Showing posts with label விக்ரம். Show all posts
Showing posts with label விக்ரம். Show all posts
Saturday, August 1, 2009
Monday, June 29, 2009
விக்ரம் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான்
விக்ரம் நடிக்கும் அடுத்தடுத்த இரு படங்களுக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். எந்த ஒரு நடிகருக்கும் அரிதாக அமையும் வாய்ப்பு இது.
ஆஸ்கர் அளவுக்கு உயர்ந்தாலும் நேரம் ஒதுக்கி தமிழ்ப் படங்களுக்கு இசையமைக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். மணிரத்னத்தின் ராவண், ஷங்கரின் எந்திரன், கவுதமின் விண்ணைத்தாண்டி வருவாயா, சென்னையில் ஒரு மழைக்காலம் என்று நீள்கிறது ரஹ்மான் இசையமைக்கும் படங்களின் பட்டியல்.
ராவண் படத்தின் இந்தி மற்றும் தமிழ் பதிப்புகளில் விக்ரம் நடித்து வருவது தெரியும்;. இதனை அடுத்து மோகன் நடராஜன் தயாரிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் படத்திற்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.
ஆதவன் படத்துக்குப் பிறகு விக்ரம் நடிக்கும் படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார். இந்தப் படத்துக்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான். ஹீரோயின் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. படத்துக்கு நல்ல தமிழ்ப் பெயராக தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆஸ்கர் அளவுக்கு உயர்ந்தாலும் நேரம் ஒதுக்கி தமிழ்ப் படங்களுக்கு இசையமைக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். மணிரத்னத்தின் ராவண், ஷங்கரின் எந்திரன், கவுதமின் விண்ணைத்தாண்டி வருவாயா, சென்னையில் ஒரு மழைக்காலம் என்று நீள்கிறது ரஹ்மான் இசையமைக்கும் படங்களின் பட்டியல்.
ராவண் படத்தின் இந்தி மற்றும் தமிழ் பதிப்புகளில் விக்ரம் நடித்து வருவது தெரியும்;. இதனை அடுத்து மோகன் நடராஜன் தயாரிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் படத்திற்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.
ஆதவன் படத்துக்குப் பிறகு விக்ரம் நடிக்கும் படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார். இந்தப் படத்துக்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான். ஹீரோயின் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. படத்துக்கு நல்ல தமிழ்ப் பெயராக தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
சிம்புவின் சீக்ரெட் லிஸ்ட்

என்னத்த கண்ணையாவின் வரும்... ஆனா வராது... காமெடியின் நிலையில் இருக்கிறது போடா போடி. படம் வரும் என்கிறார் படத்தின் இயக்குனர். வராது என்கிறார்கள் ஹீரோ சிம்பு தரப்பில். நடுவில் வில்லங்கமாக வந்திருக்கிறது வாலிபன் படம்.
நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரிப்பில் சிம்பு நடிப்பதாகக் கூறப்படும் வாலிபன் படம் குறித்தும் பல வதந்திகள். அப்படியொரு ப்ராஜெக்டே இல்லை என்கிறார்கள் சிலர். சிம்புவும் இதுகுறித்து உறுதியாக எதையும் கூறவில்லை. அதேநேரம் வாலிபன் படத்தில் நடிக்கும் ஹீரோயினை தேர்வு செய்ய முழுவீச்சில் இறங்கியிருக்கிறார் சிம்பு.
சிம்புவின் முதல் சாய்ஸ் இலியானா. அஜித், விஜய், சூர்யா, விக்ரம்... ஏன் ரஜினியுடனேயே நடிக்க மறுத்தவர் இலியானா. அவரை எப்படியாவது வாலிபனில் நடிக்க வைப்பது என முயன்று வருகிறார் சிம்பு. அவர் ஒத்து வராதபட்சத்தில் சினேகா உல்லால், அனுஷ்கா என வேறு சிலரையும் லிஸ்டில் சேர்த்துக் கொண்டிருக்கிறார்.
விண்ணைத் தாண்டி வருவாயா முடிந்த பிறகு சிம்பு படத்தில் நடிக்குப் போகும் அதிர்ஷ்டசாலி யார் என்பது தெரிந்துவிடும்.
