
வெண்ணிலா கபடிக்குழு கதையும், கலெக்ஷனும் மற்ற மொழிக்காரர்களையும் பிரமிக்க வைத்திருக்கிறது. அதனால் இப்படத்தை ரீமேக் செய்ய பெரும் போட்டி. முதல் கட்டமாக தெலுங்கில் எடுக்கவிருக்கிறார்களாம். தமிழில் மிருகம் படத்தில் அறிமுகம் ஆனாரே, ஆதி. அவர்தான் தெலுங்கு வெண்ணிலா கபடி குழுவிலும் ஆட்டம் போட போகிறாராம்.
மிருகம் படத்திற்கு பிறகு, தமிழில் நடிக்க பலர் அழைத்தாலும் மீண்டும் சாமி இயக்கத்திலேயே நடிக்க பிரியப்பட்டார் ஆதி. அவரது விருப்பத்திற்கேற்ப, சரித்திரம் படத்தில் ராஜ்கிரணுக்கு இணையான கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். வேக வேகமாக போய் கொண்டிருந்த படப்பிடிப்பு திடீரென்று பிரேக் அடித்து நிற்கிறது.
அர்ஜுன் நடிக்கும் மெய்க்காண் படத்தை துவங்கிவிட்டார் சரித்திரம் தயாரிப்பாளர். கவனம் முழுக்க இதில் இருக்க, சரித்திரம் பெயருக்கேற்ப பின் தங்கிவிட்டது. இப்படத்தை முடித்துவிட்டு வெண்ணிலா ரீமேக்கிற்கு போகலாம் என்று காத்திருந்த ஆதி, இப்போது சாமியை அவசரப் படுத்துகிறாராம். அவரோ, தயாரிப்பாளரை அவசரப்படுத்துகிறார்.
அர்ஜுனா, ஆதியா? யார் அவசரத்தை முதலில் கவனிப்பது? யோசித்துக் கொண்டிருக்கிறார் தயாரிப்பாளர்.


















No comments:
Post a Comment