தமிழ் சினிமாவின் லகான் இப்போது சசிகுமார் கையில். அடுத்து எந்த ஹீரோவின் படம் ரிலீஸாகிறது என்று எதிர்பார்த்திருந்த காலம் போய், எந்த இயக்குனரின் படம் வெளியாகிறது என்று ரசிகர்கள் ஆர்வமாக கேட்கும் காலம் வந்திருக்கிறது. சுப்பிரமணியபுரம், பசங்க, நாடோடிகள் என சசிகுமாரின் பங்களிப்பில் வந்த படங்கள் உருவாக்கிய மாற்றம் இது.
இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என காலடி பதித்த மூன்று துறைகளிலும் சசிகுமாருக்கு வெற்றி. அடுத்து அவர் என்ன செய்யப் போகிறார் என்பதே இப்போதைய கேள்வி.
ஏற்கனவே கூறியது போல் முழுக்க புதுமுகங்கள் நடிக்கும் படத்தை எடுக்கயிருக்கிறார் சசிகுமார். படத்தை இந்திப்பட நிறுவனம் தயாரிக்கிறது. சசிகுமார் பங்களிப்பு செலுத்திய மூன்று படங்களுமே கிராமத்துப் பின்னணியில் தயாரானவை. இந்த புதிய படம் நகரத்து பின்னணியில் தயாராகவுள்ளது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து மீண்டும் சமுத்திரக்கனி இயக்கும் படத்தில் சசிகுமார் நடிக்கிறார். ஹீரோக்களை நம்பாமல் ஸ்கிரிப்டை நம்பும் இந்த இயக்குனர்கள, தமிழ் சினிமாவில் புது வெளிச்சம் பாய்ச்சுவதை யாரும் மறுப்பதற்கில்லை.
No comments:
Post a Comment