பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கோவைத் தம்பிக்கு தாதா சாகேப் பால்கே கழக விருது வழங்கப்பட்டுள்ளது.இந்தியத் திரையுலகின் தந்தை தாதா சாகேப் பால்கே அவர்களின் பெயரால் ஆண்டுதோறும், திரையுலக சாதனையாளர்களுக்கு இந்திய அரசு விருது வழங்கிவருகிறது. திரைப்படத்துறைக்கு வழங்கப்பட்டு வரும் மிக உயர்ந்த விருது இதுவே.
இப்போது, திரையுலகின் முக்கிய அமைப்புகள் ஒன்றிணைந்து தாதா சாகேப் பால்கே கழகம் என்ற ஒரு அமைப்பை நிறுவி அதன் மூலம், சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கி வருகிறார்கள்.
தாதா சாகேப் பால்கேவின் 140-வது பிறந்தநாள் விழா, அம்மையில் மும்பையில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில், தமிழகத்தின் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கோவை தம்பிக்கு தாதா சாகேப் பால்கே கழக விருதும், நினைவு பரிசும் அறிவிக்கப்பட்டது.
இந்த விருதை, பட அதிபர் ஏவி.எம்.சரவணன், பிலிம்சேம்பர் தலைவர் கே.ஆர்.ஜி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன் ஆகியோர் கோவை தம்பியிடம் வழங்கினார்கள்.
இந்த விருதைப் பெற்றுள்ள முதல் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கோவைத் தம்பிதான் என்பது குறிப்பிடத்தக்கது.
விழாவில் திரையுலக முக்கியப் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


















No comments:
Post a Comment