
“வேற நியூசே கிடைக்கலியா? போரடிக்குது” என்று நீங்கள் அலுத்துக் கொண்டாலும் சரி. இன்றைய நிலவரத்தை சொல்லாமல் விட்டால் விஜய் ரசிகர்கள் மன்னிக்க மாட்டார்கள் என்பதால் இந்த தகவல். வேறொன்றுமில்லை, விஜயின் 50 வது படத்தை பற்றிய தகவல்தான்!
“வேட்டைக்காரன் ரிலீசுக்கு பிறகுதான் தனது 50 வது படத்தை பற்றி சொல்ல முடியும்” என்று விஜய் அறிவித்தாலும், டைரக்டரை தேர்வு செய்கிற வேலையில் சுறுசுறுப்பாக இருக்கிறது அவரது மூளை. பேரரசு, ஜெயம் ராஜா, ஹரியை அடுத்து பூபதி பாண்டியனோடு முடிந்த இந்த தேடுதல் வேட்டை, திருப்தியுறாமல் மீண்டும் தொடர ஆரம்பித்திருக்கிறது. இந்த லிஸ்டில் லேட்டஸ்டாக இணைந்திருக்கிறாராம் கே.வி.ஆனந்த்.
சிவாஜி கலெக்ஷனையே சில இடங்களில் மிஞ்சிவிட்டது அயன். கனா கண்டேனுக்கு பிறகு தனது இரண்டாவது படத்திலேயே டாப் டைரக்டர்கள் லிஸ்ட்டில் இடம் பிடித்துவிட்டார் அயன் பட இயக்குனர் கே.வி.ஆனந்த். சில முன்னணி நிறுவனங்கள் “பிடிங்க அட்வான்சை” என்று ஆனந்தை துரத்திக் கொண்டிருக்கின்றன. ஆனால், குடும்பத்தோடு வெளிநாட்டுக்கு போய் ரிலாக்ஸ் பண்ணிக் கொண்டிருந்த ஆனந்த், அடுத்த படத்திற்கு அவசரமே படவில்லை. இந்த நிலையில்தான் “நம்ம படத்தை இயக்கலாமே” என்று விஜயே தூது அனுப்பியதாக தகவல்.
“அயன் மாதிரி ஸ்டைலிஷா ஒரு படம் பண்ணுற எண்ணம் இருக்கு. கதையிலே தலையிடாமல் இருந்தால் நாம் சேர்ந்து வொர்க் பண்ணலாம்” என்று ஆனந்தும் பச்சைக் கொடி காட்டியிருக்கிறாராம். இந்த ரயிலிலாவது விஜய் ஏறுவாரா? அல்லது அடுத்த ரயிலுக்கு காத்திருப்பாரா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.


















No comments:
Post a Comment