Wednesday, June 24, 2009

விகடனுக்கு நன்றி + அச்சு ஆவணங்களில் இருந்து எழுத்துகளை பிரித்தெடுக்க

கல்லூரி இறுதி ஆண்டுகளில் ப்ராஜெக்ட் செய்யும் போது பெரும்பாலானோர் ப்ராஜெக்ட் அறிக்கை ( Project Report) முந்தய வருட மாணவர்களின் அறிக்கையை வாங்கி நமக்கு ஏற்றவாறு காப்பி செய்து உபயோகித்து இருப்போம். முந்தய ஆண்டு மாணவர் Word Document (.DOC) ஆக கொடுத்து இருந்தால் சிக்கல் இல்லை. வேண்டுபவற்றை காப்பி பேஸ்ட் செய்து கொள்ளலாம். சிலர் பழைய ப்ராஜெக்ட் புத்தகத்தை தூக்கி கொடுப்பர். அனைத்தையும் டைப் செய்து முடிப்பதற்குள் ஒரு வழியாகி விடும்.

சில ஸ்கேன் செய்யப்பட்ட கோப்புகள் பட வடிவில் இருக்கும். அவற்றில் உள்ள எழுத்துக்களை, வாக்கியங்கள் நமக்கு சில இடங்களில் உபயோகிக்க தேவைப்படும். அந்நேரத்தில் அவற்றில் டைப் செய்ய வேண்டி இருக்கும். அதே போல் நாளிதழ்கள், பத்திரிக்கைகளில் மற்றும் அச்சு புத்தகங்களில் உள்ள எழுத்துகளை இணையத்தில் ஏற்ற விரும்பினால் அவை முழுவதையும் டைப் செய்ய வேண்டி இருக்கும். அதே போல் பல எழுத்து படைப்புகள் இணையத்தில் பட வடிவில் கிடைக்கும். அதில் உள்ள எழுத்துகளை காப்பி செய்யவோ, எடிட் செய்யவோ நம்மால் முடியாது.

இது போன்ற சந்தர்ப்பங்களில் நமக்கு உதவ TopOCR என்ற இலவச மென்பொருள் இருக்கிறது. இந்த லின்க்கில் சென்று இந்த மென்பொருளை தரவிறக்கி கணினியில் நிறுவி கொள்ளவும்.

நம்மிடம்
டிஜிட்டல் கேமரா அல்லது ஸ்கானர் இருந்தால் போதும். நமக்கு தேவையான அச்சு வடிவத்தை (ப்ராஜெக்ட் ரிப்போர்ட் / அச்சு புத்தக பக்கம்) டிஜிட்டல் கேமரா மூலம் புகைப்படம் எடுத்தோ அல்லது ஸ்கானர் மூலம் ஸ்கேன் செய்தோ பட வடிவமாக (JPG) சேமித்து கொள்ளுங்கள்.

TopOCR மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள். File ---> Open மூலம் நீங்கள் சேமித்து வைத்துள்ள பட வடிவ (JPG) திறங்கள் . வலது புற விண்டோவில் நீங்கள் ஸ்கேன் செய்து வைத்துள்ள படத்தில் உள்ள எழுத்துக்கள் நீங்கள் எடிட் செய்வதற்கு ஏற்றவாறு மாற்றப்பட்டு கிடைக்கும். அவற்றை நீங்கள் காப்பி செய்து Word போன்றவற்றில் உபயோகித்து கொள்ளலாம்.

பழைய புத்தகங்களையோ, அச்சு வடிவங்களையோ கணினிக்கு ஏற்ற எடிட் செய்ய கூடிய எழுத்து வடிவமாக மாற்றுவதில் இந்த மென்பொருள் மிக உபயோகமாக இருக்கும். முழுமையாக டைப் செய்யும் கால விரயத்தை மிச்சம் செய்யும்.

இது ஆங்கில பக்கங்களில் மட்டுமே வேலை செய்கிறது. தமிழில் இது போன்று பொன்விழி என்ற மென்பொருள் இருப்பதாக நண்பர் ஒருவர் பின்னூட்டத்தில் தெரிவித்து உள்ளார். அந்த மென்பொருளுக்கான விபரங்கள் , தரவிறக்கம்செய்வதற்கான லிங்க் இதோ .

டிஜிட்டல் காமெராவை ஸ்கேன்னராக பயன்படுத்துவது எப்படி?

உங்களிடம் ஸ்கேன்ன்னர் இல்லை. ஒரு ஆவணத்தை(Document) ஸ்கேன் செய்ய வேண்டும். உங்களிடம் டிஜிட்டல் கேமரா / நல்ல மொபைல் போன் கேமரா இருக்கிறதா? கவலையை விடுங்கள். நீங்கள் ஸ்கேன் செய்ய வேண்டிய ஆவணத்தை புகைப்படம் எடுத்து கொள்ளுங்கள். Snapter என்ற மென்பொருள் மூலம் ஸ்கேன் காப்பி நீங்கள் பெற்று கொள்ள முடியும்.


இந்த மென்பொருளை இந்த லின்க்கில் சென்று தரவிறக்கி நிறுவி கொள்ளுங்கள். இது பற்றி மேலும் விபரங்களை இங்கே பாருங்கள்.


ஆமாங்க! 10.06.09 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் விகடன் வரவேற்பறை பக்கத்தில் என்னுடைய பிளாக் tvs50.blogspot.com க்கு அங்கீகாரம் கொடுத்து இருக்காங்க. தமிழில் பெயர் பெற்ற முன்னணி இதழில் என் பிளாக்கை பார்த்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. கொஞ்சமும் எதிர் பார்க்கல. விகடனுக்கு மிக்க நன்றி. என் பிளாக்கையும் வந்து படித்து இதை தேர்ந்தெடுத்து வெளியிட்டு இருக்கும் விகடனில் பணி புரியும் விகடன் குழுவினருக்கு கோடி நன்றி. ஆனந்த விகடன் மூலம் வந்து இடுகைகளில் ஆங்காங்கே வாழ்த்தி பின்னூட்டம் இட்டு கொண்டு இருக்கும் அனைவருக்கும் நன்றி.

வாசித்து, Subscribe செய்து , பின்னூட்டம் இட்டு ஊக்கப்படுத்தி உற்சாகமூட்டும் அனைத்து நண்பர்களுக்கும் உளமார்ந்த நன்றிகள். அனைத்து திரட்டிகளுக்கும் அங்கு பார்வையிட்டு , ஓட்டளித்து தட்டி கொடுக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி.

No comments:

Post a Comment