பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நல்ல கிஸ்ஸர் என்று சான்றிதழ் கொடுத்துள்ளார் ஹாலிவுட் நடிகையும், முன்னாள் ஜேம்ஸ் பான்ட் பட நாயகியுமான டெனிஸ் ரிச்சர்ட்ஸ்.அக்ஷய் குமார், கரீனா கபூர் இணைந்து நடித்துள்ள படம் கம்பக்த் இஷ்க். இப்படத்தில் டெனிஸ் ரிச்சர்ட்ஸும் நடித்துள்ளார். இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து சிலாகித்து கூறுகிறார் டெனிஸ்.
அக்ஷய் குமார் மிகவும் சிம்பிளாக இருக்கிறார். எளிமையாக பழகுகிறார். மிகவும் திறமையானவர். அவருடைய திறமை பாலிவுட்டில் வேறு யாருக்கும் இருக்காது என்று நினைக்கிறேன்.
எனக்கு மிகவும் உதவிகரமாக, தோழமையாக இருந்தார். முக்கியமாக நன்கு கிஸ் அடிக்கிறார். அதனால்தான் இந்தியாவின் செக்ஸி நடிகராக அவர் திகழ்கிறார் என நினைக்கிறேன்.
ஆரம்பத்தில் இந்தியில் பேசுபவர்களைப் பார்த்தாலே பயமாக இருந்தது. மொழி எனக்கு புரிபடவில்லை. இருந்தாலும் என்னுடன் நடித்த சக கலைஞர்கள் உதவிகரமாக இருந்தார்கள். இன்னொரு பாலிவுட் படத்திலும் நடிக்க ஆசையாக இருக்கிறது என்றார் டெனிஸ்.
டெனிஸ் 1999ம் ஆண்டு வெளியான தி வேர்ல்ட் இஸ் நாட் இனப் படத்தில் ஜேம்ஸ் பாண்ட்டின் ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தில் டெனிஸ் மட்டுமல்ல சில்வர்ஸ்டர் ஸ்டாலோன், பிரான்டன் ரூத் ஆகியோரும் கூட இருக்கிறார்கள்.
பெரும் பொருட் செலவில் தயாராகியுள்ள ஜூலை 3ம் தேதி கம்பக்த் இஷ்க் ரிலீஸாகிறது.


















No comments:
Post a Comment