
நடிகராக இருந்த லாரன்ஸ் இயக்குனராக மாறிய பிறகு தமிழில் அவர் இயக்கிய முதல் படம் முனி. சரண் தயாரித்த இந்தப் படத்தில் லாரன்ஸ் நடித்திருந்தாலும் அவரளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் ராஜ்கிரண் நடித்திருந்தார். அந்த மரியாதை... தனது ரெட்சன் கிரியேஷன்ஸ் தயாரிக்கும் படத்தை இயக்கும் பொறுப்பை லாரன்சுக்கு தந்திருக்கிறார் ராஜ்கிரண்.
முனி படத்துக்குப் பிறகு தமிழில் வேறு எந்தப் படமும் லாரன்ஸ் இயக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பாண்டி, ராஜாதிராஜா இப்போது சிம்புதேவனின் இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் என தொடர்ந்து ஹீரோவாக நடித்து வருகிறார்.
ரெட்சன் கிரியேஷன்ஸ் சார்பில் லாரன்ஸ் இயக்கும் படத்தின் பெயர் இன்னும் தீர்மானமாகவில்லை.
No comments:
Post a Comment