Tuesday, June 23, 2009

Google vs Bing


Microsoft Bing:

கலர்ஃபுல்லான பக்கம். பின்னணியில் தினம் ஒரு படம். Shopping, Travel, Health மற்றும் Local Business இவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். படங்களின் அளவை மாற்றிக் கொள்ளும் வசதி சிறப்பாக உள்ளது. தேடிய விடையிலேயே கூடுதல் தகவல்கள் கிடைக்கிறது. லிங்க்கைத் திறக்காமல். (தேடியவர்களுக்குப் புரியும்.)

ஆபாசத் தளங்களை அனைத்து வயதினரும் எளிதில் அணுகமுடிவது பலவீனம். (விரைவில் சரிசெய்யப்படலாம்.) மைக்ரோசாஃப்ட் பிங் 12.1 % மக்களைக் கவர்ந்திருக்கிறது. நல்ல வளர்ச்சி. சேவை தெளிவாகவும், தரமாகவும் இருக்கும் பட்சத்தில் Google க்குப் போட்டியாக அமையும்.




Google:

எளிமையே இவர்கள் தனித்துவம். மிகப்பெரிய தேடுபொறியின் முதல்பக்கம் சாதரணமாக இருக்கும். தகவல்கள் மின்னல் வேகத்தில் கிடைக்கும். சிறிது சிறிதாக Gmail, Orkut எனப் பல சேவைகளை கூகிள் பக்கத்திலிருந்து கிடைக்குமாறு செய்தது சிறப்பு. இந்திய மொழிகள் பலவற்றில் தேடமுடிவது பலம்.

ஆபாசத்தளங்களைப் பொறுத்தவரை கூகிளும் பெரிதாகத் தடை செய்யவில்லை. இணையத் தேடலில் 65 % மக்களின் விருப்பம் கூகிள். கடந்த பத்து வருடங்களாக நம்வாழ்வோடு இணைந்துவிட்ட ஒன்று. வருங்காலத்தில் பிங் பிரபலமடைந்தாலும் நாம் முழுமையாக கூகிளிலிருந்து விலகமாட்டோம் என்பதே உண்மை.

தேடுபொறியின் தொழில்நுட்பம் குறித்து படித்தவர்களிடம் கேட்டுக் கொள்ளவும். எனக்குத் தெரிந்ததை சொல்லியிருக்கிறேன்.இன்னும் நிறைய செய்திகள் பிற பதிவுகளிலிருந்து பெறலாம்.


No comments:

Post a Comment