ஆர்யாவின் த ஷோ பீப்பிள் தயாரிப்பு நிறுவனம் படம் தயாரிப்பது தெரியும். த ஷோ பீப்பிளின் முதல் தயாரிப்புக்கு இளையராஜா இசையமைக்கிறார்.
நடிப்பு, பட விநியோகம் என்று இரு துறைகளில் கால் பதித்த ஆர்யா மூன்றாவதாக தயாரிப்பில் ஈடுபடப் போவதாக தெரிவித்திருந்தார். தனது தயாரிப்பு நிறுவனம் புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
சொன்னது போலவே அவரது த ஷோ பீப்பிள் தயாரிக்கும் முதல் படத்தை சுகா இயக்குகிறார். இவர் பாலாவின் அசிஸ்டெண்ட். சுரேஷ் கண்ணன் என்ற தனது பெயரை சினிமாவுக்காக சுகா என சுருக்கியிருக்கிறார்.
அபிஷேக் என்ற புதுமுகம் ஹீரோவாகவும், நாடோடிகள் அனன்யா ஹீரோயினாகவும் நடிக்கின்றனர். இசை இளையராஜா. படத்துக்கு படித்துறை என்ற பெயரை தேர்வு செய்துள்ளார் சுகா.
சொந்தப்பட நிறுவனம் தொடங்கி அதில் புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கும் ஆர்யாவுக்கு ஆளுயர வெல்கம் போர்ட் வைத்து வாழ்த்தலாம்.
No comments:
Post a Comment