கமலா திரையரங்கம் தற்போது இரு திரைகளுடன் ஹைடெக் கலருக்கு மாறியுள்ளது. படவிழாக்களை நடத்த மவுண்ட் ரோடு பக்கம் ஒதுங்கியவர்களின் இப்போதைய சாய்ஸ் கமலா திரையரங்கம்.
காதலில் விழுந்தேன் பி.வி.பிரசாத்தின் எப்படி மனதுக்குள் வந்தாய் படத்தின் துவக்க விழா கமலா திரையரங்கில் நடந்தது. மேயர் மா.சுப்பிரமணியன், தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன், இயக்குனர்கள் சேரன், மிஷ்கின், வி.சேகர், ராஜ்கபூர், விஷ்ணுவர்தன், கே.பாக்யராஜ், பாலாஜி சக்திவேல் மற்றும் காவல்துறை அதிகாரிகள், தொழிலதிபர்கள் என அரங்கு நிறைந்த கூட்டம். இவர்களுடன் கமலா திரையரங்கு உரிமையாளர் வி.என்.சிதம்பரத்தையும் விழாவில் காண முடிந்தது.
படத்தின் திரைக்கதையை பாக்யராஜ் பி.வி.பிரசாத்திடம் அளித்து படத்தை தொடங்கி வைத்தார். ஹீரோவாக நடிக்கும் விஷ்வாவை முருகதாஸ் அறிமுகப்படுத்தினார். விழாவில் சன் பிக்சர்ஸ் தலைமை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனாவும் கலந்து கொண்டார். இதனால் மேடையில் பேசிய சேரன், சன் பிக்சர்ஸ் பசங்க போன்ற நல்ல படங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றார்.
எப்படி மனதுக்குள் வந்தாய் படத்தை இயக்குனர் ஜி.கிச்சா தயாரிக்கிறார். புதுமுகங்கள் விஷ்வா, இர்பான் நடிக்கிறார்கள். ஹீரோயின் தன்வி
No comments:
Post a Comment