பிரபுதேவா-சிம்பு, விக்ரம், தனுஷ் அதிர்ச்சி

பாப் மன்னன் மைக்கேல் ஜாக்சன் மறைவுக்கு இந்தியாவன் மைக்கேல் ஜாக்சன் எனப் புகழப்படும் பிரபுதேவா அதிர்ச்சி தெரிவித்துள்ளார். ஜாக்சனின் ஸ்டைலைத்தான் நான் பின்பற்றி வருகிறேன். அவரது மரணம் எனக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
மைக்கேல் ஜாக்சன் மறைவுக்கு தமிழ்த் திரையுலகினர் பலரும் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.
மைக்கேல் ஜாக்சன் பாணி நடனத்தை இந்தியத் திரையுலகில் அறிமுகப்படுத்தியவர் பிரபுதேவா. அவரது முக்காலா முகாபுலா நடனம், அப்படியே மைக்கேல் நடனத்தை தழுவியது.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்றும் அழைக்கப்பட்டவர் பிரபுதேவா. அவர் ஜாக்சன் மறைவுக்கு அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரபுதேவா கூறுகையில், மைக்கேல் ஜாக்சன் புகழ்பெற்ற பெரிய மனிதர், சிறந்த பாடகர், நடன மேதை, இசையமைப்பாளர்.
எனக்கு வழிகாட்டி அவர்தான். அவரது நடன ஸ்டைலைத்தான் நான் பிற்பற்றுகிறேன். அவர் மறைந்த அதிர்ச்சியில் இருந்து நான் மீளவில்லை என்று கூறியுள்ளார் பிரபுதேவா.
இதேபோல நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், அகில உலக புகழ்பெற்ற பிரபல நடனக் கலைஞரும், பாப் இசை பாடகருமான மைக்கேல் ஜாக்சன் மறைந்த செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தோம்.
பாப் இசையோடு நடனத்தைக் கலந்து பல புதுமைகளை புகுத்தி அழியாத முத்திரை பதித்த ஒரு மாபெரும் கலை பொக்கிஷம். தமிழ் திரையுலகில் பல நடன நடிகர்கள் அவரின் அடிச்சுவட்டை பின்பற்றி புகழடைந்துள்ளனர்.
உலகத்தின் கலை வரலாற்றில் ஒரு வெற்றிடம் உருவாகியுள்ளதை யாராலும் மறுக்க முடியாது. மாபெரும் கலை வித்தகர்.
மைக்கேல் ஜாக்சனின் மறைவிற்கு தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சார்பாக ஆழ்ந்த அஞ்சலி செலுத்துகிறோம் என்று கூறியுள்ளனர்.
நடிகர் விக்ரம் கூறுகையில், ஜாக்சன் மறைந்த அதிர்ச்சி செய்தி கேட்டு வருத்தமுற்றேன். என்னுடைய தலைமுறை அவருடனேயே வளர்ந்தது.
பிராங்க் சினாட்ரா, எல்விஸ் பிரஸ்லி போன்ற மேதைகளைக் காட்டிலும் பிரபலமானவராக, புகழ் பெற்றவராக விளங்கியவர் ஜாக்சன்.
தமிழ், இந்தி திரையுலக நடனங்களிலும் அவரது தாக்கம் அதிகம் என்றார் விக்ரம்.
இதேபோல சிம்பு, தனுஷ் ஆகியோரும் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.
தனுஷ் கூறுகையில் எப்படி நடிகர்களுக்கு புரூஸ்லி முக்கியாக இருந்தாரோ அதேபோல, நடனத்துக்கு மைக்கேல் ஜாக்சன். நமது நடனங்கள் எல்லாமே ஜாக்சனின் ஸ்டைலைத் தழுவியதுதான்.
எனக்கு வழிகாட்டுபவராக அவர் இருந்தார். படிக்காதவன் படத்தில் அவரது ஸ்டைலைப் பின்பற்றி ஆட முயன்றேன். அவர் பெரிய சகாப்தம். அவர் மரணமடைந்து விட்டார் என்பதை நம்ப முடியவில்லை என்றார்.
Subscribe to:
Posts (Atom)














































