Showing posts with label அசின். Show all posts
Showing posts with label அசின். Show all posts

Thursday, July 2, 2009

அசின்-நயன்தாரா... அப்பா, அம்மா இம்சைகள்!


ஒரே நேரத்தில் இரண்டு முக்கிய சம்பவங்கள். எப்பவும் அசினோடு ஒட்டிக் கொண்டே திரியும் அவரோட அப்பாவான மிஸ்டர் தோட்டம் கல், இப்போது தோட்டத்திலே கல்லு பொறுக்குகிற வேலைக்காவது போகலாமான்னு யோசிக்கிற அளவுக்கு சும்மாதான் இருக்காரு. ஏன்? இந்தி வாலாக்களுக்கு அசினை பிடிச்ச அளவுக்கு அவங்க அப்பாவை பிடிக்கலே! அவரு எதுக்கு எப்பவுமே உங்க கூட வர்றாரு. செக்யூரிடியான்னு கேட்கிற அளவுக்கு கிண்டல்! வேற வழியில்லாம “என் வேலைய நான் பார்க்கிறேன். நீங்க எதுக்கு?” என்று கூறிவிட்டாராம் அசின்.

இன்னொரு சம்பவம்?

எப்பவுமே பெண்ணை தனியாகவே அனுப்பி பழகிய நயன்தாராவின் பெற்றோர்கள், தங்கள் முடிவை மாற்றிக் கொண்டதுதான். எந்த பத்திரிகையை திருப்பினாலும், நயன்தாரா பற்றிய தப்பு தப்பான செய்திகள். காதல், கத்தரிக்காய் என்று கூடை கூடையாக கெட்ட பேர். வேறு வழியில்லாமல் இனி எங்கு போனாலும் நாங்களும் வர்றோம் என்று கூறிவிட்டார்களாம்.

எதுக்கு உங்களுக்கு சிரமம்னு பொண்ணு சண்டை போட்டாலும் விடாப்பிடியா அவங்க வர்றது நயன்தாராவுக்கும் பிடிக்கலே. இவரை வச்சு படம் எடுக்கிறவங்களுக்கும் பிடிக்கலே. ஃபிளைட் பயணத்திலே ஆரம்பிச்சு, போர்ட்டிங், லாட்ஜிங்குன்னு பில்லு மும்மடங்காக ஆனதுதான் இந்த பிடிக்கலேவுக்கு காரணாமாம்.

கால்கட்டு போட்டா சினிமா கைவிட்டு போயிரும். கால் கட்டு போடலேன்னா பொண்ணே கைவிட்டு போயிரும். எதை செய்யுறதுன்னு ஒரே குழப்பமாம் அவங்க அப்பா அம்மாவுக்கு!

டைரக்டர், படக்குழுவினர் மோதல் கமல், அசின் நடிக்கும் “19ஸ்டெப்” படம் ரத்து

பரத்பாலா இயக்கும் இப்படத்துக்கான வேலைகள் விறுவிறுப்பாக நடந்தது. படப்பிடிப்பு நடத்த வேண்டிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. ஜப்பான் நடிகர் தடனோ அசனோதான் படத்தின் கதாநாயகன் கமல்ஹாசனுக்கு கேரள களரி சண்டைப் பயிற்சி அளிக்கும் மாஸ்டர் வேடம்.
இந்தி கஜினி வெற்றிக்கு பிறகு அசின் இப்படத்தில் நடிக்க வந்ததால் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இதற்காக கேரளா சென்று களரிச் சண்டை பயிற்சி பெற்றார். பயிற்சியின் போது அடிபட்டு காயமும் ஏற்பட்டது. 19 ஸ்டெப்” படம் முடியும்வரை வேறு படங்களில் நடிப்பதில்லை என்றும் முடிவெடுத்து இருந்தார்.
ஏற்கனவே ஜப்பானில் முதல் கட்ட படப்பிடிப்பை துவங்க ஏற்பாடுகள் நடந்தன. ஆனால் பன்றி காய்ச்சல் பீதியால் அது ரத்து செய்யப்பட்டது. ஜப்பான் நடிகர் அசனோ சென்னைக்கும் கேரளாவுக்குமாய் போய் வந்து கொண்டிருந்தார். காஸ்ட்யூம், கதை விவாத பணிகளில் அவர் பங்கேற்றார்.
இந்த நிலையில் தான் டைரக்டருக்கும், இதில் நடிக்கும் முன்னணி நடிகர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளது. கதையில் மாற்றம் செய்யும்படி நடிகர்கள் வற்புறுத்தியதாகவும் அதை இயக்குனர் பரத்பாலா ஏற்கவில்லை என்றும் கூறப்படுகிறது. எனவே படத்தை நிறுத்தி விட்டனர் என்கின்றனர்.
இப்படத்துக்கு போட்டோ சூட் கூட இன்னும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் சம்பந்தமாக இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. படம் ரத்து பற்றி விசாரித்த போது டைரக்டர், தயாரிப்பாளர் தரப்பில் எவரும் பதில் சொல்ல முன்வரவில்லை. தற்போதைய நிலையில் “19 ஸ்டெப்” படம் நிறுத்தப்பட்டு விட்டதாம். நடிகர்-நடிகைகள் வேறு படங்களுக்கு போய் விட்டனர்.

Wednesday, June 24, 2009

இந்திக்கு தாவல்: அசினுடன் போட்டி இல்லை- திரிஷா


அசினை தொடர்ந்து தமிழ் நடிகைகள் பலரும் இந்திக்கு தாவுவதில் மிகுந்த அக்கறை காட்டினர். இதில் திரிஷா அக்ஷய் குமார் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். டைரக்டர் பிரியதர்ஷன் இயக்கும் `கட்டாமிட்டா' என்ற படத்தில் அக்ஷய் குமார் ஜோடியாக திரிஷா நடிக்க உள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டி:-
அசின் இந்தியில் பெயர் வாங்கியதால் தான் நானும் இந்திக்கு தாவி விட்டதாக யாரோ வதந்தியை கிளப்பி விட்டுள்ளனர். அசினை மட்டுமல்ல யாரையும் நான் போட்டியாக கருதவில்லை. என்னுடைய கவனம் எல்லாம் எனது படங்களில் தான். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான படங்களில் நடித்து அது ரசிகர்களுக்கு பிடித்தாலே போதும்.
உண்மையில் நான் இந்தி படத்திற்காக யாரையும் பார்க்கவும் இல்லை. யாரிடமும் சான்ஸ் கேட்டதும் இல்லை. என்னுடைய அபியும் நானும் படத்தை பார்த்த அக்ஷய் குமார் எனது நடிப்பை பாராட்டியதோடு அவருடைய அடுத்த படத்தில் ஹீரோயினாக நடிக்கவும் வாய்ப்பு தந்துள்ளார். இந்த படத்தை அவரே அவருடைய சொந்த கம்பெனி மூலம் பிரமாண்டமாக தயாரிக்கிறார். இதனால் நான் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன்.

சத்ய மேவ ஜெயதே! நிம்மதி பெருமூச்சு விடும் அசின்


அசின் என்பதற்கு தமிழில் என்ன அர்த்தம் வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும். இன்றைய தேதியில் அந்த பெயரின் அர்த்தம் மிஸ் க்ளீன்!

இவரது உதவியாளர் நல்ல முத்துக்குமார் திடீர் மாயமானபோது, பணக்கார நடிகை. பார்க்க கூடாததை பார்த்திட்டான் போலிருக்கு. எங்க ஆற்றிலே மிதக்கிறானோ, எந்த குழியிலே கிடக்கிறானோ என்று வெளிப்படையாகவே முணுமுணுத்தவர்கள் உண்டு. ஆனால், எல்லாவற்றையும் பொய்யாக்கி விட்டு, "அவங்க மேலே தப்பில்லே" என்று நல்ல முத்துக்குமாரே சொல்லும்படி ஆகியிருக்கிறது உண்மை. சத்ய மேவ ஜெயதே!
இத்தனை மாதங்களான இவரை பிடிக்க தனி போலீஸ் படையே தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தது. முத்துக்குமாரின் அக்கவுன்ட்டிலிருந்து பணம் மாயாமாகி வந்த தகவலை தெரிந்து கொண்ட போலீஸ் மேலும் சிறிது பணத்தை போட்டு விட்டு, (பொறியிலே மசால் வடை வைக்கலாம். பணம் வைத்திருக்கிறார்கள் போல) காத்திருந்தது. அவர்கள் நினைத்த மாதிரியே ஏடிஎம் மில் பணத்தை எடுக்க வந்த முத்துக்குமாரை ஒரே லபக்!

