மலையாளத்திலிருந்து கலைச் சேவைக்கு வரும் நடிகைகளில் இருவகை உண்டு. எத்தனை கோடி தந்தாலும் கிளாமராக மட்டும் நடிக்க மாட்டேன் என்று சொல்லும் நவ்யா நாயர் வகையினர் ஒன்று. கோடிகளை சம்பாதிக்க எப்படி வேண்டுமானாலும் நடிக்கலாம் என்ற நயன்தாரா வகையினர் இரண்டாவது. ரம்யா நம்பீஸன் முதல் வகை.
ஜெகன்ஜியின் ராமன் தேடிய சீதை ரம்யாவுக்கு தமிழில் முதல் படம். படம் நெடுக பிழிய பிழிய அழ வைத்ததில் ரம்யா நம்பீஸனின் அழகு கோடம்பாக்கத்துக்கு தெரியாமல் போய்விட்டது. அதையும் மீறி கிடைத்த ஒரே வாய்ப்பு ஆட்டநாயகன்.
லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் ஆட்டநாயகனில் ஷக்தி ஹீரோ. படப்பிடிப்பு பல மாதங்கள் முன்பே தொடங்கியது. பைனான்ஸ் பிரச்சனை... படம் இன்னும் முடியாமல் நொண்டியடிக்கிறது. நினைத்தாலே இனிக்கும், வஞ்சிக்கோட்டை வாலிபன் என ஷக்தி தடதடவென மற்ற படங்களில் பிஸியாக, பாவம் ரம்யா நம்பீஸன். ஆட்டநாயகன் வந்தால்தான் அடுத்த வாய்ப்பே என்ற நிலை.
தற்போது பைனான்ஸ் பிரச்சனையிலிருந்து மீண்டிருக்கும் லட்சுமி மூவி மேக்கர்ஸ் மீண்டும் படத்தை தொடங்கும் வேலையை முடுக்கிவிட்டுள்ளது. ரம்யா நம்பீஸனை பொறுத்தவரை இதைவிட நல்ல சேதி இருக்க முடியாது. எப்போது அரிதாரம் பூசலாம் என்று ஆவலுடன் காத்திருக்கிறார். பெண் பாவம் பொல்லாதது. சீக்கிரம் படப்பிடிப்பை தொடங்குங்கள்.

No comments:
Post a Comment