Showing posts with label ரஜினி. Show all posts
Showing posts with label ரஜினி. Show all posts

Thursday, July 2, 2009

வைரமுத்து மகனுக்கு ஆற்றிய உதவி!

கவிஞர் வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கியும் இப்போது பாடலாசிரியராகிறார்... அதுவும் ரஜியின் எந்திரன் படத்தின் மூலம்.

இந்தப் படத்தின் எல்லாப் பாடல்களையும் வைரமுத்து எழுதுவதாகத்தான் அறிவிக்கப்பட்டது. ஆனால் தன் மகன் மதன் கார்க்கியையும் பாடலாசிரியாக அறிமுகப்படுத்த விரும்பினார் வைரமுத்து.

சாதாரண படங்களில் அறிமுகமானல், புகழ் வெளிச்சம்பட நீண்ட காலம் பிடிக்கும் என்பதை உணர்ந்த வைரமுத்து, ரஜினியின் எந்திரன் படம் மூலம் அந்த அறிமுகம் நிகழவேண்டும் என ஆசைப்பட்டார்.

தனது ஆசையை ரஜினியிடமும், படத்தின் இயக்குநர் ஷங்கரிடமும் அவர் வெளிப்படுத்த, உடனடியாக பச்சை சிக்னல் கிடைத்தது இருவரிடமிருந்தும்.

இப்போது எந்திரன் படத்துக்காக தனது முதல் பாடலை எழுதியுள்ளார் வைரமுத்து மகன் மதன் கார்க்கி. ரஜினி - ஐஸ்வர்யா டூயட் பாடலை அவர்தான் எழுதியுள்ளாராம். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்கிறார்கள்.

கடந்த ஆண்டு நடந்த மதனின் திருமணத்துக்கு முதல் நபராகப் போய் வாழ்த்தியவர் ரஜினி என்பது நினைவிருக்கும். மதன் கார்க்கி கவிதைகள் எழுதி வருகிறார்.

வைரமுத்துவின் இன்னொரு மகன் கபிலன் ஒரு படத்துக்கு வசனம் எழுதுவது குறிப்பிடத்தக்கது.

இளையராஜா இசைக்கு வைரமுத்து மகன் எழுதும் பாடல்!

கவிஞர் வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கியும் இப்போது பாடலாசிரியராகிறார்...
அதுவும் ரஜியின் எந்திரன் படத்தின் மூலம்.

இந்தப் படத்தின் எல்லாப் பாடல்களையும் வைரமுத்து எழுதுவதாகத்தான் அறிவிக்கப்பட்டது. ஆனால் தன் மகன் மதன் கார்க்கியையும் பாடலாசிரியாக அறிமுகப்படுத்த விரும்பினார் வைரமுத்து.

சாதாரண படங்களில் அறிமுகமானல், புகழ் வெளிச்சம்பட நீண்ட காலம் பிடிக்கும் என்பதை உணர்ந்த வைரமுத்து, ரஜினியின் எந்திரன் படம் மூலம் அந்த அறிமுகம் நிகழவேண்டும் என ஆசைப்பட்டார்.

தனது ஆசையை ரஜினியிடமும், படத்தின் இயக்குநர் ஷங்கரிடமும் அவர் வெளிப்படுத்த, உடனடியாக பச்சை சிக்னல் கிடைத்தது இருவரிடமிருந்தும்.

இப்போது எந்திரன் படத்துக்காக தனது முதல் பாடலை எழுதியுள்ளார் வைரமுத்து மகன் மதன் கார்க்கி. ரஜினி - ஐஸ்வர்யா டூயட் பாடலை அவர்தான் எழுதியுள்ளாராம். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்கிறார்கள்.

கடந்த ஆண்டு நடந்த மதனின் திருமணத்துக்கு முதல் நபராகப் போய் வாழ்த்தியவர் ரஜினி என்பது நினைவிருக்கும். மதன் கார்க்கி கவிதைகள் எழுதி வருகிறார்.

வைரமுத்துவின் இன்னொரு மகன் கபிலன் ஒரு படத்துக்கு வசனம் எழுதுவது குறிப்பிடத்தக்கது.

