ஆக்ஷன் கிங் அர்ஜுனின் மூத்த சகோதரரும், கன்னட படத் தயாரிப்பாளர்-இயக்குநருமான கிஷோர் சர்ஜா இன்று காலை மரணமடைந்தார். அவருக்கு வயது 50.
மாரடைப்பு காரணமாக வெங்களூர் மணிபால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கிஷோர், பின்னர் மரணமடைந்தார்.
கிஷோர் கன்னடப் படங்கள் சிலவற்றை இயக்கியுள்ளார். இந்தப் படங்களில் அர்ஜுன் நடித்துள்ளார். தமிழில் படிச்சபுள்ள உள்பட சில படங்களை தயாரித்துள்ளார் கிஷோர்.
சிலி தினங்களுக்கு முன் கிஷோருக்கு கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரை உடனிருந்து கவனித்துக் கொண்டார் அர்ஜுன்.
தீவிர சிகிச்சை மேற்கொண்டும் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.
மனைவி அபர்னா மற்றும் மகன் சூரஜ் உடன் வசித்து வந்தார் கிஷோர். நாளை அவரது உடல் தகனம் பெங்களூரில் நடக்கிறது.
கிஷோருக்கு தமிழ் மற்றும் கன்னடத் திரையுலகம் இரங்கல் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment