Monday, June 22, 2009

ஜூலை 10ல் அச்சமுண்டு அச்சமுண்டு!


பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள, பிரசன்னா, சினேகா இணைந்து நடித்துள்ள அச்சமுண்டு! அச்சமுண்டு! ஜூலை 10ம் தேதி திரைக்கு வருகிறது.

ஷாங்காய் திரைப்படவிழாவில் ஐந்து முறை திரையிடப்பட்ட ஒரே தமிழ்ப்படம் என்ற பெருமையைப் பெற்றது அச்சமுண்டு! அச்சமுண்டு!.

அமெரிக்காவில் ஏற்கனவே ஒரு விருதைத் தட்டி விட்டது. இப்படி வெளிநாடுகளைக் கலக்கிக் கொண்டிருந்த இப்படம் ஜூலை 10ம் தேதி தமிழகத் திரையரங்குகளை பயமுறுத்த வருகிறது.

ஷாங்காய் விழாவில், சீன மக்கள் படத்தைக் கண்டு களித்ததோடு, இயக்குனர் அருண் வைத்யநாதனுக்குப் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

அச்சமுண்டு அச்சமுண்டு-வை தெலுங்கில் வெளியிடவும் துரிதமாக வேலைகள் நடந்து வருகின்றன. தமிழகம் முழுதும் நூறு சதவிகிதம் டிஜிட்டல் ரிலீஸ் செய்வதாக தயாரிப்பாளர்கள் சார்பாக ஆனந்த் கோவிந்தன் தெரிவித்தார்.

படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் அச்சமுண்டு அச்சமுண்டு குழுவையும், இயக்குனரையும் மனதாரப் பாராட்டி யுஏ சான்றிதழ் வழங்கினர்.

பிரசன்னா, சினேகா இணைந்து நடிக்கும் இந்தப் படத்தில்,எம்மி விருது வாங்கிய ஹாலிவுட் நடிகர் ஜான் ஷே முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதுமுதன் முறையாகும்.

இது இந்தியாவிலேயே முதன் முறையாக ரெட் ஒன் கேமரா மூலம் படம்பிடிக்கப்பட்டது என்பது மற்றுமொரு சிறப்பு.

No comments:

Post a Comment