Monday, June 29, 2009

சுல்தான் படத்தில் ரஜினியின் ஸ்டைல்; “பஞ்ச்” வசனங்கள் -சவுந்தர்யா

ரஜினி மகள் சவுந்தர்யா இயக்கும் “சுல்தான்” அனிமேஷன் பட வேலைகள் விறுவிறுப்பாக நடக்கின்றன. நவீன தொழில்நுட்பத்தில் தயாராகிறது. ரஜினி நடிக்கும் காட்சிகள் ஐதராபாத் பிலிம் சிட்டியில் சமீபத்தில் படமாக்கப்பட்டன.
ரஜினி ஜோடியாக விஜயலட்சுமி நடிக்கும் காட்சிகளும் எடுக்கப்பட்டன.
மெகா பட்ஜெட்டில் தயாராகுகிறது. இப்படம் குறித்து சவுந்தர்யா கூறியதா வது:-
ஓவியங்கள் மற்றும் கார்ட்டூன் படங்கள் மீது எனக்கு எப்போதுமே ஈடுபாடு உண்டு. எனவே தான் அனிமேஷன் துறையை தேர்ந்தெடுத்தேன். அதற்கு என் தந்தை ரஜினியும் பச்சைக்கொடி காட்டினார்.
அனிமேஷன் துறைக்கு இந்தியாவில் பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது. வேலை வாய்ப்பை பொறுத்த வரை கிரியேட்டிங் துறையை விட டெக்னிக் துறையில் பத்து மடங்கு அதிகம் உள்ளன. இந்ததுறையில் ஆர்வமுள்ளவர்களை ஊக்குவிக்க “ஸ்கூல் ஆப் தாட்ஸ்” என்ற அமைப்பை துவக்குகிறேன். இதன் மூலம் திறமையானவர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள்.
“சுல்தான்” அனிமேஷன் பட இறுதிகட்ட வேலைகள் நடக்கின்றன. தொழில்நுட்ப வகையில் இப்படம் பிரமாண்டமாக இருக்கும். ரஜினி படத்துக்கு உரிய அனைத்து அம்சங்களும் இதில் இடம்பெறும்.
ரஜினி ஸ்டைல், “பஞ்ச்” வசனங்கள், சண்டைக் காட்சிகள், காதல் எல்லாம் சுல்தானில் உணடு. கமர்ஷியல் படமாக உருவாக்குகிறோம்.
சுல்தான் நிச்சயம் தரமாகவும் துல்லியமாகவும் இருக்கும். சுல்தான் கண்டிப்பாக ஒரு புதிய அத்தியாயத்தை படைக்கும். அந்த இலக்கை நோக்கி எல்லோரும் உழைத்துக் கொண்டிருக்கிறோம்.
எந்திரனுடன் சுல்தான் படம் மோதுவதற்கான வாய்ப்பு இல்லை. இரண்டும் வேறுவேறு. இருபடங்களையும் என் தந்தை கவுர மாக கருதுகிறார்.

ரஜினி-கமல் இணைவார்களா?: கேஎஸ் ரவிக்குமார் பேட்டி


ரஜினி, கமல் இருவருமே இணைந்து நடிக்கும் சூழல் வரும் என்றும், அப்படி ஒரு சூழலை உடனிருப்பவர்கள்தான் உருவாக்க வேண்டும். என்றும் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் கூறியுள்ளார்.

இதுகுறித்து ஆனந்த விகடன் வார இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டி:

ரஜினி கமல் இருவரும் சேர்ந்து நடித்தால் அந்த பட்ஜெட்டை தாங்குற அளவுக்கு தயாரிப்பாளர் அமையணும்.

கமல் ரஜினி சேர்ந்து நடிக்கிற சூழல் மறுபடியும் வரும்னு நினைக்கிறேன். சேர்ந்து நடிக்கணும்னு அவங்களா நினைக்க மாட்டாங்க. யாராவது தூண்டிவிடணும்.

ஆனா இந்த விஷயத்துல நானா எதுவும் செய்ய மாட்டேன். போய்க் கேட்டா, 'படம் பண்ணி பணம் பார்க்க ஆசைப்படறான்'னு நினைப்பாங்க.

அதனால அந்த மாதிரி விஷயத்தை நான் நினைச்சுக் கூடப் பார்க்கிறதில்ல, என்று அவர் பதில் கூறியுள்ளார்.

இதற்கு முன்பு மணிரத்னம் ஒருமுறா ரஜினியையும் கமல்பாசனையும் இணைத்து ஒரு படம் எடுக்க முயன்றார். ஆனால் அப்படி நடித்தால் வரக்கூடிய சிக்கல்கள், ரசிகர்களின் மனநிலையைக் கருத்தில் கொண்டு அந்த முயற்சியை ரஜினி - கமல் இருவருமே ஏற்கவில்லை என கூறப்பட்டது.

தம் அடிக்க தடுமாறிய ரஜினி!


பள்ளிக்கூடம் இருக்கும் ஏரியாக்களில் இருந்து ஆயிரம் அடிக்கு அப்பால்தான் தம்மடிக்க வேண்டும் என்ற புதிய சட்டத்தை போட்டு விட்டாராம் அதிபர் ஓபாமா! (ஆமாவா?, சொல்லுங்களேன், அமெரிக்க நண்பர்களே..) அதுமட்டுமா? ஹோட்டல்களில் தம்மடிக்கவும் தடை. அதற்காக தனி பகுதி இருக்கிறதாம். அங்கே போய் வேண்டுமானால் குப் குப்-லாம்!

சென்னைக்கு திரும்பிவிட்டது எந்திரன் டீம். ஆனால் அமெரிக்காவில் இருந்தபோது ரொம்பவே சிரமப்பட்டது நம்ம சூப்பர் ஸ்டார்தானாம். அடிக்கடி சிகரெட் வேணும் அவருக்கு. படப்பிடிப்பில் பரவாயில்லை. தங்கியிருந்த ஹோட்டல் அறையில்தான் சிக்கலே. உள்ளே எங்கேயும் சிகரெட் பிடிக்க அனுமதியில்லை. புகை ஏரியாவில் ஒரே கூட்டம். வேறு வழியில்லாமல் சாலைக்கு வந்து சுதந்திரமாக தம்மடித்தாராம்!

ஆணானப்பட்ட ரஜினியே அளந்து அளந்து புகைக்கும்போது, அசல்டாக புகை பிடிக்கிறார் ஆன்ட்ரியா. படப்பிடிப்பில் ஷாட்டுக்கு நடுவே, இவரது குப் குப் ஸ்டைலை பார்த்து ஆடிப்போயிருக்கிறது ஸ்டுடியோ வட்டாரம். நல்லவேளையாக ஏ.வி.எம் போன்ற ஸ்டுடியோ வளாகத்தில் ஓபாமாக்கள் இல்லை என்பதே ஆறுதல் (ஆன்ட்ரியாவுக்கு)

Tuesday, June 23, 2009

ரஜினியால் அதிர்ஷ்ட நடிகையானேன்! - ஸ்ரேயா பேட்டி

ராசி இல்லாத நடிகை என முத்திரை குத்தி எல்லோரும் என்னை ஓரம் கட்டினார்கள். ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினி சார்தான் என்னை அதிலிருந்து காப்பாற்றி அதிர்ஷ்டசாலி நடிகையாக்கினார்", என்கிறார் நடிகை ஸ்ரேயா.

இதுகுறித்து சமீபத்தில் ஸ்ரேயா அளித்த பேட்டி:

நான் அறிமுகமானது எனக்கு 20 உனக்கு 18 படத்தில்தான். ஆனால் அந்தப் படம் ஓடவில்லை. அடுத்து ஜெயம் ரவியுடன் 'மழை' படத்தில் நடித்தேன். பொதுவாக தமிழில் ஜெயம் ரவிக்கு ஒரு ராசி உண்டு. அவருடன் நடிக்கும் புதுமுக நடிகைகள் எல்லோரும் பிரபலமாகி விடுவார்கள். சதா, திரிஷா, அசின், ஜெனிலியா என அப்பட்டியல் நீள்கிறது. நானும் இந்தப் பட்டியலில் வந்துவிடுவேன் என்றுதான் நினைத்தேன்.

ஆனால் எனக்கு அது நேர் விரோதமாக அமைந்துவிட்டது. அவருடன் நான் நடித்த 'மழை' படம் சரியாகப் போகவில்லை. என் முதல்படமும் சுமாராகத்தான் அமைந்தது. உடனே எனக்கு ராசி இல்லாத நடிகை என முத்திரை குத்தி விட்டார்கள்.

இனி தமிழ் படங்கள் அவ்வளவுதான் என்று நினைத்து தெலுங்கில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். அப்போதுதான் சூப்பர்ஸ்டார் ரஜினி சாருடன் 'சிவாஜி' படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. சிவாஜி வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

அதிர்ஷ்டமில்லாமலிருந்த நான் ரஜினியால் மிகப்பெரிய அதிர்ஷ்டசாலியானேன். ராசி இல்லாத நடிகை என்ற 'இமேஜ்' விலகியது. இன்று என் நடிப்பு வாழ்க்கை ஹாலிவுட் வரை நீண்டதற்குக் காரணம் சிவாஜி என்ற படமும், ரஜினிசாரும்தான்.

நம்பர் ஒன் நடிகை போட்டியில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. எல்லா நடிகைகளுமே ஒவ்வொரு கால கட்டத்தில் நம்பர் ஒன் ஆக இருப்பார்கள். யாருக்கும் அது நிரந்தரமானது அல்ல... நான் சாய்பாபா பக்தை. எந்த கஷ்டம் வந்தாலும் அவர் கைவிடமாட்டார்", என்றார் ஸ்ரேயா.