Saturday, August 1, 2009

சிந்தனை செய் - திரை விமர்ச்னம்

Sindhanai-Sei-034

சிந்தனை செய் படத்தின் விளம்பர டிசைன்களில் ஒரு கலக்கு கலக்கியிருந்தார்கள். அந்த எதிர்பார்ப்பை வீணடிக்கவில்லை என்றுதான் சொலல் வேண்டும்.

படத்தின் ஆரம்ப காட்சிகள் கொஞ்சம் முன்னுக்கு பின், பின்னுக்கு முன் என்று போய் வந்தாலும், சில நிமிடங்களில் செட்டிலாகிவிடுகிறார்கள். பரபரவென சுறுசுறுவென எரியும் மத்தாப்பூ போல போகிறது படம். இடைவேளை பாங்க் கொள்ளையின் போது நிமிர்ந்து உட்கார வைக்கிறார்கள். அதன் பிறகு இரண்டாவது பாதியில், யுவனின் துரோகம் இன்னும் உச்சபட்ட அட்லிரினை ஏற்றி விட .க்ளைமாக்ஸ்.Sindhanai-Sei-001

புதிய நடிகர் கம் இயக்குனர் யுவன் கொஞ்சம் முத்தின மூகமாய் இருக்கிறார். அவ்வப்போது நடிக்க முயற்சி செய்திருக்கிறார். அவரின் நண்பராய் வரும் பாலா, சிபி, ச்ஷான்ந், ஆகியோரின் நடிப்பு கச்சிதம். பாலாவும், யுவனும் அயிட்டம் வீட்டிற்கு போய் மேட்டர் முடித்துவிட்டு, செக் கொடுப்பது செம ரகளை. அதே போல பாரிலும், போலீஸ் ஸ்டேஷனிலும் மயில் சாமியின் டயலாக் டெலிவரியும், பாடி லேங்குவேஜும் அருமை. மீண்டும் ஒரு முறை தன்னை நிருபித்திருக்கிறார்.
Sindhanai-Sei-043

படத்திற்கு முக்கிய கதாநாயகர்கள் கேமரா மேனும், எடிட்டரும் தான், புகுந்து விளையாடியிருக்கிறார்கள். பேக் ரவுண்ட் கலர் காம்பினேஷன்கள், களத்திற்கு ஏற்றார் போல் டோன்களும், ஸ்டைலிஷான கட்டிங்கும் படத்தின் தரத்தை ஒரு படி மேலே ஏற்றுகிறது என்றே சொல்ல வேண்டும்,

தமனின் இசையில் இரண்டு பாடல்கள் ஓகே ரகம், ஆரம்பத்தி வரும் காதல் தண்டபாணி கேரக்டர் மொத்த படத்துக்கே தேவையில்லாத கேரக்டர். அதே போல கதாநாயகியின் காதல் ட்ராக் டப்பு டிப்பென பரப்பதால் பெரிதாய் ஏறாமல் போகிறது. கதாநாயகனை ஏன் ஆண்மையில்லாதவனை போல காட்ட வேண்டிய அவசியம் என்ன? அதே போல் அவன் மேல் பரிதாபம் ஏற்பட வேண்டும், அவன் ஒரு ஏமாளி என்று நினைக்க வேண்டும் என்பதற்காக மொக்கை சீன்களை வைத்திருப்பது வேகத்தை குறைப்பதாகவே உள்ளது.
Sindhanai-Sei-045

ஹீரோவின் கேரக்டரில் கொஞ்சமும், திரைக்கதையில் கொஞ்சமும் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் நல்ல ரிசல்ட் கிடைத்திருக்கும்.தமிழில் இது மாதிரியான கல்ட் படங்கள், திரில்லர் வகை படங்கள் அவ்வளவாக வந்ததில்லை.. அந்த வகையில் இது வித்யாசமான படமே.

சிந்தனை செய – பார்க்கலாம்

No comments:

Post a Comment