Monday, June 29, 2009

பிரபுதேவா-சிம்பு, விக்ரம், தனுஷ் அதிர்ச்சி


பாப் மன்னன் மைக்கேல் ஜாக்சன் மறைவுக்கு இந்தியாவன் மைக்கேல் ஜாக்சன் எனப் புகழப்படும் பிரபுதேவா அதிர்ச்சி தெரிவித்துள்ளார். ஜாக்சனின் ஸ்டைலைத்தான் நான் பின்பற்றி வருகிறேன். அவரது மரணம் எனக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

மைக்கேல் ஜாக்சன் மறைவுக்கு தமிழ்த் திரையுலகினர் பலரும் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.

மைக்கேல் ஜாக்சன் பாணி நடனத்தை இந்தியத் திரையுலகில் அறிமுகப்படுத்தியவர் பிரபுதேவா. அவரது முக்காலா முகாபுலா நடனம், அப்படியே மைக்கேல் நடனத்தை தழுவியது.

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்றும் அழைக்கப்பட்டவர் பிரபுதேவா. அவர் ஜாக்சன் மறைவுக்கு அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரபுதேவா கூறுகையில், மைக்கேல் ஜாக்சன் புகழ்பெற்ற பெரிய மனிதர், சிறந்த பாடகர், நடன மேதை, இசையமைப்பாளர்.

எனக்கு வழிகாட்டி அவர்தான். அவரது நடன ஸ்டைலைத்தான் நான் பிற்பற்றுகிறேன். அவர் மறைந்த அதிர்ச்சியில் இருந்து நான் மீளவில்லை என்று கூறியுள்ளார் பிரபுதேவா.

இதேபோல நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், அகில உலக புகழ்பெற்ற பிரபல நடனக் கலைஞரும், பாப் இசை பாடகருமான மைக்கேல் ஜாக்சன் மறைந்த செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தோம்.

பாப் இசையோடு நடனத்தைக் கலந்து பல புதுமைகளை புகுத்தி அழியாத முத்திரை பதித்த ஒரு மாபெரும் கலை பொக்கிஷம். தமிழ் திரையுலகில் பல நடன நடிகர்கள் அவரின் அடிச்சுவட்டை பின்பற்றி புகழடைந்துள்ளனர்.

உலகத்தின் கலை வரலாற்றில் ஒரு வெற்றிடம் உருவாகியுள்ளதை யாராலும் மறுக்க முடியாது. மாபெரும் கலை வித்தகர்.

மைக்கேல் ஜாக்சனின் மறைவிற்கு தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சார்பாக ஆழ்ந்த அஞ்சலி செலுத்துகிறோம் என்று கூறியுள்ளனர்.

நடிகர் விக்ரம் கூறுகையில், ஜாக்சன் மறைந்த அதிர்ச்சி செய்தி கேட்டு வருத்தமுற்றேன். என்னுடைய தலைமுறை அவருடனேயே வளர்ந்தது.

பிராங்க் சினாட்ரா, எல்விஸ் பிரஸ்லி போன்ற மேதைகளைக் காட்டிலும் பிரபலமானவராக, புகழ் பெற்றவராக விளங்கியவர் ஜாக்சன்.

தமிழ், இந்தி திரையுலக நடனங்களிலும் அவரது தாக்கம் அதிகம் என்றார் விக்ரம்.

இதேபோல சிம்பு, தனுஷ் ஆகியோரும் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.

தனுஷ் கூறுகையில் எப்படி நடிகர்களுக்கு புரூஸ்லி முக்கியாக இருந்தாரோ அதேபோல, நடனத்துக்கு மைக்கேல் ஜாக்சன். நமது நடனங்கள் எல்லாமே ஜாக்சனின் ஸ்டைலைத் தழுவியதுதான்.

எனக்கு வழிகாட்டுபவராக அவர் இருந்தார். படிக்காதவன் படத்தில் அவரது ஸ்டைலைப் பின்பற்றி ஆட முயன்றேன். அவர் பெரிய சகாப்தம். அவர் மரணமடைந்து விட்டார் என்பதை நம்ப முடியவில்லை என்றார்.

No comments:

Post a Comment