பத்திரிகைகளில் வந்த செய்தியை படித்துவிட்டு போலீஸ் தன்னை துன்புறுத்துமோ என்று பயந்து போய் பதுங்கியிருந்தாராம் தம்பி. இத்தனை நாட்கள் பட்ட அலைச்சலுக்கு போலீஸ் தரப்பிலிருந்து பிரசாதம்(?) கொடுத்தார்களா தெரியாது. முறையாக புகார் கொடுத்த நல்ல முத்துக்குமாரின் அம்மா கையில் பிள்ளையை ஒப்படைத்துவிட்டார்கள்.

கையோடு கையாக மும்பைக்கும் போன் செய்து அசினிடம் விஷயத்தை கூறினார்களாம். இனி தனது கர்சீப்பை கூட தானே துடைத்துக் கொள்வார் அசின் என்று நம்பலாம். அது போகட்டும்... இத்தனை நாட்கள் எங்கே பதுங்கியிருந்தாராம் முத்து? அசினை இந்திக்கு கொண்டு போன டைரக்டர் முருகதாஸ் கஸ்டடியில்!

Monday, June 22, 2009

களறி பயிற்சி..அசின் காயம்!


19 ஸ்டெப்ஸ் எனும் படத்துக்காக களறிச்சண்டை கற்கும் போது நடிகை அசின் காயமடைந்தார்.கமல்ஹாசன் சிறப்பு வேடத்தில் தோன்ற, ஜப்பானிய நடிகர் தாடனோ அஸனோ நாயகனாக நடிக்கும் சரித்திரப் படம் 19 ஸ்டெப்ஸ். இந்தப் படத்தில் அசின்தான் கதாநாயகி. தாடனோ அஸனோவுக்கு ஜோடியாக நடிக்கிறார். கமலுக்கு ஜோடி கிடையாது.

பரத் பாலா இயக்கும் இந்தப் படத்தில் களறிச் சண்டை வீராங்கனையாக வருகிறார் அசின்.

இந்த வேடத்தை சிறப்பாகச் செய்ய, நிஜமாகவே களறிச் சண்டை கற்று வருகிறார். இதற்காக கேரளாவிலிருந்து களறிச் சண்டை நிபுணர் ஒருவரை வரவழைத்து பயிற்சி அளிக்கிறார்கள் அசினுக்கு.சில தினங்களுக்கு முன் இப்படி கடும் பயிற்சியிலிருந்த போதுதான், வழுக்கி விழுந்தார் அசின். இதில் அவருக்கு லேசான தசைப் பிடிப்பு ஏற்பட்டது. அந்த வலியுடனே அவர் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டார். இந்த களறிச் சண்டை பயிற்சியின்போது வாள்வீச்சுப் பயிற்சியும் அளிக்கப்பட்டது. அப்போது தவறுதலாக அசின் வாளை வீச, எதிரில் பயிற்சியிலிருந்தவருடைய வாள் தவறுதலாக அசின் கைகளைக் கீறி விட்டது. இதில் அசினுக்கு ரத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக அவருக்கு ஆயுர்வேத சிகிச்சையும் அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஆயுர்வேத சிகிச்சை மூலம் குணமடைந்து வருகிறார் அசின்.

இன்னும் இரு வாரங்களில் 19 ஸ்டெப்ஸ் படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பமாகிறது. தமிழ், மலையாளம், ஜப்பானிய மொழிகளில் வெளியாகிறது இந்தப் படம்.