Tuesday, June 23, 2009

நான் யாருக்கும் போட்டியில்லே! த்ரிஷா விளக்கம்!


நந்திக்கு பழக்கம் நடுவாப்லே நிக்கிறது.... நத்தைக்கு பழக்கம் செவனேன்னு நடக்கிறது... நம்மாளுகளோட பழக்கம் என்ன? சிண்டையும் முடியணும், சிக்கையும் எடுக்கணும்!

த்ரிஷா இந்தி படத்திலே நடிக்க போனாலும் போனார். அசினுக்கு போட்டியாகதான் இந்திக்கு போயிருக்கார். அங்கேயுள்ள பெரிய பெரிய ஆளுகளுக்கெல்லாம் போன அன்னைக்கே பெரிய பார்ட்டி வச்சாருன்னு கொளுத்தி போட ஆரம்பிச்சிட்டாங்க. தகவல் அறியும் சட்டத்தை இப்படி தவறா பயன்படுத்துறவங்க மேலே கோவப்படாம பதில் சொல்றதுதான் புத்திசாலித்தனம். த்ரிஷாவும் சீரியஸ் ஆக பதில் சொல்லியிருக்கார். என்னன்னு?

நான் இந்தியில் நடிக்கணும்னு சான்ஸ் தேடி அலையலே. அதே மாதிரி எனக்கு முன்னாடி போயி, இந்தியிலே ஒரு இடத்தை பிடிச்சிருக்கிற அசினுக்கு போட்டியா நடிக்கணும்னும் போகலே. மத்தவங்க என்ன செய்யுறாங்கன்னு பார்க்கிறதுதான் என்னோட வேலை மாதிரி எழுதுறாங்க. அதெல்லாம் உண்மை இல்லை.

நான் நடிச்ச அபியும் நானும் படத்தை பார்த்திட்டு, அவரா விரும்பி என்னை இந்திக்கு கூப்பிட்டார் அக்ஷய் குமார். என்னை தமிழ்லே அறிமுகப்படுத்திய பிரியதர்ஷன் இந்த படத்தை டைரக்ட் பண்ணுறாரு. இதைவிட எனக்கு வேறென்ன வேணும்? அவங்க கூப்பிட்டதும் போயிட்டேன். இந்த படத்தை தயாரிக்கிறது அக்ஷய் குமார்ங்கிறது இன்னும் கூடுதல் சந்தோஷம். இதிலே எங்கிருந்து வந்தாரு அசின்?

நான் என் வேலையை பார்க்கிறேன். யாருக்கும் யாரும் போட்டியில்லை என்று நீண்ட விளக்கம் கொடுத்திருக்கிறார். புரளி இதோடு ஓயுமா? அல்லது இன்னும் வருமா? என்பவர்களுக்கு... வாழ்க்கைன்னா ஒரு சுவாரஸ்யம் வேணாமா? பேசாத த்ரிஷாவை பேச வைக்கணும்னா இப்படியெல்லாம் எழுதினாதானே முடியுது?

No comments:

Post a Comment