
இந்நேரம் துபாயில் இருப்பார் விஜய டி.ராஜேந்தர். கவலையை மறப்பதற்கான ஜாலி ட்ரிப்பாம் இது. பிள்ளைய பெத்தா கண்ணீரு என்பது அவருக்கு தெரியாதா என்ன? ஆனால் இந்த கண்ணீரு பிள்ளை கொடுத்த குடைச்சலால் அல்ல. பிள்ளைய நினைச்சு வந்த கண்ணீரு!
அஜீத்தை வைத்து பல்வேறு படங்களை எடுத்தவரும், அவரது பினாமி என்று வெளியுலகில் கிசுகிசுக்கப்பட்டவருமான நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி நீண்ட இடைவேளைக்கு பிறகு பட தயாரிப்பில் இறங்கினார். சிம்புவையும், குறளரசைனையும் அந்த படத்தில் நடிக்க வைத்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தவர், டிஆரை அணுகி விஷயத்தை சொல்ல, ஆஹா பண்ணலாமேன்னாரு டிஆரும்!
இதில் இரட்டை வேடத்தில் சிம்பு நடிப்பதாக முடிவானது. இன்னொரு முக்கிய கேரக்டரில் குறள் அறிமுகமாவதாக ஏற்பாடு. சிம்பு இருந்தால், அந்த இடத்தில் நிழலாக யுவனும் இருப்பாரே? இசை யுவன் என்றும் முடிவானது. பைசா அட்வான்ஸ் இல்லாமல் பிராஜக்ட் தயாரானது. ஆனால், திடீரென்று படத்தையே டிராப் செய்துவிட்டாராம் சக்கரை.
ரொம்ப அக்கறையா ஆரம்பிச்ச பிராஜக்ட் இப்படி சக்கரையால் கெட்டதே என்ற வருத்தத்தில் தாட், பூட் என்று குதித்த டிஆர், கையிலே பணம் இல்லேன்னா சும்மா இருந்திருக்கலாமே, எதுக்கு சிம்பு பேரை கெடுக்கணும்?. ஏற்கனவே அவரு துவங்கின படங்கள் டிராப் ஆகுதுன்னு இன்டஸ்ரியிலே பேர் இருக்கு. அதை வலுவாக்கிற மாதிரி ஆயிருச்சே நீங்க செஞ்ச வேலை என்றாராம் சக்கரவர்த்தியிடம்.
சம்பளத்தை இரண்டு கோடியாக குறைத்திருக்கிறாராம் சிம்பு. இந்த சிறப்பு தள்ளுபடியை எந்த தயாரிப்பாளர் பயன்படுத்தப் போகிறாரோ?


















No comments:
Post a Comment