Monday, June 22, 2009

ஸ்ரேயாவின் இமயமலை மந்திரம்

ஸ்ரேயாவுக்கு ஆங்கிலம் அத்துப்படி, தெலுங்கு மாட்லாடுவார், தமிலிங்கிஸ் தெரியும். புதுசா அவர் முனுமுனுப்பது என்ன தெரியுமா?
‘கரீஷா போல்தா மே பரமே திகிட்சிதா காபே...’

இது எந்த ஊர் பாஷை என கூகுலுக்குள் போய் குழம்பவேண்டாம். இது ஸ்ரேயா மனப்பாடம் செய்துள்ள மந்திரம். இமயமலை பயணத்திற்கு பிறகுதான் ஸ்ரேயாவிடம் இத்தனை மாற்றம். ‘சிவாஜி’ படத்தில் நடித்தபோது மந்திரம் பற்றி உண்டான ஆர்வம் ஒரு கட்டத்தில் ஆர்வக்கோளாறாகிவிட்டதாம்.

படப்பிடிப்பின் இடைவேளையின்போது இமயமலை பற்றிய தனது அனுபவங்களை ரஜினி அடிக்கடி பகிர்ந்துகொண்டுள்ளார். இதனைக்கேட்ட ஸ்ரேயாவுக்கு நாளடைவில் இமயமலை செல்லும் ஆசை வந்துவிட்டதாம். அங்கு எந்தெந்த இடங்களில் எப்படிப்பட்ட சாமியார்கள் இருப்பார்கள் என்பதையும் கேட்டுவைத்துக்கொண்ட ஸ்ரேயா, ஒரு மாதத்திற்கு முன்பு இமயமலைக்கு சென்றாராம்.

இமயமலையில் இருந்த ஒரு சாமியாரிடம் பயபக்தியுடன் நடந்துகொள்ள, சில மந்திரங்களை கற்றுத்தந்திருக்கிறார் சாமியார். அங்கிருந்து திரும்பிய பிறகு சதா அந்த மந்திரங்களை உச்சரிக்க தொடங்கிவிட்டாராம். ‘எந்திரன்’ படப்பிடிப்பில் ரஜினியையும் சந்தித்து அந்த மந்திரங்களை சொல்லித்தந்திருக்கிறார் ஸ்ரேயா.

ஸ்ரேயாவின் மந்திர ஞானம், ரஜினியையே வியக்கவைத்துவிட்டதாம்.

பாடல்காட்சியில் நடிக்கும்போது மந்திரம் சொல்லி போட்டிருக்கும் டிரஸ்காணாமல்போகாமல் இருந்தால் சரிதான்

No comments:

Post a Comment