Tuesday, June 23, 2009
பர்தாவில் வந்து வழிபட்ட காத்ரீனா
காத்ரீனா நடித்துள்ள நியூயார்க் என்ற புதிய படம் ஜூன் 26ம் தேதி ரிலீஸாகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலையில் காத்ரீனா கைப், ஆஜ்மீர் தர்காவுக்கு வந்தார்.
பக்தர்கள் கூட்டத்தில் சிக்கி விடக் கூடாது என்பதற்காகவே அதிகாலையில் காத்ரீனா வந்ததாக கூறப்படுகிறது. தர்காவுக்கு வந்த அவர் அங்கு மனமுருக வழிபட்டார்.
பர்தா அணிந்தபடி அவர் வந்ததால் யாருக்கும் அவரை அடையாளம் தெரியவில்லை. அவருடன் படக்குழுவினர் சிலரும் வந்திருந்தனர்.
முன்பொருமுறை நமஸ்தே லண்டனில் நடித்தபோதும் ஆஜ்மீர் தர்காவுக்கு வந்திருந்தார் காத்ரீனா. அப்போது அவர் குட்டை சட்டையுடன் வந்ததால் பிரச்சினை ஏற்பட்டது. கவர்ச்சியான உடையுடன் வருவதா என்று தர்கா நிர்வாகிகளும், பக்தர்கள் சிலரும் ஆட்சேபனை எழுப்பினர்.
இதை மனதில் கொண்டே இம்முறை எந்தவிதப் பிரச்சினையும் வந்து விடக் கூடாது என்பதற்காக பர்தா அணிந்து வந்திருந்தார் காத்ரீனா.
Subscribe to:
Post Comments (Atom)



















No comments:
Post a Comment