Monday, June 22, 2009

திரும்பி வருகிறார் திருமதி கோபிகா


குடிகாரன் பேச்சு போலதான் நடிகைகளின் நடிக்க மாட்டேன் ஸ்டேட்மெண்டும். திருமணம் ஆகும்போது கொஞ்சம் தெனாவட்டாகவே சொல்வார்கள், நடிப்பா? சீச்சீ... அந்தப் பக்கமே தலைவச்சு படுக்க மாட்டேன்.

எண்ணி மூன்றே மாதத்தில் பெட்டி படுக்கையோடு மீண்டும் வந்திறங்குவார்கள், நடிப்பதற்கு. அயர்லாந்தில் திருமணமாகி செட்டிலான கோபிகாவும் வந்திருக்கிறா‌ர், அதே நடிப்பு ஆசையுடன்.

அயர்லாந்தில் பணிபு‌ரியும் அ‌ஜிலேஷை சில மாதங்கள் முன் திருமணம் செய்தார் கோபிகா. திருமணத்துக்குப் பின் நடிப்பீர்களா என்று கேட்டதற்கு, கண்டிப்பாக நடிக்க மாட்டேன், கணவருடன் அயர்லாந்தில் செட்டிலாக தீர்மானித்திருக்கிறேன் என்றார் உறுதியாக.

சமீபத்தில் திருவனந்தபுரத்தில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் கோபிகா கலந்து கொண்டார். அவர் நடித்த வெறுதே ஒரு பா‌ரியா படத்துக்காக சிறந்த நடிகை விருது வாங்கவே இந்த திடீர் விசிட். அப்போதும் நடிக்க மாட்டேன் என்ற தனது தீர்மானத்தில் உறுதியாக இருப்பதாக அவர் தெ‌ரிவித்தார்.

இந்நிலையில் திலீப் நடிக்கும் சொந்தம் லேககன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க கோபிகா ஒப்பந்தமாகியுள்ளார். தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கவும் திட்டமிட்டிருக்கிறாராம் கோபிகா.

இவரைப் போல சமீபத்தில் திருமணமான காவ்யா மாதவனும் மீண்டும் நடிக்க வருவாரா என்பதே இப்போது மலையாளிகளின் எதிர்பார்ப்பு.

No comments:

Post a Comment