Wednesday, June 24, 2009

மொத்தமாக கோப்புகளின் எக்ஸ்டன்சனை மாற்ற

"புது வகையான வைரசால் தனது கணினியில் இருந்த MP3 பாடல் கோப்புகள் எக்ஸ்டென்சன் .mp3 ல் இருந்து .jpg யாக ( analmele.mp3 = analmele.jpg ) மாறி விட்டன. அவற்றை திரும்ப .mp3 யாக மாற்றினால் வேலை செய்கிறது. ஒவ்வொரு கோப்பாக மற்ற வேண்டி உள்ளது. என்னிடம் மொத்தம் 20000 கோப்புகள் உள்ளன. அவற்றை மொத்தமாக எளிதாக jpg இலிருந்து mp3 யாக மற்ற முடியுமா?"

இத்தனை செய்ய பல வழிமுறைகள் உள்ளன. Dos கட்டளைகள் தெரிந்தால் எளிமையான விசயம்தான். படிப்படியாக விளக்குகிறேன்.

1. Start கிளிக் செய்து Run செல்லுங்கள் . அங்கு cmd என்று கொடுத்து OK கொடுங்கள்.

2. command விண்டோ திறக்கும். அங்கே உங்கள் கோப்புகள் எந்த போல்டரில் உள்ளதோ அங்கு மாறி கொள்ள வேண்டும். அதற்கு cd FOLDER PATH கொடுக்க வேண்டும். உதா. cd d:\ayan என்டெர் தட்டவும். D: என்று கொடுத்தால் அந்த போல்டருக்கு மாறி இருப்பீர்கள்.

நீங்கள் விஸ்டா உபயோகிப்பாளராக இருந்தால் கோப்புகள் உள்ள போல்டரில் Shift + Right Click செய்து Open command window here என்பதனை தேர்வு செய்து கொள்ளவும்.

3. அடுத்து rename கட்டளை மூலம் உங்கள் கோப்புகளின் எக்ஸ்டன்சனை மாற்றி கொள்ளலாம். உதா. ren *.jpg *.mp3 என்டர் தட்டவும். இதன் மூலம் jpg எக்ஸ்டன்சன் உள்ள அனைத்து கோப்புகளும் mp3 எக்ஸ்டன்சனுக்கு மாறி இருக்கும்.


DOS கட்டளைகளில் வேலை பார்ப்பது கடினமாக இருப்பதாக நீங்கள் கருதினால், Extension Renamer என்ற மென்பொருள் மூலம் செய்து கொள்ள முடியும். அந்த இலவச மென்பொருளை இங்கே கிளிக் செய்து தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள்.

Select Directory மூலமாக கோப்புகள் உள்ள போல்டரை தேர்வு செய்து கொள்ளுங்கள். sub directory ல் உள்ள கோப்புகளையும் மாற்ற விரும்பினால் அந்த ஆப்சனை டிக் செய்து கொள்ளுங்கள். From என்பதில் *.jpg, To என்பதில் *.mp3 என்று கொடுத்து விட்டு "Go" கிளிக் செய்து கொள்ளுங்கள். அவ்வளவுதான் உங்கள் அனைத்து கோப்புகளும் எளிதில் எக்ஸ்டென்சன் மாற்ற பட்டு விடும்.

நல்ல ஆண்டி வைரஸ் போட்டு உங்கள் கணினியை பாதுகாத்திடுங்கள்.

No comments:

Post a Comment