a Comment