அசின் என்பதற்கு தமிழில் என்ன அர்த்தம் வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும். இன்றைய தேதியில் அந்த பெயரின் அர்த்தம் மிஸ் க்ளீன்!
இவரது உதவியாளர் நல்ல முத்துக்குமார் திடீர் மாயமானபோது, பணக்கார நடிகை. பார்க்க கூடாததை பார்த்திட்டான் போலிருக்கு. எங்க ஆற்றிலே மிதக்கிறானோ, எந்த குழியிலே கிடக்கிறானோ என்று வெளிப்படையாகவே முணுமுணுத்தவர்கள் உண்டு. ஆனால், எல்லாவற்றையும் பொய்யாக்கி விட்டு, "அவங்க மேலே தப்பில்லே" என்று நல்ல முத்துக்குமாரே சொல்லும்படி ஆகியிருக்கிறது உண்மை. சத்ய மேவ ஜெயதே!
இத்தனை மாதங்களான இவரை பிடிக்க தனி போலீஸ் படையே தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தது. முத்துக்குமாரின் அக்கவுன்ட்டிலிருந்து பணம் மாயாமாகி வந்த தகவலை தெரிந்து கொண்ட போலீஸ் மேலும் சிறிது பணத்தை போட்டு விட்டு, (பொறியிலே மசால் வடை வைக்கலாம். பணம் வைத்திருக்கிறார்கள் போல) காத்திருந்தது. அவர்கள் நினைத்த மாதிரியே ஏடிஎம் மில் பணத்தை எடுக்க வந்த முத்துக்குமாரை ஒரே லபக்!
பத்திரிகைகளில் வந்த செய்தியை படித்துவிட்டு போலீஸ் தன்னை துன்புறுத்துமோ என்று பயந்து போய் பதுங்கியிருந்தாராம் தம்பி. இத்தனை நாட்கள் பட்ட அலைச்சலுக்கு போலீஸ் தரப்பிலிருந்து பிரசாதம்(?) கொடுத்தார்களா தெரியாது. முறையாக புகார் கொடுத்த நல்ல முத்துக்குமாரின் அம்மா கையில் பிள்ளையை ஒப்படைத்துவிட்டார்கள்.
கையோடு கையாக மும்பைக்கும் போன் செய்து அசினிடம் விஷயத்தை கூறினார்களாம். இனி தனது கர்சீப்பை கூட தானே துடைத்துக் கொள்வார் அசின் என்று நம்பலாம். அது போகட்டும்... இத்தனை நாட்கள் எங்கே பதுங்கியிருந்தாராம் முத்து? அசினை இந்திக்கு கொண்டு போன டைரக்டர் முருகதாஸ் கஸ்டடியில்!
No comments:
Post a Comment