அமெரிக்க வாழ் தமிழரான அருண் வைத்தியநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அச்சமுண்டு அச்சமுண்டு. ரிலீஸுக்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பை இப்படம் ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவில் ஒரு விருதையும் பெற்று விட்ட இப்படம் திரைப்பட விழாக்களையும் வலம் வந்து கொண்டுள்ளது.
இந்த நிலையில், ஜூலை 10ம் தேதி தமிழகத்தில் திரைக்கு வருகிறது. இப்படத்தை தற்போது தெலுங்கிலும் டப் செய்து வெளியிடவுள்ளனராம்.
முதல் முறையாக ரெட் ஒன் கேமராவில் படமாக்கப்பட்ட முதல் இந்தியப் படம், முழுக்க முழுக்க டிஜிட்டல் முறையில் படமாக்கப்பட்ட படம் என்ற பல்வேறு சிறப்புகளைத் தாங்கி வரும் இப்படம் தெலுங்கிலும் ஹிட் ஆகும் என்ற நம்பிக்கையில் படக்குழுவினர் உள்ளனர்.


















No comments:
Post a Comment