Showing posts with label சூர்யா. Show all posts
Showing posts with label சூர்யா. Show all posts

Thursday, July 2, 2009

சம்பளத்தில் 10 சதவீதம் ஏழைகளுக்கு ஒதுக்குவேன் -சூர்யா


“நடிகர் சூர்யா “அகரம்” பவுண்டேஷன் மூலம் ஏழைகளுக்கு உதவிகள் வழங்கி வருகிறார். மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை, பள்ளிக்கூடங்கள் தத்தெடுத்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளார். அடுத்து சம்பளத்தில் ஒரு தொகையை ஏழைகளுக்கு ஒதுக்கவும் முடிவு செய்துள்ளார்.

இந்தியாவில் உள்ள ஏழைகளுக்கு உதவும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் நிதி திரட்டும் நிகழ்ச்சிக்கான அறிமுகவிழா சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்று சூர்யா பேசும்போது மேற்கண்ட தகவலை தெரிவித்தார். சூர்யா கூறியதாவது:-

எனது அடுத்த படத்தில் இருந்து சம்பளத்தில் 10 சதவீதத்தை ஏழைகளுக்கு வழங்குவேன். அந்த தொகையை தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் அளிப்பேன். அதன் மூலமாக ஏழை எளியவர்கள், ஆதரவற்றோர் போன்றோருக்கு அந்த பணம் செலவிடப்படும்.

மாதத்துக்கு ஒரு தடவை தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் நேரத்தை செலவிடுவேன்.

“கலைஞரின் பாராட்டு எனக்கு எனர்ஜி” -முதல்வர் விழாவில் சூர்யா உருக்கம்!


நீயின்றி நானில்லை படத்தின் துவக்கவிழா.... கோடம்பாக்கமே களை கட்டியிருந்தது! முதல்வர் கலைஞரின் கதை, மற்றும் திரைக்கதை, வசனத்தில் உருவாகும் இப்படத்தை இளவேனில் இயக்குகிறார்.

ஏ.வி.எம் ஸ்டுடியோ வளாகத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொள்ள வந்த முதல்வரை ஃபெப்சி அமைப்பை சேர்ந்த பல்வேறு பிரிவினர் மேள தாளங்களுடன் வரவேற்றார்கள். மேடையில் இருந்தபடியே ஃபெப்சி அலுவலகத்தின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார் கலைஞர். முன்னதாக பேசிய திரையுலக பிரமுகர்கள் அனைவரும், கலைஞருக்கு சினிமா தாய் வீடு என்று வர்ணித்தார்கள். இங்குள்ள பலர் தேர்தல் நேரத்தில் அவரை காயப்படுத்தியதாகவும், அவற்றையெல்லாம் பொருட் படுத்தாமல் தொடர்ந்து அவர் திரையுலகத்திற்கு நல்லது செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்கள். தயாரிப்பாளர் சங்க தலைவர் இராம.நாராயணன் பேசும்போது, “இசைத்தட்டில் ஊசி குத்திக் கொண்டிருந்தாலும், அது இசையைதான் பாடுமே தவிர, வசை பாடாது. அப்படிப்பட்டவர் கலைஞர்” என்று கூறினார்.

இறுதியாக பேசிய முதல்வர், “சில பேர் என்னை காயப்படுத்திவிட்டதாக இங்கே பேசியவர்கள் குறிப்பிட்டார்கள். காயப்படுவதால் நான் வருத்தப்பட மாட்டேன். உடம்புக்கே பெயர் காயம்தான். இந்த காயத்தில் இன்னொரு காயம் பட்டால் என்ன ஆகிவிடப் போகிறது? ஆகவே காயத்தை நான் பெரிது படுத்துவதில்லை. இன்றைக்கு காயப்படுத்தியவர்கள் இன்னும் பத்து நாட்கள் கழித்து அதற்கு மருந்து போட வருவார்கள் என்று எனக்கு தெரியும். மருந்து போட வருபவர்களை விருந்து வைத்து நாம் வாழ்த்த வேண்டுமே தவிர, நாம் பதிலுக்கு பதில் காயப்படுத்துவது நல்லதல்ல” என்றார்.

“என்னுடைய முதல் படமான நேருக்கு நேர் படத்தை பார்த்துவிட்டு என்னை வாழ்த்தியிருந்தார் முதல்வர். அவரிடமிருந்து ஒரு கடிதம் வாங்கி விளம்பரத்தில் போடுவதற்காக காத்திருந்தோம். முதல் நாள் இரவு படத்தை பார்த்தவர், மறுநாள் விடியற்காலை நாலரை மணிக்கே போன் செய்து கடிதம் தயாராக இருப்பதாக சொன்னார். அவரது உழைப்பும் சுறுசுறுப்பும் நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம். அன்று அவரது பாராட்டு எனக்கு எனர்ஜியாக இருந்தது. ஏனென்றால் நான் குழம்பி போயிருந்த நேரம் அது” என்றார் நடிகர் சூர்யா.

முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா

a_surya_0002.jpgக‌ஜினியை தொடர்ந்து மீண்டும் சூர்யா - ஏ.ஆர்.முருகதாஸ் ஒன்றிணைகிறார்கள். இவர்கள் இணையும் படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் தயா‌ரிக்கிறது.

இந்தி க‌ஜினிக்குப் பிறகு பாலிவுட்டில் படம் இயக்க முருகதாஸுக்கு ஏகப்பட்ட அழைப்புகள். முருகதாஸும் ‌ஷாருக்கானை சந்தித்து கதை கூறினார். கதை ‌ஷாருக்கிற்கு பிடித்திருந்தாலும் உடனே நடிக்க முடியாத நிலை. கரண் சூஜாஹ‌ரின் மை நேம் இஸ் கான், பர்கான் அக்த‌ரின் டான் இரண்டாம் பாகம் என இரு படங்கள் ‌ஷாருக்கின் கைவசம் உள்ளது. இவற்றை முடித்த பிறகே புதிய படம் குறித்து அவர் யோசிக்க முடியும்.

இந்த இடைவெளியில் வேறு நடிகரை வைத்து படம் இயக்க முருகதாஸ் தீர்மானித்துள்ளார். அனேகமாக அந்த ஹீரோ சூர்யாவாக இருப்பார். தமிழில் தயாராகும் அந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலின் தயா‌ரிக்கிறார்.

தற்போது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ஆதவன் படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இந்தப் படத்தையும் உதயநிதி ஸ்டாலினே தயா‌ரிப்பது குறிப்பிடத்தக்கது. ஆதவனைத் தொடர்ந்து ஹ‌ரியின் சிங்கத்தில் நடிக்கிறார் சூர்யா. இந்த இரு படங்களுக்குப் பிறகு அவர் முருகதாஸின் இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கமலுக்கு கலைஞர் தந்த முத்தம்


அரசியல் விழாவாக இருந்தாலும், சினிமா விழாவாக இருந்தாலும் கலைஞருக்கு கூடும் கூட்டம் திருவிழாதான். 'நீயின்றி நானில்லை’ தொடக்க விழாவிலும் அதனைக் காணமுடிந்தது.

கருணாநிதி கதை, வசனம் எழுத இளவேனில் இயக்கும் படம் ‘நீயின்றி நான் இல்லை’. உதய்கிரண், மீரா ஜாஸ்மின், கார்த்திகா நடிக்கும் இப்படத்தின் தொடக்க விழா, ஏவி.எம்.ஸ்டுடியோவில் நடந்தது. மேள தாளம் முழங்க பெப்சி தொழிலாளர்கள் கலைஞரை வரவேற்றனர்.
கமல், சூர்யா, சிவக்குமார், விவேக், இசையமைப்பாளர் தேவா என மேடையை நிறைத்தனர் நட்சத்திரங்கள். படத்தை தொடங்கி வைத்து கருணாநிதி பேசியபோது,

“இந்த விழாவில் தம்பி கமலஹாசன் பேசும்போது, “தமிழை உங்களிடம் கற்றுக் கொண்டோம்” என்று குறிப்பிட்டார். நான் எழுதிய உரையாடல்களைத்தான் இன்னமும் நடிப்புத் துறைக்குள் வருபவர்கள், பேசிக்காட்டி, அந்தத் துறையிலே புகழ் பெருகிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.

கமலஹாசனை சின்னஞ்சிறுபிள்ளையாக தமிழ் பேசியதிலிருந்து இன்றைக்கு பத்து அவதாரங்கள், பன்னிரண்டு அவதாரங்கள் என்று அவர் எடுத்து, உலகத் திரைப்படச்சந்தையில் தனக்குள்ள கீர்த்தியை நிலை நாட்டியிருக்கின்ற இந்தகாலம் வரையில் அவரை நான் நேசிப்பவன்.
ஒரு நாள் என்னுடைய வீட்டு வேலைக்காரபையன் மேலே ஓடி வந்து, மாடியில் எழுதிக் கொண்டிருந்த என்னிடம் உங்களைப் பார்க்க ஒரு அம்மா வந்திருக்கிறார். என்று சொன்னான். நான் எழுதிக்கொண்டிருந்த அறையை விட்டு வெளியே வந்து-மாடித் தாழ்வாரத்திலே பார்த்தால், உள்ளபடியே ஒரு அம்மா உட்கார்ந்திருந்தார்.வியப்புற்று நான், நீங்கள் யார், எங்கே வந்தீர்கள்? என்று கேட்டபோது, என்னைத் தெரியவில்லையா, என்று கமல் என்னைப் பார்த்து கேட்டார்.

