Tuesday, June 23, 2009

தமிழ் படங்கள் பார்த்து திருடர்களாக மாறினோம்!

Sneha with Lawrence
பொதுமாக ஒரு பெரிய குற்றம் நடக்கும் போது, 'அந்தப் படம் பார்த்து நானும் இப்படிச் செய்தேன்' என்று குற்றவாளிகள் போலீசாரிடம் வாக்கு மூலம் அளிப்பதும் அதை கொட்டை எழுத்தில் போடுவதும் முந்தைய கலாச்சாரமாக இருந்தது.

கொஞ்சநாள் காணாமல் போயிருந்த அந்த கலாச்சாரம் மீண்டும் இப்போது திரும்பியிருக்கிறது. ஆனால் இங்கல்ல... மலேஷியாவில்.

பல்வேறு திருட்டு வழக்குகளில் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் சிலர், விசாரணையின்போது, "தமிழ் சினிமாக்களைப் பார்த்துதான் நாங்கள் திருட்டுத் தொழிலில் ஆர்வம் கொண்டோம். அதை அப்படியே மெயின்டெய்ன் செய்கிறோம்" என கூலாகக் கூறியுள்ளனர்.

அது பற்றிய விவரம்:

மலேசியாவில் வழிப்பறி, திருட்டில் ஈடுபட்ட 3 இந்திய இளைஞர்களை சமீபத்தில் கைது செய்தனர் மலேஷிய போலீசார். அவர்கள் பல போலீஸ் நிலையங்களில் ஏற்கனவே 20 வழக்குகள் உள்ளன.

3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் சொன்ன தகவல்களைக் கேட்டு ஆடிப் போனது மலேஷிய போலீஸ்.

தமிழ் படங்களைப் பார்த்து பார்த்துதான் தாங்கள் திருடர்களானதாக வாக்குமூலம் அளித்துள்ளனர் இந்த மாணவர்கள். பள்ளியில் படித்தபோது அதிகம் தமிழ் படங்கள் பார்த்ததாகவும் அதில் வரும் திருட்டு, வழிப்பறி, கொள்ளை காட்சிகளைப் பார்த்து தாங்களும் அந்தத் தொழிலில் ஈடுபட்டதாகவும் கூறினர்.

கிட்டத்தட்ட தமிழ்நாட்டில் ரிலீசாவது போலத்தான் மலேஷியாவிலும் தமிழ்ப் படங்கள் பெரும் ஆரவாரத்துடன் வெளியாகின்றன. கட் அவுட் வைப்பது, பாலாபிஷேகம் செய்வது என எல்லாமே அங்கும் சகஜம். காரணம் இங்கிருந்து போய் செட்டிலான தமிழர்கள்தான்.

இந்த சம்பவத்துக்குப் பிறகு, மலேசிய இளைஞர்களை திருடர்களாக மாற்றுகிறது என்று போலீசார் குற்றம் சாட்டத் தொடங்கியுள்ளது.

இதனால் மலேசியாவில் தமிழ் படங்கள் திரையிட தடைவிதிக்க வேண்டும் என்று போலீசார் யோசனை தெரிவித்துள்ளனர். பள்ளி செல்லும் தமிழ் மாணவர்களை கண்காணிக்குமாறு பெற்றோர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்களாம் போலீஸார்.

சரத்குமார் சார்... நோட் த பாயிண்ட்!

No comments:

Post a Comment