Monday, June 22, 2009

செக்சாலஜிஸ்ட் ஆன பெரியாரிஸ்ட்! -தமிழில் ஒரு டாப்லெஸ் படம்?


பெரியாரிஸ்ட் வேலு பிரபாகரன், திடீர் செக்சாலஜிஸ்ட் ஆகிவிட்டாரோ என்னவோ? “மேலாக்கு எதுக்கு? மாராப்பு வேஸ்ட்!” என்றெல்லாம் பேச ஆரம்பித்திருக்கிறார். இதை வலியுறுத்தி ஒரு படத்தையும் எடுத்திருக்கிறார். படத்தில் நடிக்கும் கதாநாயகி டாப்லெஸ்சுக்கு அஞ்சாமல் “திறந்த மனதுடன்” நடிக்க ஒப்புக் கொண்டதால், ஒட்டுமொத்த படத்துக்கே திரைபோட வேண்டிய அவசியம் வந்துவிட்டது சென்சார் அமைப்புக்கு, சர்டிபிகேட் தர முடியாது என்று உறுதியாக மறுத்தது இந்த அமைப்பு, பின்பு மத்திய தணிக்கை குழு வரைக்கும் போய் போராடினார் வேலு. இறுதியில் அந்த டாப்லெஸ் காட்சிகளோடு படத்தையும் ரிலீஸ் பண்ண அனுமதி வாங்கியிருக்கிறாராம். ஒரே ஒரு திருத்தம். படத்தின் பெயர், முன்பு காதல் அரங்கம். இப்போது வேலு பிரபாகரனின் காதல் கதை.

“வெள்ளைக்காரிகள் டிரஸ் பண்ணுறதை பார்த்திருப்போம். சும்மா பெயருக்கு கொஞ்சம் துணி உடுத்தியிருப்பாங்க. ஆனா, எந்த ஆண் மகனும் அவங்களை உத்துப்பார்க்கிறதாகவோ, ரேப் பண்ண முயற்சி நடந்ததாகவோ கேள்வி பட்டிருக்கோமா? ஆனால், இங்கேதான் அத்தனை கேவலங்களும் நடக்குது. இதுக்கெல்லாம் காரணம் எல்லாத்தையும் மூடி மூடி வைக்கிறதுதான். இத பற்றிதான் என் படத்திலே அலசியிருக்கேன்” என்றார் வேலு பிரபாகரன்.

வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டா சொல்லுங்க. சென்சார் கட் பண்ண சொன்ன காட்சிகளை கட் பண்ணிட்டீங்களா? இல்லையா? வேலு பிரபாகரனிடம் கேட்டால், “அவங்க ஆட்சேபம் தெரிவித்த சில காட்சிகளில் நான் செய்த திருத்தங்கள், என்ன சொல்ல நினைச்சேனோ, அதை இன்னும் அழுத்தமாக சொல்ல உதவியிருக்கு” என்றார் இலை மறைவு காய் மறைவாக!

எதையும் மறைச்சு வைக்கக் கூடாதுன்னு சொல்லிட்டு, இப்படி மறைச்சு மறைச்சு பேசினா எப்படி சார்?

No comments:

Post a Comment