அந்த அளவுக்கு அவ்வை சண்முகியில் அந்த ஒப்பனை இருந்தது மறுபடியும், “தசாவதாரம்” படத்திலே கூட நான் பார்த்தேன். அந்தப் பாத்திரத்தை எண்ணாமல், பாத்திரத்துக்குள் இருக்கின்ற கமல் என்கின்ற கலைஞரை நேசிக்கின்ற அடையாளமாக தொட்டிழுத்து, முத்தம் கொடுத்து அனுப்பி வைத்தேன்.

இந்த கதையினுடைய (‘நீயின்றி நானில்லை’) இழை என்னவென்றால், பெண்ணுரிமை, பெண்ணுக்காக மகளிர் முன்னேற்றத்துக்காக பாடுபடுகின்ற அல்லது பாடுபடுவதாகச் சொல்லிக் கொள்கிற ஒரு கதாநாயகனின் கதை. அதிலே ஏற்படுகின்ற விளைவு, நெளிவுகள், சுழற்சிகள் இவைகள் எல்லாம் இந்த கதையிலே பல காட்சிகளிலே அமைக்கப்பட்டிருக்கிறது.” என்றார்.

ஜோ..ஜோ.. சூப்பர் சூர்யா !

ஜோ.. ஜோ ..சூர்யா சூப்பர் சூர்யா என்கிறது இளைய சினிமா உலகம். என்னாச்சு என்று விசாரித்தால் சூர்யா சூப்பர்தாங்க. சஸ்பென்ஸ் தாங்கமுடியல்லையா..? விசயம் இதுதாங்க. தமிழச்சினிமாவில் ஒரு படத்துக்கா தான் வாங்கும் சம்பளத்தின் பத்து வீதத்தை, வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் மக்களுக்குக் கொடுக்கப் போவதாக அறிவித்திருக்கின்றார் சூர்யா.

ஏற்கனவே பல நற்பணிகளுக்கு தனது அகரம் பவுண்டேஷன் மூலம் உதவி வரும் சூர்யா, தற்போது புதிதாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சென்னை பார்க் ஹோட்டலில் 'கிவ் இண்டியா' இணையதள‌ம் நடத்திய விழாவொன்றில், நடிகர் சூர்யா, நடிகை ஸ்ரேயா, உள்பட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய போதே தனது அடுத்தப் படத்திலிருந்து சம்பளத்தில் பத்து சதவீதத்தை ஏழைகளுக்கு‌த் தருவேன் என சூர்யா அறிவித்தார். சூர்யாவின் இந்த அறிவிப்பைக் கேட்டதும் அரங்கில் பலத்த கைத்தட்டல் எழுந்தது. தான் அளிக்கிருக்கும் இவ் உதவித் தொகையை, தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் வழியாக ஏழை எளியவரை சென்றடையும் வழி ஏற்படும் எனவும் தெரிவித்தார். அத்துடன் மாதந்தோறும் ஒவ்வொரு தொண்டு நிறுவனத்துடன் இணைந்து கொள்ளவிருப்பதாகவும் தெரிவித்தார்.

Monday, June 29, 2009

சிம்புவின் சீக்ரெட் லிஸ்ட்


என்னத்த க‌ண்ணையாவின் வரும்... ஆனா வராது... காமெடியின் நிலையில் இருக்கிறது போடா போடி. படம் வரும் என்கிறார் படத்தின் இயக்குனர். வராது என்கிறார்கள் ஹீரோ சிம்பு தரப்பில். நடுவில் வில்லங்கமாக வந்திருக்கிறது வாலிபன் படம்.

நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயா‌ரிப்பில் சிம்பு நடிப்பதாகக் கூறப்படும் வாலிபன் படம் குறித்தும் பல வதந்திகள். அப்படியொரு ப்ராஜெக்டே இல்லை என்கிறார்கள் சிலர். சிம்புவும் இதுகுறித்து உறுதியாக எதையும் கூறவில்லை. அதேநேரம் வாலிபன் படத்தில் நடிக்கும் ஹீரோயினை தேர்வு செய்ய முழுவீச்சில் இறங்கியிருக்கிறார் சிம்பு.

சிம்புவின் முதல் சாய்ஸ் இலியானா. அ‌ஜித், விஜய், சூர்யா, விக்ரம்... ஏன் ர‌ஜினியுடனேயே நடிக்க மறுத்தவர் இலியானா. அவரை எப்படியாவது வாலிபனில் நடிக்க வைப்பது என முயன்று வருகிறார் சிம்பு. அவர் ஒத்து வராதபட்சத்தில் சினேகா உல்லால், அனுஷ்கா என வேறு சிலரையும் லிஸ்டில் சேர்த்துக் கொண்டிருக்கிறார்.

விண்ணைத் தாண்டி வருவாயா முடிந்த பிறகு சிம்பு படத்தில் நடிக்குப் போகும் அதிர்ஷ்டசாலி யார் என்பது தெ‌ரிந்துவிடும்.