
விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் தடையை விலக்க வேண்டும். இல்லாத இயக்கம் என்று அறிவித்துவிட்ட பிறகு புலிகளை தடைசெய்வதில் என்ன நியாயம் இருக்கிறது என்றார் இயக்குநர் சீமான்.
கோவை புலியகுளத்தில் தமிழர் உரிமை முன்னணி சார்பில் ஈழ ஆதரவாளர் மாநாடு நடைபெற்றது. நிகழ்ச்சியில் சீமான் பேசியதாவது:
அமெரிக்க ஐக்கிய நாடுகளில் விடுதலைப் புலிகளுக்கு தடை விதித்திருந்தாலும், அந்த மக்கள் தனி ஈழம் கேட்டுப் போராட உரிமை தந்திருக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் அதற்குக் கூட உரிமையில்லை. எமது இன மக்கள் அங்கே பல்லாயிரக்கணக்கில் செத்து மடிவதை எதிர்த்துக் குரல் கொடுத்தால் சிறையில் அடைக்கிறார்கள். ஈழ மக்கள் விடுதலைக்காக குரல் கொடுக்க ஒரு இயக்கம் காண்பதைக் கூட இந்த அரசால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
விடுதலைப்புலிகளுக்கு தடை விதிக்க ஆஸ்திரேலியா அரசு மறுத்து விட்டது. இலங்கையில் விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டு விட்டார்கள் என்று சொல்கிறார்கள். அப்படியிருக்கும் போது இல்லாத இயக்கத்துக்கு எதற்கு தடை விதிக்க வேண்டும் என்று இந்திய அரசை ஆஸ்திரேலிய அரசு கேட்கிறது. ஆஸ்திரேலியாவின் இந்த முடிவை நாங்கள் வரவேற்கிறோம். இதையேதான் இப்போது நாங்களும் கேட்கிறோம்... இல்லாத இயக்கத்துக்கு தடை எதற்கு இந்தியாவில்?
இன்றைக்கு பிரபாகரன் குறித்தும், புலிகள் குறித்தும் பல வித கேள்விகள் சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. எல்லாவற்றுக்கும் காலம் பதில் சொல்லும், என்றார் சீமான்.
நிகழ்ச்சியில் பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார்.


















No comments:
Post a Comment