Monday, June 29, 2009

விஜய் 50-வது பட இயக்குனர்


தொல்பொருள் ஆராய்ச்சியெல்லாம்கூட ரொம்ப சுலபம்தான். விஜய்யின் 50-வது பட இயக்குனர் யார்? என்று ரசிகர்கள் துளைத்தெடுத்த கேள்விக்கு விடை கிடைப்பது என்பது அவ்வளவு சுலபமாக படவில்லை. இந்நிலையில் இந்த ரகசியம் உடைந்துவிட்டது.

விஜய்யின் 49-வது படமான 'வேட்டைக்காரனை' இயக்கிவருகிறார் பாபுசிவன். இவரைப்பற்றி எந்த மீடியாவும் கண்டு கொள்ளாத நிலையில் 50-வது படத்தை இயக்கப்போவது யாரென்ற ஆர்வமே ரசிகர்களிடமும் மீடியாக்களிடமும் இருந்தது. பிறந்தநாள் பிரஸ்மீட்டில்கூட இதுபற்றி சொல்லாமல் நழுவினார் விஜய்.

'முறைப்படியாக அறிவிப்பு வெளிவரும்வரை காத்திருங்கள்' என்றார் விஜய். ம்ஹூம் யாரும் காதில் வாங்குவதாயில்லை. 50-வது படத்தை இயக்கப்போவது எஸ்.பி.ராஜ்குமார். 'பொன்மனம்' உள்ளிட்ட பிரபு படங்கள் சிலவற்றை இயக்கிய இவர், தற்போது ஆர்.கே.நடிக்கும் 'அழகர் மலை' படத்தை இயக்கியுள்ளார்.

50-வது படத்துக்கு அனேகமாக 'உரிமைக்குரல்' பெயர் சூட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் ஜோடியாக தமன்னா நடிக்க, மீண்டும் விஜய்யுடன் கைக்கோர்க்கிறார் வடிவேலு. மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வும், நட்சத்திர தேர்வும் நடந்துவரும் இப்படத்தை சங்கிலிமுருகனின் முருகன் சினி ஆர்ட்ஸ் தயாரிக்கிறது.

No comments:

Post a Comment