Monday, June 22, 2009

ஜூன் 26 முதல் 'நாடோடிகள்'!

சுப்பிரமணியபுரம் புகழ் சசிகுமார் நடிப்பில், சமுத்திரக்கனி இயக்கத்தில் உருவாகியுள்ள நாடோடிகள் வரும் 26-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

சசிகுமார் நடித்தது ஒரே படம்தான். அது சுப்பிரமணியபுரம். அந்தப் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரும் அவரே.

இந்தப் படத்தில் அவரது இயல்பான முரட்டு சுபாவ நடிப்புக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

அடுத்து உடனடியாக ஒரு படத்தை அவர் இயக்கவில்லை. மாறாக சுப்ரமணியபுரத்தில் தனக்காக நடித்துக் கொடுத்த, தனது நண்பர் சமுத்திரக்கனி கேட்டுக் கொண்டதற்காக நாயகனாக நடித்துக் கொடுத்துள்ள படம் நாடோடிகள்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து சென்சார் அதிகாரிகளுக்கு போட்டுக் காட்டப்பட்டது. படத்தைப் பார்த்த அதிகாரிகள் இயக்குநர் சமுத்திரக்கனி மற்றும் சசிகுமாரை பெரிதும் பாராட்டியுள்ளனர்.

மிகச் சிறப்பான படம் ஒன்றை நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்த்ததாகவும், வித்தியாச அணுகுமுறையில் சமுத்திரக்கனி படமெடுத்திருப்பதாகவும் பாராட்டிய தணிக்கைக் குழுவினர், இந்தப் படத்துக்கு எந்த ஆட்சேபணையும் சொல்லாமல் க்ளீன் யு சான்றிதழ் தந்துள்ளனர்.

'படம் உலகம் முழுக்க வரும் ஜூன் 26-ம் தேதி வெளியாகிறது', என்கிறார் படத்தின் மக்கள் தொடர்பாளர் நிகில்.

No comments:

Post a Comment