Showing posts with label சென்சார். Show all posts
Showing posts with label சென்சார். Show all posts

Wednesday, June 24, 2009

நாடோடிகளை பாராட்டிய சென்சார்

சுப்பிரமணியபுரத்துக்குப் பிறகு சசிகுமார் நடித்திருக்கும் படம் நாடோடிகள். முதல் படத்தில் முரட்டுத்தனமான வேடத்தில் நடித்தவர் நாடோடிகளில் காதல் நாயகனாகியிருக்கிறார். படத்தை இயக்கியிருப்பவர் சுப்பிரமணியபுரத்தில் வில்லனாக நடித்திருந்த சமுத்திரக்கனி.

நண்பனின் நணபன் நமக்கும் நண்பன் என்ற கருத்தை மையமாக வைத்து நாடோடிகள் தயாராகியுள்ளது. பல மாவட்ட பாஷைகள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. வருகிற 26 ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது.

சென்வாரம் படம் தணிக்கைககுழுவுக்கு திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்த தணிக்கைக்குழு உறுப்பினர்கள் படத்தின் இயக்குனர் சமுத்திரக்கனியையும், சசிகுமாரையும் வெகுவாக பாராட்டினர். வித்தியாசமான கதை, படம் நிச்சயம் வெற்றி பெறும் என அப்போது அவர்கள் தெ‌ரிவித்தனர்.

படத்தின் எந்த‌க் காட்சியும் சென்சா‌ரின் கத்தி‌ரிக்கு இரையாகவில்லை என்பது முக்கியமான செய்தி. மேலும், அனைவரும் பார்க்கத் தகுந்த யு சான்றிதழை படத்துக்கு தணிக்கைக் குழு வழங்கியுள்ளது.

வயகராவுக்கு தடை

சென்சார் எது எதுக்கு தடை சொல்லும் என்று கூற முடியாது. வேலுபிரபாகரனின் டாப்லெஸ் படத்துக்கு சான்றிதழ் தந்திருக்கும் சென்சார், வயாகரா என்ற வார்த்தைக்கு தடை சொல்லியிருக்கும் அதிசயம் தமிழ் சினிமாவில் நடந்திருக்கிறது.

டூயட் என்ற பெய‌ரில் படுக்கையறை மூவ்மெண்டைதான் அனேக படங்கள் அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றன. அவற்றை மவுனமாக அனுமதித்துக் கொண்டிருக்கும் சென்சார் வைகை படத்தின் விஷயத்தில் மட்டும் கறாராக நடந்து கொணடிருக்கிறது.

எண்பதுகளில் மதுரை அருகே நடந்த காதல் கதையை பின்னணியாகக் கொண்டு தயாராகியிருக்கிறது வைகை. அந்த காதல் ஜோடியாக பாலா, விசாக நடித்துள்ளனர். விசேஷம் என்னவென்றால், அந்த நிஜ ஜோடி இன்னும் உயிருடன் இருக்கிறது. படத்தில் அவர்களையும் நடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் சுந்தர பாண்டியன்.

பிபி‌ஜி என்டர்பிரைசஸ் சார்பில் பிபி‌ஜி குமார், பிபி‌ஜிடி சங்கர் வைகையை தயா‌ரித்துள்ளனர். படத்தைப் பார்த்த சென்சா‌ர், படத்தில் வரும் வயாகரா என்ற வார்த்தையை ஆபாசம் என்று நீக்கியது. மேலும், சண்டாளன் என்ற வார்த்தை சாதியை குறிப்பதாகக் கூறி அதையும் படத்திலிருந்து நீக்கியது.

சென்சார் செயல்பாடுகளில் ஒரே ஆறுதல், இந்த எடிட்டிங்குக்குப் பிறகு ஏ சான்றிதழ் தராமல், அனைவரும் பார்க்கும் யு சான்றிதழ் வழங்கியுள்ளது. விரைவில் படம் திரைக்கு வருகிறது.