தனுஷ் - வெற்றி மாறன் கூட்டணியில் உருவாகும் ஆடுகளம் படத்திலிருந்து நடிகை த்ரிஷா விலகி விட்டதாகக் கூறப்படுகிறது. ஆனாலும் இன்னும் இந்தச் செய்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
பெரும்பாலும் தெலுங்குப் படங்களுக்கே முன்னுரிமை கொடுத்து வருகிறார் த்ரிஷா. தமிழில் சிம்புவுடன் விண்ணைத் தாண்டி வருவாயா எனும் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் நடிக்கும்போது த்ரிஷாவுடன் சிம்பு மிகவும் நெருக்கமாகி விட்டதாகவும், இருவரும் காதலிப்பதாகவும் செய்திகள் வந்தன.
வழக்கம்போல சிம்பு மவுனம் காக்க, த்ரிஷா மட்டும் மழுப்பலாக பதில் கூறி வருகிறார். வதந்திகள் எனக்குப் புதிதல்ல என்றும், சிம்புவுடன் காதலா இல்லையா என்று சொல்ல மாட்டேன் என்றும் கூறிவருகிறார் த்ரிஷா.
இந்த நிலையில், தனுஷுடன் ஆடுகளம் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் த்ரிஷா. இந்தப் படத்திலிருந்து இப்போது விலகி விட்டதாகக் கூறப்படுகிறது.
தனுஷுடன் நடிப்பதை சிம்பு விரும்பாததால்தான் த்ரிஷா விலகி விட்டார் என்றும் சிலர் கூறுகின்றனர்.
No comments:
Post a Comment