கவுண்டமணியின் அடுத்த கவுண்டவுன் தொடங்கிவிட்டது. இன்னும் மூன்றே நாள்... வனவாசத்தை முடித்து திரையில் புதுவசந்தத்தை கொண்டாடப் போகிறார் கவுண்டர்.
சிலரது திரைவாழ்க்கை முதல் இன்னிங்ஸோடு முடிந்துவிடும். சிலருக்கு இரண்டாவது. மூன்றாவது வரை தாக்குப் பிடித்தவர் யாருமில்லை. ஆனால், கவுண்டமணி...?
படங்களே இல்லாமல் இதுவரை ஐந்து முறையாவது பீல்டு அவுட் ஆகியிருப்பார் கவுண்டமணி. ஆனால் ஒவ்வொருமுறையும் பீனிக்ஸ் பறவையைப் போல் மீண்டு வந்திருப்பது ஆச்சரியம். மீடியாவின் துணை இல்லாமலே இந்த சாதனையை நிகழ்த்திக் காட்டியவர் அவர் என்பது ஆச்சரியத்தின் அளவை கூட்டும்.
சமீபகாலமாக கவுண்டமணி எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. கடைசியாக அவரது நடிப்பில் வெளிவந்த படம் சத்யராஜின் தங்கம். அதன் பிறகு பல மாதங்கள் கழித்து, வரும் மூன்றாம் தேதி பொள்ளாச்சி மாப்ளே ரிலீஸாகிறது. சத்யராஜ் நடித்திருக்கும் இந்தப் படத்தின் அட்ராக்சனே கவுண்டர்தான்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து விரைவில் வெளிவரயிருக்கும் ஜக்குபாயிலும் கவுண்டர் காமெடி செய்திருக்கிறார். படத்தில் சரத்துக்கு உதவி செய்யும் நண்பராக நடித்திருப்பதாக யூனிட்டிலிருந்து கசிந்த தகவல் சொல்கிறது.
இந்த இரு படங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் கவுண்டரின் கொடி உயரப் பறக்க அதிக சாத்தியமுள்ளது. கவுண்டரின் ரசிகர்களுக்கு இது கற்கண்டு செய்தி.

No comments:
Post a Comment