Showing posts with label Classics. Show all posts
Showing posts with label Classics. Show all posts

Sunday, September 22, 2013

இந்த ஆம்பளைங்களே இப்படித்தான்பா!

பூனையில் சைவம் கிடையாது, ஆண்களில் ராமன் கிடையாது என்று நம் ஊர் கவிஞர் ஒருவர் எழுதியிருந்தார். இது எல்லா நாட்டு ஆண்களுக்கும் பொருந்தும். உலகம் முழுவதும் 2.7 மில்லியன் ஆண்கள் தங்களின் மனைவியை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர் என்று அதிர்ச்சித்தகவலை தெரிவிக்கிறார் க்ரே நியூமென் என்ற எழுத்தாளர்.
மனித மனதில் எண்ணற்ற ஆசைகள் குடியேறி ஆட்டிப்படைக்கின்றன. பணம், பொருள் மட்டுமல்ல பாலியல் உணர்வுகளும் தூண்டிவிடப்பட்டு ஆண்களையும், பெண்களையும் ஆட்டிப்படைக்கிறது. இதனால் மரபு மீறிய செயல்களும், இலக்கணப்பிழைகளும் ஆங்காங்கே நேர்கிறது.

எது கிடைத்தாலும் இன்னும் கொஞ்சம் கூடுதலாக கிடைத்தால் நல்லாருக்குமே என்ற மனதின் அடித்தள ஆசைதான் இதற்கெல்லாம் காரணம். இது செக்ஸுக்கும் பொருந்தும்.
என்னதான் தேவதை மாதிரி மனைவி இருந்தாலும், பிசாசு மாதிரி ஒரு எக்ஸ்ட்ரா பிட்டிங் வேண்டும் என்பது ஆண்களின் ஆசையாக இருக்கிறது. இது உண்மைதான் என்கிறார் இங்கிலாந்தின் பிரபல நாவலாசிரியரும், திரைக்கதை எழுத்தாளருமான வில்லியம் நிக்கல்சன். எவ்வளவு அழகான மனைவி இருந்தாலும் அல்லது காதலி இருந்தாலும், ஆண்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் வேறு பெண்களுடன் உறவு வைத்துக் கொள்ளத் தயங்க மாட்டார்களாம்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஆண்களைப் பொறுத்தவரை போதும் என்ற மனமே இல்லை. ஆண்களின் ஆசையும், செக்ஸ் ஆசையும் முற்றுப்புள்ளி இல்லாத தொடர் கதையாகவே உள்ளது. எவ்வளவு செக்ஸ் கிடைத்தாலும் அதை அனுபவிக்கவே அவர்கள் முயலுகிறார்கள். போதும் என்று நிறுத்திக் கொள்ள அவர்கள் விரும்புவதில்லை. வேடிக்கைக்காகவும், ஆசைக்காகவும்தான் இந்த கள்ள உறவுகளை அவர்கள் நாடுகிறார்கள்.
செக்ஸ் விஷயத்தில் என்னதான் அழகான மனைவி இருந்தாலும் அல்லது காதலி இருந்தாலும், வாய்ப்பு கிடைத்தால், பின்விளைவுகள் இருக்காது என்று உறுதியாகத் தெரிந்தால் இன்னொரு பெண்ணுடன் உறவு வைக்க அவர்கள் தயங்க மாட்டார்கள்.
ஆண்களைப் பொறுத்தவரை செக்ஸ் உணர்வு என்பது புற நிகழ்வுகளாகவே உள்ளதாக செக்ஸாலஜிஸ்டுகள் கூறுகிறார்கள். உணர்வுப்பூர்வமான செக்ஸ் உணர்வு அவர்களுக்கு வருவதில்லை. வெளி நிகழ்வுகளின் தூண்டுதலால் செக்ஸ் உணர்வை அவர்கள் அடைகிறார்கள். அந்த உணர்வை உடனடியாக வெளிப்படுத்தி விடவும் துடிக்கிறார்கள். இந்த போலியான உணர்வுகளுக்கு அவர்கள் காதல் என்றும் பெயர் வைக்கத் தயங்குவதில்லை. எனக்கு வாய்ப்பு கிடைத்தது, அந்தப் பெண்ணே சம்மதித்தாள், அதனால்தான் உறவு வைத்துக் கொண்டேன் என்று கூறும் ஆண்களே அதிகம். அதாவது பழியை பெண்கள் பக்கம் நைசாக திருப்பி விட்டு விடுகிறார்கள்.
இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது பெண்கள்தான். குறிப்பாக மனைவிகள். தங்களது கணவர்கள் நல்லவர்கள், ஒழுக்கமானவர்கள், பிறன் மனை நோக்காதவர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் ஆண்களின் புத்தியை பெண்கள் அத்தனை சீக்கிரம் புரிந்து கொள்வதில்லை.
இது குறித்து எழுதியுள்ள எழுத்தாளர் நிக்கல்சன், நானும் ஒரு சராசரி ஆண்தான். எனது மனமும் அதுபோன்ற எண்ணங்களில் அலை பாய்ந்ததுண்டு. எனக்கும் வாய்ப்பு கிடைத்தால் நானும் அந்தத் தவறைச் செய்வேன்தான்-பின்விளைவுகள் இல்லாவிட்டால். ஆனால் நான் தவறு செய்தால் அதற்கான பின்விளைவுகள் உடனே என்னைத் தேடி வந்து விடும். எனவேதான் இதுவரை நான் அந்தத் தவறைச் செய்யவில்லை. செய்யும் வாய்ப்பும் இல்லை என்றே கருதுகிறேன் என்கிறார் நிக்கல்சன்.
நிக்கல்சன் தொடர்ந்து கூறுகையில், ஆண்களுக்கும், பெண்களுக்கும் செக்ஸ் விஷயத்தில் நிறைய வேற்றுமை இருக்கிறது பெண்களின் நம்பிக்கையை குழி தோண்டிப் புதைப்பதைத்தான் ஆண்கள் முதலில் செய்கிறார்கள். யாருடனும் நாம் உறவு கொள்ளலாம் என்ற முடிவுக்கு அவர்கள் வந்து விடுகிறார்கள். அதை உரிமையாகாவும் கருதிக் கொள்கிறார்கள்.
ஆனால் பெண்கள் நம்பிக்கை அடிப்படையிலும், நீண்ட கால உறவின் அடிப்படையிலும்தான் பிறரிடம் தங்களை உடல் ரீதியாக ஒப்படைக்க முன்வருவார்கள். இவனை நாம் நம்பலாம், இவனிடம் நம்மைக் கொடுத்தால் நலமாக இருக்கும் என்ற நம்பிக்கையில்தான் அவர்கள் ஒரு ஆணிடம் தங்களைக் கொடுக்க முன்வருகிறார்கள் என்கிறார் எழுத்தாளர்.
எது எப்படி இருந்தாலும், செக்ஸ் என்பது உடல் வேட்கைக்காக மட்டுமல்ல, அதில் சற்று உண்மையான உணர்வும் இருக்க வேண்டும் என்பதை இரு பாலினரும், குறிப்பாக ஆண்கள் புரிந்து கொள்வதுதான் நல்லது என்கிறார் எழுத்தாளர் நிக்கல்சன்.
இதற்கான எல்லா ஆண்களுமே தப்பு செய்பவர்கள் என்று சொல்ல வரவில்லை. சந்தர்ப்பமும், சூழ்நிலையும் அமைந்தால் யார் வேண்டுமானாலும் தவறு செய்வார்கள் என்கின்றனர் நிபுணர்கள்.

Tuesday, September 17, 2013

தி இந்து தமிழ் நாளிதழுக்கு எதிரான ஜெயமோகனின் கட்டுரை!

தி இந்துவில் (தமிழ்) வெளியாகியிருக்கும் ஜெயமோகனின் கட்டுரை, தொடர்புள்ள நாளிதழிற்கே – அதுவும் முதல் நாளிலேயே – எதிரானதாய் இருப்பதை ஆசிரியர் குழுமம் கவனித்திருக்கலாம். இத்தனை செய்திகள் எதற்காக? எனும் போது இத்தனை செய்திப் பத்திரிகைகள் எதற்காக என்கிற கேள்வியும் அதன் உள்ளேயே அடங்கியிருக்கிறது.
மேலும் ஒரு தமிழ் நாளிதழின் துவக்க நாளில் அதுவும் ஜெயமோகன் எழுதுகிறார் எனும் போது இன்னும் அட்டகாசமான ஓப்பனிங்காக இருந்திருக்கலாம். ஜெயமோகனின் தரத்திற்கு ஈடுசெய்ய முடியாத பாபா படம் மாதிரி நமத்துப் போன பட்டாசு மாதிரி கட்டுரை அமைந்தது துரதிர்ஷ்டம். வரும் கட்டுரைகளில் ஜெயமோகன் கலக்குவார் என்று எதிர்பார்க்கலாம்.
ஜெ வின் கட்டுரையோடு எனக்கு பெரும்பாலும் உடன்பாடும் சிறிதளவு மறுப்பும் உண்டு.

தகவல் தொழில் நுட்ப சாதனங்கள் பெருகத் பெருகத்தான், தகவல் தொடர்பில் நிறைய இடைவெளி விழுகிறது என்பது என் தனிப்பட்ட அவதானிப்பு. தொலைபேசி வசதிகள் பரவலாக இல்லாத காலத்தில் அரிதாக தொலைபேசியை உபயோகித்து ஒரு செய்தியைச் சொல்ல வேண்டு்ம் என்றாலும் நாம் சொல்ல வேண்டிய அத்தனை விஷயங்களையும் தொகுத்துக் கொண்டு பின்பு தொலைபேசியை உபயோகிக்க ஆரம்பித்தவுடன் அத்தனையையும் வரிசைக்கிரமமாக சொல்லி விடுவோம். அது போலவே, பெற வேண்டிய தகவல்களையும். ஆனால் இன்று ஒருவரை எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம் என்கிற வசதிகள் தருகிற அதீத நம்பிக்கைகள் காரணமாகவே அரைகுறையான உரையாடல்களோடும் தகவல்களோடும் முடித்துக் கொண்டு பிறகு ‘நீ பாலு சித்தப்பா வீட்டுக்கு வரச்சொன்னியா…நான் மோகன் சித்தப்பா வீட்டு வாசல்ல நின்னுட்டுதான் உனக்கு போன் செய்யறேன்’ என்று அசடு வழிகிறோம். ஒருவர் தன்னுடைய செல்போனை இன்று தவற விட்டு விட்டால் ஏறக்குறைய அவர் அநாதைதான். எவருடைய தொலைபேசி எண்களும் அவர் நினைவில் இருக்காது.
அது போலவே, ஜெயமோகனின் கட்டுரையின் படி இன்று பெருகி வரும் தகவல் வெள்ளத்தில் தனிநபரின் சிந்தனைகளும் கருத்துக்களும் முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டு மழுங்கடிக்கப்படுகின்றன. ஒன்றை யோசிப்பதற்குள் மேலும் வந்து விழுந்து கொண்டேயிருக்கும் செய்திகளாலும் தகவல்களாலும் எதையுமே யோசிக்க முடிவதில்லை. மேலும் இன்று பொதுவிடங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் உரையாடுவோரில் பெரும்பான்மையோர், செய்திகளை ஆராய்ந்து அதிலிருந்து தமக்கென்று சுயகருத்துக்களை தீர்மானமாக உருவாக்கிக் கொள்வதில்லை. செய்தி ஆசிரியர்களும் தொகுப்பாளர்களும் கடகடவென்று வெளித்தள்ளுவதில் தமக்கு நினைவில் தங்குவதை அல்லது அந்தச் செய்தியின் கோணத்தில் மயங்கி அதைச் சரி என எடுத்துக் கொண்டு அதை தம்முடைய கருத்தாக வைத்துக் கொண்டு உரையாடுகின்றனர். அவர்களை அணுகி அது தொடர்பாக இன்னும் நுணுக்கமான விஷயங்களைக் கேட்டால் உரையாடலைத் தொடர முடியாமல் திகைத்து நிற்கின்றனர்.
எனவே பெருகி வரும் தகவல் வெள்ளத்தில் தனிநபர்களின் சிந்தனை முற்றிலுமாக மழுங்கடிக்கப்படுகிறது என்பது உண்மை.
ஆனால் உலக மயமாக்கத்தின் காலகட்டத்தில் சிரியாவில் குண்டு வெடித்தால் அது நம் வீட்டின் வரவேற்பறையில் அதிர்வை ஏற்படுத்தும் தகவல் புரட்சியை நம்மால் தடுக்கவே முடியாது. இன்னும் பழையபடி ஆகாஷவாணியில் சரோஜ் நாராயணசாமி குரலை மாத்திரம் கேட்டுக் கொண்டிருக்க முடியாது. ஒரு செய்தியின் பல்வேறு விதமான தகவல்களும் கோணங்களும் நமக்கு கிடைக்கச் செய்திருக்கும் இந்த நுட்பம் நமக்கு வரப்பிரசாதம்தான். ஜெயமோகன் அவைகளை அணுகி தொகுத்துக் கொள்வது போலவே ஒவ்வொரு தனிநபரும் செய்திகளின், தகவல்களிலுள்ள இடைவெளியை யூகித்து ஆராய்ந்து அவற்றிலிருந்து தம்முடைய தரப்பை தொகுத்து அறிந்து கொள்ளவதே சிறப்பானதாக இருக்கும்.
அந்த வகையில் இன்றைய ‘தி இந்து’ (தமிழில்) நயனதாரா குறித்த செய்தியில், அவர் நடிக்க வந்து பத்து ஆண்டுகளைக் கடந்தும் இன்னமும் முன்னணி நடிகையாகவே நீடிப்பது குறித்தான பரவசத்தில் எனக்கும் உடன்பாடும் மகிழ்ச்சியும் உண்டு. அதில் வந்திருக்கும் நயனதாராவின் புகைப்படமும் சிறப்பாக இருக்கிறது என்பது உபசெய்தி.

Wednesday, April 22, 2009

Masala movie actress photos

Cute Model actress gallery

Find more pictures: Urmila matondkar
Stunning pictures of mallu actress

Stunning pictures of mallu actress

un-cencored mallu girls

Find more pictures: Swrnamalya
Malayalam actress saree photos

Tamil actress hot gallery

View more related photos: Seema
spicy model actress photoshots

malluwood homely actress pictures

Stunning pictures of mallu actress

Cute Model actress gallery

Find more pictures: Rani Mukherjee
Collections of mirchi actress

Tamil actress hot gallery

Ever green tollywood hot masala actress pictures collections

Kollywood spicy actress wet photos

Hot Mallu pictures

Masala movie actress photos

View more stills: Vimala raman