ஜோ.. ஜோ ..சூர்யா சூப்பர் சூர்யா என்கிறது இளைய சினிமா உலகம். என்னாச்சு என்று விசாரித்தால் சூர்யா சூப்பர்தாங்க. சஸ்பென்ஸ் தாங்கமுடியல்லையா..? விசயம் இதுதாங்க. தமிழச்சினிமாவில் ஒரு படத்துக்கா தான் வாங்கும் சம்பளத்தின் பத்து வீதத்தை, வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் மக்களுக்குக் கொடுக்கப் போவதாக அறிவித்திருக்கின்றார் சூர்யா.
ஏற்கனவே பல நற்பணிகளுக்கு தனது அகரம் பவுண்டேஷன் மூலம் உதவி வரும் சூர்யா, தற்போது புதிதாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சென்னை பார்க் ஹோட்டலில் 'கிவ் இண்டியா' இணையதளம் நடத்திய விழாவொன்றில், நடிகர் சூர்யா, நடிகை ஸ்ரேயா, உள்பட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய போதே தனது அடுத்தப் படத்திலிருந்து சம்பளத்தில் பத்து சதவீதத்தை ஏழைகளுக்குத் தருவேன் என சூர்யா அறிவித்தார். சூர்யாவின் இந்த அறிவிப்பைக் கேட்டதும் அரங்கில் பலத்த கைத்தட்டல் எழுந்தது. தான் அளிக்கிருக்கும் இவ் உதவித் தொகையை, தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் வழியாக ஏழை எளியவரை சென்றடையும் வழி ஏற்படும் எனவும் தெரிவித்தார். அத்துடன் மாதந்தோறும் ஒவ்வொரு தொண்டு நிறுவனத்துடன் இணைந்து கொள்ளவிருப்பதாகவும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment