பரத்பாலா இயக்கும் இப்படத்துக்கான வேலைகள் விறுவிறுப்பாக நடந்தது. படப்பிடிப்பு நடத்த வேண்டிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. ஜப்பான் நடிகர் தடனோ அசனோதான் படத்தின் கதாநாயகன் கமல்ஹாசனுக்கு கேரள களரி சண்டைப் பயிற்சி அளிக்கும் மாஸ்டர் வேடம்.
இந்தி கஜினி வெற்றிக்கு பிறகு அசின் இப்படத்தில் நடிக்க வந்ததால் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இதற்காக கேரளா சென்று களரிச் சண்டை பயிற்சி பெற்றார். பயிற்சியின் போது அடிபட்டு காயமும் ஏற்பட்டது. 19 ஸ்டெப்” படம் முடியும்வரை வேறு படங்களில் நடிப்பதில்லை என்றும் முடிவெடுத்து இருந்தார்.
ஏற்கனவே ஜப்பானில் முதல் கட்ட படப்பிடிப்பை துவங்க ஏற்பாடுகள் நடந்தன. ஆனால் பன்றி காய்ச்சல் பீதியால் அது ரத்து செய்யப்பட்டது. ஜப்பான் நடிகர் அசனோ சென்னைக்கும் கேரளாவுக்குமாய் போய் வந்து கொண்டிருந்தார். காஸ்ட்யூம், கதை விவாத பணிகளில் அவர் பங்கேற்றார்.
இந்த நிலையில் தான் டைரக்டருக்கும், இதில் நடிக்கும் முன்னணி நடிகர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளது. கதையில் மாற்றம் செய்யும்படி நடிகர்கள் வற்புறுத்தியதாகவும் அதை இயக்குனர் பரத்பாலா ஏற்கவில்லை என்றும் கூறப்படுகிறது. எனவே படத்தை நிறுத்தி விட்டனர் என்கின்றனர். இப்படத்துக்கு போட்டோ சூட் கூட இன்னும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் சம்பந்தமாக இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. படம் ரத்து பற்றி விசாரித்த போது டைரக்டர், தயாரிப்பாளர் தரப்பில் எவரும் பதில் சொல்ல முன்வரவில்லை. தற்போதைய நிலையில் “19 ஸ்டெப்” படம் நிறுத்தப்பட்டு விட்டதாம். நடிகர்-நடிகைகள் வேறு படங்களுக்கு போய் விட்டனர்.
No comments:
Post a Comment