சுப்பிரமணியபுரத்துக்குப் பிறகு சசிகுமார் நடித்திருக்கும் படம் நாடோடிகள். முதல் படத்தில் முரட்டுத்தனமான வேடத்தில் நடித்தவர் நாடோடிகளில் காதல் நாயகனாகியிருக்கிறார். படத்தை இயக்கியிருப்பவர் சுப்பிரமணியபுரத்தில் வில்லனாக நடித்திருந்த சமுத்திரக்கனி.
நண்பனின் நணபன் நமக்கும் நண்பன் என்ற கருத்தை மையமாக வைத்து நாடோடிகள் தயாராகியுள்ளது. பல மாவட்ட பாஷைகள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. வருகிற 26 ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது.
சென்ற வாரம் படம் தணிக்கைக் குழுவுக்கு திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்த தணிக்கைக்குழு உறுப்பினர்கள் படத்தின் இயக்குனர் சமுத்திரக்கனியையும், சசிகுமாரையும் வெகுவாக பாராட்டினர். வித்தியாசமான கதை, படம் நிச்சயம் வெற்றி பெறும் என அப்போது அவர்கள் தெரிவித்தனர்.
படத்தின் எந்தக் காட்சியும் சென்சாரின் கத்திரிக்கு இரையாகவில்லை என்பது முக்கியமான செய்தி. மேலும், அனைவரும் பார்க்கத் தகுந்த யு சான்றிதழை படத்துக்கு தணிக்கைக் குழு வழங்கியுள்ளது.

No comments:
Post a Comment